Home » Articles » பார்வையை மாற்றுங்கள்; பாதை தெளிவாகும்"

 
பார்வையை மாற்றுங்கள்; பாதை தெளிவாகும்"


admin
Author:

– டாக்டர் G. இராமநாதன்

பார்வையை (Perception) மாற்றும் விதங்களை ஆராயுமுன், ஒரு கதையைப் பார்ப்போம்.

ஒரு முனிவர், தம்முடைய பணிகளை முடித்து, தவத்தில் அமரப் போகும் சமயத்தில், அவருடை இரண்டு சீடர்களும் பல நாட்கள் வெளியிடங்களுக்குச் சென்று விட்டு திரும்பியிருந்தனர்.

முதல் சீடன், ‘குருவே! என்னுடைய பயணம் மிகவும் புனிதமாக இருந்தது.  ஆனால் மிகவும் முக்கியமான பாவச்செயல் ஒன்றைப் பற்றி சொல்ல வேண்டும்ம என்றான் மிக்க பதட்டத்துடன்.

முனிவர், “உங்களுடைய  பயணத்தைப்பற்றி என்னுடைய தவத்தை முடித்துவிட்டு இரவில் பேசலாம். இப்போது தவத்தை தொடருகிறேன்” என்கிறார்.

முதல் சீடன் “குருவே இது உங்களுடைய இரண்டாவது சீடன் பற்றிய முக்கிய செய்தி.  அதை முழுவதும் சொல்ல வேண்டுமானால் சில மணி நேரங்களாகவதுத நீங்கள் தவ்தை ஒதுக்கி வைக்க வேண்டும்”  என்றான். மிக்க ஆதங்கத்துடன்.

முனிவர், “சரி, சீக்கிரம் சொல்!” என்றார். முதல் சீடன், “நாங்கள் ஒரு வாரத்திற்கு முன் ஒரு ஆற்றை கடக்கும்போது நடந்த சம்பவம் அது. ஒரு அழகிய பெண். அவள் தோற்றம்… அவள் உடை..”

இப்படி வர்ணித்துக் கொண்டிருந்தான் சீடன். முனிவர், “சரி நடந்தத்தை மேலே சொல்!”

“உங்களுடைய இரண்டாவது சீடன், அந்தப் பெண்ணைத்தூக்கி, தோளில் சுமந்து, ஆற்றை கடந்து வந்தான். அவளும் இவனைப்பற்றிக்கொண்டே வந்தாள்.  துறவியாக வாழும் உங்கள் சீடன், ஒரு இளம் பெண்ணைத் தூக்கிய மாபெரும் பாவத்ஐ செய்து விட்டான்.  அதைப்பார்த்ததலிருந்து கடந்த ஏழு நாட்களாக எனக்கே உறக்கமில்லை.  மனம் கொதிக்கிறது.  இதைவிட மோசமான செயல் உண்டா?”

முனிவர் இரண்டாவது சீடனைப்பார்த்தார்

“குருவே, நானும் முதல் சீடனும் ஆற்றைக்கடக்க இருக்கும்போது ஒரு பெண் கெஞ்சினாள், “எப்படியாவது என்னைதூக்கி ஆற்றை கடந்து செல்ல உதவுங்கள்.  நான் இரவுக்குள் வீடு செல்லவில்லையேல் எனக்காக எதிர்ப்பார்த்திருக்கும் என் தாய் என்னை இழந்து விட்டதாக உயிர் துறப்பாள்.  அப்படி அவள் இறந்தால், நானும் சாவேன். இந்த ஆற்றைக் கடக்க வேறு வழியுமில்லை” என்று மன்றாடினாள்.

முதல் சீடன், ‘சீ பெண்ணே!  உன்னைப் பார்த்ததே பாவம். உன்னைத் தொட்டுதூக்கினால் நான் மேலும் பாவியாவேன்.  என் முன் நில்லாதே’ என்று விரட்டினான். அவளை ஆற்றை கடக்க உதவினால் இரண்டு உயிர்களை காப்பாற்றிய புண்ணியமாக இருக்கட்டும் என நினைத்து, அவளை கரை சேர்த்தேன்.  ஆனால் அவளை ஒரு சில நிமிடங்களல் கரை சேர்த்து விட்டு மறந்துவிட்டேன்.  அவளைப் பற்றிய உருவம், நிறம், உடை உயரம், என்பதெல்லாம் எனக்கு எதுவும் நினைவில்லை.  ஆனால் முதல் சீடன்தான் அப்போதிலிருந்து அவளை ஒவ்வொரு விதமாக வர்ணித்துத ஏழு நாட்களாக பொறுமிக் கொண்டிருக்கிறான்” என்றான். அமைதியாக.

