Home » Articles » வாசகர் கடிதம்

 
வாசகர் கடிதம்


admin
Author:

தன்னம்பிக்கை இதழ் படித்தேன். மனச்சோர்வு அடைந்திருந்த நான் ரூ. 5/-ல் தன்னம்பிக்கை இதழ் மூலம் மிகமிக தெளிவடைந்தேன்.  தன்னம்பிக்கை ஆசிரியர் குழுவிற்கு என் மனமார்ந்த நன்றி.

ஆர். பாஸ்கரன், கடலூர்.

மாணவ, மாணவிகளுக்கு டாக்டர் பெரு.மதியழகன் அவர்களின் தேர்வில் வெற்றிபற இதோ வழிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. மாணவ, மாணவிகளிடம் கொடுத்து படிக்கச் சொல்லியுள்ளேன்.

பி.ஜி.என். ஜெனார்த்தனன், சேலம்.

மார்ச் இதழ் படித்தேன். சுய தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைந்துள்ளது சிறப்பு.  ஒவ்வொரு குடும்பமும் சுயதொழில் நடத்த வேண்டும்.  ஜப்பான் மாதிரி?  அப்போது பணம் எங்கும்  பரவலாக்கப்பட்டு எல்லோரும் நன்றாக வாழ முடியும்.

ந. செந்தில்குமார், திருப்பூர்.

மார்ச் இதழ் பார்த்தேன்.  கடந்த மூன்று ஆண்டுகளாக சோம்பலினால் சிக்கித் தவித்த எனக்கு புத்துணர்ச்சியை ஊட்டியது.  எனது முயற்சிக்கு வளமூட்டும் சிந்தனைகள், இல.செ.க.வின் சிந்தனை.  சிறப்பறிவு போன்ற தலைப்புகளில் உள்ள கருத்துக்கள் பாலமாக அமைந்தன.  எனக்கு தன்னம்பிக்கை ஊட்டி வாழ்வில் வெற்றிபெற வழி சொன்ன தன்னம்பிக்கை இதழுக்கு நன்றி.

ஏ, சிவச்சந்திரன், சேலம்.

தேர்வு நேரத்தில் மாணவ மாணவியருக்கு பயன்படும் விதத்தில் தேர்வில் வெற்றிபெற இதோ வழிகள்! என்ற அருமையான கட்டுரையை தந்தது பாராட்டுக்குரியது.  இதை மாணவர்கள் கடைபிடித்தால் தேர்வில் வெற்றி பெறுவது உறுதி.

டாக்டர். எம்.எஸ். கோவிந்தராஜன்,
விஜயபுரம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 1999

தோல்விகள் ஏன் ஏற்படுகின்றன?
நினைவில் நிற்பவை
நல்ல சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வது எப்படி?
உயர்வுக்கு உரிய வழி
தற்கொலைகள் ஏன்?
நண்பருக்கு கடிதம்
வாசகர் கடிதம்
சிந்தனைத்துளிகள்
பார்க்க முடியாது வணிகவியல் கற்பிக்கிறார்
இல.செ.கவின் சிந்தனைகள்
மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரிய மூன்று காரியங்கள்
கேள்வி – பதில்
வளமூட்டும் சிந்தனைகள்
திட்டமிடல் வெற்றி ஏணியின் ஒன்பதாம் படி
ஏதேனும் முளைக்கட்டுமே!
உள்ளத்தோடு உள்ளம்
டாக்டர். இல . செ. கந்தசாமி அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி
அறிவோ ஆறு !