Home » Articles » உயர்வுக்கு உரிய வழி

 
உயர்வுக்கு உரிய வழி


admin
Author:

ண்டீர்கள் என்பது தெளிவாகிவிட்டது. நம்புங்கள் உங்கள் உயர்வு உறுதியாக நிகழும்.  அது உங்கள் உள்ளத்தளவு உயர்ந்தோங்கி இருக்கவேண்டும் அல்லவா? அதற்கு உரிய வழிகள்தான் என்ன?  இதோ வழி.

உன்னையறிக.

வாகை சூடவேண்டிய சிலர் வாடிக்கிடப்பதேன்?  வெற்றிபெற வேண்டிய சிலர் வீழ்ந்து படுவதேன்?

தன்னம்பிக்கைப் படித்தும் இன்னும் தடைகள் நீங்கவில்லையா?  சுயமுன்னேற்றப் பயிற்சிகளில் பங்கேற்றும் பாய்ந்து முன்னேறப் படிக்கட்டுகள் தென்படவில்லையா? ஏன்? இதற்கு யார்தான் காரணம். இதற்கெல்லாம் காரணம் வேறு யாருமல்ல. அவர்களேதான்.  ஆம் அவர்கள் தோல்விக்கு அவர்களேதான் காரணம்.  ஆம்! சிலரின் தீய பழக்க வழக்கங்கள், சிலரின் தீயோர் நட்பு, சிலர்தம் தீய எண்ணங்கள், சிலரின் தகாத உறவுகள், சிலரின் தவறான கற்பனைகள், சிலரின் கட்டுப்பாடற்றக் காம்ம்.  சிலரின் சோம்பேறித்தனம்.  சிலரின் நேர்மையும் வாய்மையும் இன்மை… இன்னும் எத்தனையோ காரணங்கள்.

இந்தத் தடைகளைஎல்லாம் தகர்த்தெரிந்து உயர்வடைய வழி முதலில் உன்னை அறிவதுதான். நீ முதலில் உன்னையறிந்தால், உனையறிந்தால், உலகத்தில் போராடலாம்.  உயர்ந்தாலும் தாழ்ந்தாலும், தலை வணங்காமல் நீ வாழலாம் என்று காற்றில் கனிந்த இந்த கீதம் உங்கள் காதுகளில் ஒலித்ததில்லையா?  முதில் உம்மை அறிந்துகொள்ள முயலுங்கள்.  உங்கள் நீங்கள் அறிந்துகொள்ளத் துவங்கும் அதே வினாடியில் உயர்வுக்கு உரிய ஊருபட்ட வழிகள் உங்கள் கவனத்தை ஈர்க்கும்.  உயர்வை ஓடிவந்து சேர்க்கும்.

நன்மையும், தீமையும் பிறர்தர நம்மை நாடி வருவதில்லை.  நாமே தேடிக்கொள்வதுதான். தீதும் நன்றும் பிறர்தர வாரா.  அவரவர் தோல்விக்கும் அவர்களேதான் காரணம்.

உங்களை நீங்கள் தன்னாய்வுக்கு உட்படுத்திக்கொண்டால் உங்கள் முன் விரிந்து கிடக்கும் தடைகள் தெரியும்.  தனைகளை தகர்த்தெரிந்து செயலில் இறங்கினால் உயர்வது உறுதி.

ஒருவரின் உயர்வு என்பது பொன்னும் பொருளும் குவிந்துவிடுவதாலோ, புகழும் பாராட்டும் இருந்து வருவதாலோ, படிப்பு, பட்டம், பதவியாலோ மட்டும் கிடைத்துவிடுவதில்லை.  பாலும் பழமும் இருந்தாலும் பசியிருப்பதில்லையே பஞ்சனை, குளிர்ந்த காற்றனையும் கடந்தாலும் உறக்கம் வருவதில்லை.  பசியும், உறக்கும் இல்லாத வாழ்க்கை எப்படி உயர்வான வாழ்க்கையாகும்.  உன்னையறிதலே உயர்வுக்கு வழி.  தன்னையறிந்தவன் தரணி ஆள்வான்.

உங்கள் உள்ளத்து உதித்த எண்ணங்கள், உதடுகள் உதிர்த்த சொற்கள் மற்றும் உங்கள் வினைப்பாடுகளைப் பற்றிய தன்னாய்வுக்கு ஆட்படுத்தினால் எண்ணங்களை நெறிப்படுத்தவும், அவற்றின் வெளிப்பாட்டை முறைப்படுத்தவும் செயல்களைச் செம்மைப்படுத்தவும் கற்றுக் கொள்ளும் பக்குவம் வந்துவிடும். ஆக “உயர்வுக்கு உரிய வழி உன்னை அறிவதே”.  Talk less work more – பேச்சை குறைத்து செயலை அதிகப்படுத்துங்கள். பிறகென்ன உள்ளத்தளவு உயர்வது உறுதி.

தொடரும்…

Pages: 1 2

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 1999

தோல்விகள் ஏன் ஏற்படுகின்றன?
நினைவில் நிற்பவை
நல்ல சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வது எப்படி?
உயர்வுக்கு உரிய வழி
தற்கொலைகள் ஏன்?
நண்பருக்கு கடிதம்
வாசகர் கடிதம்
சிந்தனைத்துளிகள்
பார்க்க முடியாது வணிகவியல் கற்பிக்கிறார்
இல.செ.கவின் சிந்தனைகள்
மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரிய மூன்று காரியங்கள்
கேள்வி – பதில்
வளமூட்டும் சிந்தனைகள்
திட்டமிடல் வெற்றி ஏணியின் ஒன்பதாம் படி
ஏதேனும் முளைக்கட்டுமே!
உள்ளத்தோடு உள்ளம்
டாக்டர். இல . செ. கந்தசாமி அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி
அறிவோ ஆறு !