Home » Articles » தன்னம்பிக்கை இதழின் நிறுவனர் டாக்டர். இல.செ. கந்தசாமி

 
தன்னம்பிக்கை இதழின் நிறுவனர் டாக்டர். இல.செ. கந்தசாமி


admin
Author:

தன்னம்பிக்கை இதழின் நிறுவனர் டாக்டர். இல.செ. கந்தசாமி அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி 11.04.99 அன்று கோவை ஆர்.எஸ்.புரம் இன்டக்ரல் யோக இன்ஸ்டிடியூடில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர். பெரு. மதியழகன், தலைமை தாங்கினார்.  நிகழ்ச்சியில் ரூட்ஸ் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுத் துறை மேலாளர் கவிஞர் கவிதாசன் அவர்கள் “புதியதோர் உலகம் செய்வோம்” என்ற தலைப்பிலும், சொல்வேந்தர் அரிமா எஸ்.டி.முகமது யூசுப் அவர்கள் “முயற்சித்தால் முடியாத்து ஒன்றுமில்லை” என்ற தலைப்பிலும், தமிழ்நாடு வெற்றிக் கழகத் தலைவரும் தன்னம்பிக்கை இதழன் சர்குலேசன் மேனஜருமான சக்சஸ் ஜெயச்சந்திரன் அவர்கள் “மனமது செம்மையானால்” என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் கவிஞர் கவிதாசன் அவர்கள் பேசுகையில் சுயமுன்னேற்றக் கருத்துக்களை சிறப்பாக பரப்புபவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இல.செ.க. நினைவு நாள் நிகழ்ச்சியில் “இல.செ.க. விருது” வழங்குவதாக அறிவித்தார்.  அதன்படி இந்த ஆண்டிற்கான இல.செ.க. விருதாக ரூ. 1000/- தன்னம்பிக்கை இதழின் நிர்வாக ஆசிரியர் கி. வேணுகோபால் அவர்களுக்கு வழங்கினார்

முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை கி. வேணுகோபால் வரவேற்க முடிவில் திரு. சு. தண்டபாணி நன்றி கூறினார்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1999

ஆசிரியர் தந்த அதிசய விளக்கு
10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?
உயிரோட்ட மனநிலை
உள்ளத்தோடு உள்ளம்
தன்னம்பிக்கையின் சிந்தனைத்துளிகள்
தன்னம்பிக்கை இதழின் நிறுவனர் டாக்டர். இல.செ. கந்தசாமி
கேள்வி – பதில்
உயர்வுக்கு வழி
சிந்தனைத்துளி
குறிக்கோளைப் பாகுபடுத்திக்கொள்வோம்
தொழில் தரும் தன்னம்பிக்கை
மனிதன் மனிதனாக இருக்க!
தள்ளிப்போடும் மனப்பான்மையைக் கிள்ளிப்போடுவோம்!
முயன்றுதான் பாருங்களே!
வாசகர் கடிதம்