Home » Articles » கேள்வி – பதில்

 
கேள்வி – பதில்


admin
Author:

கேள்வி:

என்னுடைய வாழ்க்கையே தோல்விதான்.  பட்டதாரியான நான் சொந்தத் தொழில்தொடங்இ பத்தாண்டுகளாகியும் முன்னேற்றமில்லை.  பெற்றோர்களும் எனக்குச் சரியில்லை;  மனைவியும் குழந்தைகளும் ராசியில்லை போலும்.  என்ன செய்வது?

பதில்:

வாழ்க்கையின் கோணத்தை நீங்கள் மாற்றியே ஆக வேண்டும். எல்லாவற்றிலும் எதிர்மறையான சிந்தனையே இருக்கிறது.

100 கோடி மக்களுள்ள இந்தியாவில், நீங்கள் 90 கோடி மக்களைவிட உயர்ந்தவர் எனச் சொல்லலாம்.  பட்டபடிப்பு படிக்க வைத்த உங்கள் பெற்றோர்கள் உயர்வானவர்கள்தான்.  சொந்த தொழிலை அமைத்திருக்கிறீர்கள்.  அதனால் நிச்சயம் உங்கள் படிப்பு, தொழில் இரண்டும் உயர்ந்தவைகள்தான்.  குழந்தையில்லாமல் தவிக்கின்ற பல்லாயிரக்கணக்கான செல்வந்தர்களைவிட குழந்தைகளைப் பெற்ற உங்களுக்கு மனைவியும் குழந்தைகளும் ராசியானவர்கள்தான் அல்லவா!

நீங்கள் எதிர்பார்த்த அம்சங்கள் சில நடைபெறாவிட்டதால் எதிலுமே திருப்தியில்லாதவராகி விட்டீர்கள்.

உங்களிடமுள்ள பாசிடிவ் அம்சங்களை வைத்த, மேற்கொண்டு உயர என்னென்ன வழிகள், என சிந்தியுங்கள்.  அதை அடைய உற்சாகமாக செயல்படுங்கள்.  நிச்சயமாக உங்கள் வாழ்க்கை வெற்றியாக மாறிவிடும்;  திருப்தியான மனநிலையை உங்களின் பாசிடிவ் அணுகுமுறையினால் மட்டுமே பெறமுடியும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1999

ஆசிரியர் தந்த அதிசய விளக்கு
10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?
உயிரோட்ட மனநிலை
உள்ளத்தோடு உள்ளம்
தன்னம்பிக்கையின் சிந்தனைத்துளிகள்
தன்னம்பிக்கை இதழின் நிறுவனர் டாக்டர். இல.செ. கந்தசாமி
கேள்வி – பதில்
உயர்வுக்கு வழி
சிந்தனைத்துளி
குறிக்கோளைப் பாகுபடுத்திக்கொள்வோம்
தொழில் தரும் தன்னம்பிக்கை
மனிதன் மனிதனாக இருக்க!
தள்ளிப்போடும் மனப்பான்மையைக் கிள்ளிப்போடுவோம்!
முயன்றுதான் பாருங்களே!
வாசகர் கடிதம்