முனிவர், முதல் சீடனைப் பார்த்து, “அவன் அந்தப் பெண்ணை தூக்கி கரை சேர்த்து ஒரு சில நிமிடங்களே.  மேலும் அவனுக்கு அவளைப் பற்றிய எந்த நினைவும், உணர்வும் இல்லை. அவன் அவளுக்கு உதவும் ஒரு செயலை மட்டுமே செய்திருக்கிறான்.  ஆனால் உனக்கோ கடந்த ஏழு நாட்களாக அவளைப் பற்றிய எண்ணங்களோடு, அவளுடைய நினைவிலேயே இருக்கிறாய்.  ஆகவே நீதான் களங்கப்பட்டவன்!” என்றார்.

நடைமுறையில் கொலை, களவு, லஞ்சம் போன்ற தீய செயலகளை செய்த மனிதர்களையும் பார்க்கிறோம். ஒரு தவறும் செய்யாத அப்பாவி மனிதர்களையும் பார்த்திருக்கிறோம். ஒரு வேளை தீய செயல்களை செய்த மனிதன், தன் தவறுகளையெல்லாம் திருத்தி மனதிற்குள் தெளிவாக இருந்தும், ஒரு பாவமும் அறியாத நல்லவன், எல்லா நேரத்திலும் கவலையிலும், வேதனையிலும், குழப்பத்திலும் இருந்தானேயானால் அவ்விருவரில் உடலாலும், மனத்தாலும் நல்லவனே அதிகம் பாதிக்கப்படுவான்.  சில சமயங்களில், நல்லவர்கள் அவதிபடுவதற்கும், கெட்டவர்கள்கூட நன்றாக வாழ்வதற்கும் இதுவும் ஒரு காரணம் எனலாம்.  ஆகையால் நாம் நல்லவர்களாக வாழ்வது மட்டும் போதாது.  மனதிற்குள் புழுங்கும் பழக்கங்களை விட்டொழிப்பவர்களாக விளங்க வேண்டும்.

இங்கு எளிதில் மனமுடைந்து, குழப்பமடைந்து, மனம் புழுங்கும் சில உதாரணங்களையும் அதன் பின்னனியையும் பார்ப்போம்.

