Home » Articles » வாசகர் கடிதம்

 
வாசகர் கடிதம்


admin
Author:

தற்கொலைகள் ஏன்?  விழிப்புணர்வு மிக்க வித்தியாசமான அறிவுக்கு விருந்தாக இருந்தது. தன்னம்பிக்கையில் தஞ்சை ஹேமலதாவின் கட்டுரை தொடரட்டும்.

அ. கீதா, திருச்சி

பொள்ளாச்சி நசனின் அறிவோ ஆறு கவிதை அட்டையை வெகுவாக அலங்கரித்து.  கண் பார்வை இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கையும், ஆர்வமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம். என்பதை செயல்படுத்தி வரும் மணிகண்டன் அவர்களுக்கு பாராட்டு.

ஆசிரியர், தாழம்பு மாத இதழ்.

முதன்முறையாக தன்னம்பிக்கை படித்தேன்.  நல்ல கனியில் எந்தப் பகுதியும் சுவையாக இருக்கும். அது போல தன்னம்பிக்கையின் எல்லா பகுதியும், பயனுள்ளதாகவும், வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர்களுக்கு ஆசானாகவும் இருக்கிறது.

எஸ். ரத்தினக்குமார், ஹோசூர்

டாக்டர் இல.செ.க. வின் ஏப்ரல் 99 சிந்தனை படித்தேன். படித்து முடித்ததிலிருந்து உரிய காலத்தில் பணிக்கும் மன்ற செயலையும் செய்ய தொடங்கிவிட்டேன். தொடரட்டும் டாக்டர் இல.செ.கவின் சிந்தனை.
ஆர். பாஸ்கரன், கடலூர்

ஏப்ரல் இதழ் கண்டேன்.  முன் அட்டை கவிதை முதல் பின் அட்டை நூல் திறனாய்வு வரை அனைத்தும் அருமை.  இதழ் வரவர தரமானதாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது. நண்பருக்கு கடிதம், தற்கொலைகள் ஏன்? இரண்டும் அருமை.  ஒருவரிச் சிந்தனை பயனுள்ளதாக உள்ளது.

K. கனராஜ்,

கொளத்துப்பாளையம்

பொள்ளாச்சி நசனின் கவிதை (அட்டை) அட்டகாசமான கருத்து. “வெற்றியாளனின் ஆவதற்கு தனித் திறமை மட்டும் போதாது, நம் உறவினர், நண்பர்கள் ஆகியோருடன் உறவை நல்ல நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற தலையங்க வரிகள் நிதர்சன உண்மை.  பார்வையற்ற மணிகண்டனின் தன்னம்பிக்கை யாராலும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்துகிறது.

கே. கண்ணன், மதுக்கரை


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1999

ஆசிரியர் தந்த அதிசய விளக்கு
10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?
உயிரோட்ட மனநிலை
உள்ளத்தோடு உள்ளம்
தன்னம்பிக்கையின் சிந்தனைத்துளிகள்
தன்னம்பிக்கை இதழின் நிறுவனர் டாக்டர். இல.செ. கந்தசாமி
கேள்வி – பதில்
உயர்வுக்கு வழி
சிந்தனைத்துளி
குறிக்கோளைப் பாகுபடுத்திக்கொள்வோம்
தொழில் தரும் தன்னம்பிக்கை
மனிதன் மனிதனாக இருக்க!
தள்ளிப்போடும் மனப்பான்மையைக் கிள்ளிப்போடுவோம்!
முயன்றுதான் பாருங்களே!
வாசகர் கடிதம்