Home » Articles » உயிரோட்ட மனநிலை

 
உயிரோட்ட மனநிலை


இராமநாதன் கோ
Author:

“எனக்கு எப்போதும் பளிச்சென்று முகம் இருக்க வேண்டும்;  என் தோற்றம் வசீகரமாக இருக்க வேண்டும்.  எல்லா நேரங்களிலும் உற்சாகமான நிலை வேண்டும்”.  இந்த எதிர்பார்ப்புகளைக் கொண்டு, பிளாஸ்டிக் சர்ஜரி டாக்டரிடம் செல்கிறார் சிவராமன்.

‘என்னுடைய முகத்தில் உள்ள வடுதான் என்னுடைய தோற்றத்தின் அழகைக் குறைக்கிறது.  அதைச் சரி செய்யுங்கள்!’ என்றார்.

முகத்திலிருந்த தழும்பு பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சையில் மறைக்கப்பட்டது. ஏனோ சிவராமனுக்கு இப்போதும் திருப்தி இல்லை.  அவர் எதிர்பார்த்த பளிச்சென்ற முகம் கிட்டவில்லை.

தாடையில் தொங்கும் சதையைத்தான் அதற்குத் தடையாக நினைத்தார். அடுத்த பிளாஸ்டிக் சர்ஜரியில் அதுவும் சரியாகிவிட்டது.

அப்போதும் முகத்தில் பிரகாசமில்லை.  உற்சாகமில்லை.  எதையோ பறிகொடுத்த தோற்றம்.  பொலிவிழந்த முகம்.  இதன் காரணம் என்ன?  அவருடைய மனநிலைதான்.

குழந்தையாகப் பிறக்கும் போது எல்லோரும் உற்சாகத்துடன் தான் பிறந்தோம். முகம் பளிச்சென்று தான் இருந்தது.  வளர வளர, நமது உயிரோட்டமான மனநிலையை எங்கேயோ தொலைத்துவிட்டோம்.

எப்படி நடந்தது?

ஒரு குழந்தை விளையாடிக்கொண்டிருக்கும்போது கண்ணாடியை உடைத்து விடுகிறது.  உடனே அப்பா திட்டுகிறார். “டே முட்டாள்!  கையை வச்சிட்டு கம்முனு கிட.”

உடனே, குழந்தையின் மனத்திற்குள் ஒரு குற்றவுணர்வு. ‘ஏதோ பெருங்குற்றம் இழைத்து விட்டோம் போலிருக்கிறது’ என்ற எண்ணத்தில், அடுத்து எதைச் செய்வதிலும் பயம்  அதை மீறிச் செய்தாலும், அளவற்ற தயக்கம். இப்படியே தொடர்ந்து ஒவ்வொரு சிறு தவறுகளிலும், பிறரால் உண்டாக்கப்பட்ட குற்றவுணர்வுகள், மனத்திற்குள்ள் படிப்படியாக உற்சாகத்தைக் குறைக்கிறது. உயிரோட்டத்தை மாற்றுகிறது.

இத்துடன், வாழ்க்கையில் உண்டாகும் பல சம்பவங்களான விருப்பமில்லாததை செய்யவேண்டிய கட்டாயம்.  விரும்பியதை செயல்படுத்த முடியாத நிர்பந்தம். பிறருடைய உறவுகளால் ஏற்படும் வேதனைகள், சந்திக்கின்ற தோல்விகள், நமக்குள்ள குறுகிய மனப்பான்மை, பேராசை, சோம்பேறித்தனம் இவையனைத்தும் சேர்ந்து, நடைபிணமான வாழ்க்கையை உண்டாக்கிவிடுகின்றன.

வெற்றியின் அடிப்படை என்ன? எந்த வெற்றியும் செயலின் மூலம் கிடைக்கிறது.  செயலை நிர்ணயிப்பது நம்முடைய நம்பிக்கை.  நம்பிக்கையின் மூல அம்சம்.  ஆர்வமும் உற்சாகமும்தான் தனியாத ஆர்வமிருந்தால் உயிரோட்டமான வாழ்கை உருவாகிறது.

நம் எல்லோருக்கும் ஆர்வமிருக்கிறது.  அது பெரும்பாலும் சில மணி நேரங்கள் அல்லது சில நாட்கள் அல்லது சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் மட்டுமே இருக்கிறது.

தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் ஆர்வமான மனநிலை ஒருவருக்கு கிட்டுமானால் அவரே நினைத்ததை முடிப்பவராகிறார்.  வெற்றியாளராக வெளிப்படுகிறார்.

அதைப் பெறுவது எப்படி?

தொடரும்…


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1999

ஆசிரியர் தந்த அதிசய விளக்கு
10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?
உயிரோட்ட மனநிலை
உள்ளத்தோடு உள்ளம்
தன்னம்பிக்கையின் சிந்தனைத்துளிகள்
தன்னம்பிக்கை இதழின் நிறுவனர் டாக்டர். இல.செ. கந்தசாமி
கேள்வி – பதில்
உயர்வுக்கு வழி
சிந்தனைத்துளி
குறிக்கோளைப் பாகுபடுத்திக்கொள்வோம்
தொழில் தரும் தன்னம்பிக்கை
மனிதன் மனிதனாக இருக்க!
தள்ளிப்போடும் மனப்பான்மையைக் கிள்ளிப்போடுவோம்!
முயன்றுதான் பாருங்களே!
வாசகர் கடிதம்