மனதின் வெளிப்பாடுகள் அதன் பின்னணி
1. வாழ்க்கையே சூன்யமாகி விட்டது எப்போதும்  சோதனையே. 1.பிரச்சனைகளை மிகைப்படுத்திப் பார்ப்பதும், நமது திறமையை உணர்ந்து செயல்படாத்தும் இதன் காரணம்.
2. எல்லாம் செய்த பின்பும், மனதில் ஏதோ ஒரு குறை உறுத்திக் கொண்டே இருக்கிறது. 2. குறைகளை மிகைப்படுத்தும் எதிர்மறைக் கண்ணோட்டம்
3. என்னை எல்லோமும் தனிமைப்படுத்திவிட்டார்கள் 3. நம்ப வேண்டியவர்களை சந்தேகிப்பதும் சந்தேகத்திற்குரியவர்களை நம்பி விடுவதன் விளைவுகள்
4. ஏதோ கெட்டது நடக்கும் போலிருக்கிறது 4. மனதின் பயத்தினாலும், மனப் பதட்டமாகி இருக்கும்போதும் இந்த எண்ணங்கள் உண்டாகிறது.
5. மற்றவர்கள் சொன்னதை கேட்டு செயல்பட்டதால்தான் நான் இந்த தவறுக்கு ஆளானேன். 5. தம்முடைய தவறுக்கு, பிறர் மீது பழி சுமத்துதல், மனதின் தளிவின்மை போன்றவற்றின் விளைவு.  தவறை ஒப்புக் கொள்ளும் திறந்த மனமின்மை.
6. எனக்கு மிகவும் இளகிய மனம். எதையுமே தாங்க முடிவதில்லை.  கடந்த காலத்தை மறக்க முடிவதில்லை. 6.  மனதில் அளவற்ற சுமைகளை சேர்த்துக் கொள்ளுதல் பிறர்மீது உள்ள ஆற்றாமை கடந்த கால குறைபாடுகள எளதில் மறக்காமை அதனால் நடைமுறைக்கேற்ப மாற்றிக் கொள்ள இயலாமை போன்றவற்றால் ஏற்படுவது.
7.  நான் நல்லவன். யாரையும் கெடுக்காதவன். எனக்கே பிறருடைய தொல்லைகெல்லாம் வந்து சேர்கிறது. இருக்கின்ற வாழ்க்கையை, வசதியை நிலைப்படுத்தவும், போட்டியான உலகத்திற்கேற்ப ஈடு கொடுக்கவும் திறமையில்லாமை
8. நான் எண்ணியிருப்பது நடந்தால் தான் எனக்கு வாழ்வு இல்லையேல் வாழ்க்கையே வீண் 8. ஏதோ ஒரு அளவுகோளை வைத்துக் கொண்டு, அதை அடைந்தால்தான் வாழ்க்கை என்று எண்ணும் குறுகிய கண்ணோட்டம்
9. என் மீது யாருக்குமே இரக்கமில்லை அனுதாபமில்லை 9. பிறரிடம் அளவிற்கதிகமாக எதிர்பார்த்தல்மற்றவர்கள் தமக்கு கடன்பட்டவர்கள் என நினைத்தல்.
10. என்னை தாழ்த்திய பிறகும் அதைப் பொறுப்பதா?  உயிர் வாழ்வதா? 10. இவ்வாழ்க்கை மற்றவர்களுடன்
11. அவன்மீது அளவு கடந்த பாசம் வைத்து விட்டேன்.  அதனால்தான் அதிகமாக கோபப்பட்டேன். 11. உணர்ச்சியை கட்டுப்படுத்த இயலாமையன் (EMOTIONAL IN STABILITY) வெளிப்பாடு
12. என் கௌரவத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன். 12. மற்றவர்கள்தான் தமக்கு கட்டுப்பட வேண்டும் என எண்ணுதல் அல்லது வீண்பிடிவாதம்.  இவற்றால் ஏற்படுவது.

பொதுவாக  எளிதில் உடையும் மனமுள்ளவர்கள், மனதிற்குள் பொறுமிக் கொண்டிருப்பார்கள்.  ஒரு முக்கிய உண்மையை உணர வேண்டும். இவர்களுடைய உணர்வுகளல்லாம் அனுபத்தின் அடிப்படையிலோ, அறிவுபூர்வமாக ஆராய்ந்து உணர்ந்ததன் அடிப்படையிலோ இல்லாமல் தம்மனதில் பட்டதையே சரி என்று நினைத்துக் கொள்ளுவதால் உண்டாகிறது.

இதன் விளைவுகள்:

இது  போன்ற மனநிலையில் தொடர்ந்து பல நாட்கள், மாதங்கள், வருடங்கள் நீடிக்கும்போது நாம் எந்த மனநிலையை தொடர்ந்தோமோ அதைப் போலவே ஆகிறோம்.

– தொடரும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 1999

சிந்தனைத்துளி
நீங்கள் சிறந்த பெற்றோரா?
ஆழ்மனச் சக்தியைப் பெருக்கி அற்புதச் சாதனைகள் படைப்பது எப்படி?
மெடிக்கல், என்ஜினியரிங் சீட் கிடைக்காதவர்கள் என்ன செய்யலாம்?
உயர்வுக்கு உரிய வழி
எங்கிருந்து துவங்கலாம் தோழரே…
இளைஞனே…
துணிச்சலைத் துணை கொள்ளுங்கள்
கவலையை விடுங்கள்
பார்வையை மாற்றுங்கள்; பாதை தெளிவாகும்"
மனசு விட்டுப் பேசுங்க..
நம்பிக்கையும் நானும்..
உள்ளத்தோடு உள்ளம்