Home » Cover Story » பார்க்க முடியாது வணிகவியல் கற்பிக்கிறார்

 
பார்க்க முடியாது வணிகவியல் கற்பிக்கிறார்


மணிகண்டன்
Author:

மணிகண்டன் சிறுவனாக இருந்தபோது, அவன் தந்தை பள்ளி வாயில் வரை அவருக்குத் துணையாக வருவார்.இன்று மணிகண்டன் 30 வயது
இளைஞர். இன்றும் தினமும் கல்லுரி வாயில் வரை அவருக்குத் துணையாக வருகிறார் தந்தை .ஆம் மணிகண்டன் பார்வையில்லாதவர்.

செயல்பட்டுக் கொண்டிருந்த ஒரே ஒரு கண் பார்வையும் தனது 15 வயதில் இழந்தது. மணிகண்டனின் மனதில் இருந்த படிக்க வேண்டும் என்ற
ஆர்வத்திற்குத் தடையாக இருக்கவில்லை  .மாறாக தடைகளை எதிர்த்து ஒரு புதிய பாதைக்கு வழிகாட்டின.

பொதுவாக பார்வை இழந்தவர்கள். பி ஏ.. எம் ஏ  என்ற கலையியல் படிப்புக்களையே தேர்ந்து எடுப்பதைக் கேள்விப்பட்டிருந்தேன் ஒரு சிலர்
அறிவியல் படிப்பைத் தேர்வு செய்திருந்ததையும் அறிந்தேன். ஆனால் ஒருவர் கூட வணிகவியல் படிப்பைத் தேர்வு செய்யவில்லை.எனவே, வணிகவியல்
படிப்பில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற பெருவிருப்பங்கொண்டு, பி.காம் படிப்பைத் தேர்ந்தெடுத்தேன் என்று கூறுகிறார் மணிகண்டன். அதிர்ஷ்ட
வசமாக ஏற்பளிப்பு அவரைத் தொடர்ந்தது.

தேசிய கண்பார்வையற்றோர் பேரவை பார்வையற்றவர்களில் முதல் வணிகவியல் மாணவர் என்று வாழ்த்தியது.

அதற்குப்பிறகு மணிகண்டன், எம். காம். மற்றும் பி . எட். தேர்வுகளைத் தேர்ச்சி பெற்றார். கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக, பொள்ளாச்சி நல்லமுத்துக்
கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில் மதிப்பிற்குரிய ஒரு விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். வணிகவியல் பாடத்தில் மாணவர்கள் அனைவரும்
தேர்ச்சி பெற (100 % ) உதவுகிறார்.

தற்சமயம் எம் .பில். படித்துக் கொண்டிருக்கும் மணிகண்டன், இந்திய நாட்டிலேயே நான் தான் முதல் வணிகவியல் விரிவுரையாளர் என்று
நினைக்கிறேன் என்கிறார்.

கண்பார்வை இல்லாதவர் என்ற அனுதாபம் தவிர, மற்ற எல்லா விரிவுரையாளர்களைப் போலவே, மணிகண்டனும் தான் கற்பிக்க வேண்டிய பாடங்களைத்
தயார் செய்து கொண்டு தான் செல்கிறார். அதற்கு எண்ணற்றவர்கள் உதவியாக இருக்கிறார்கள். உறவினர் சங்கீதா மறுநாள் கற்பிக்க வேண்டிய
பாடங்களைப் படித்துக் காட்டுகிறார். மணிகண்டன் தன்னிடத்தில் உள்ள பார்வையற்றவர்களுக்கான தட்டச்சுப் பொறியில் முக்கியமாக விஷயங்களைக்
குறித்துக்கொண்டு, பாடம் கற்பிக்கும் போது அவற்றைப் பயன் படுத்திக் கொள்கிறார்.

அவர் பொதுவாக வணிகவியல் பாடங்களை வாய்மூலமே சொல்லிக் கொடுக்கிறார். கடினமான கணக்காக இருக்கும்போது, மாணவர்களில் ஒருவரை
கரும்பலகையில் எழுதச் சொல்லி பாடம் கற்பிக்கிறார்.

மற்ற விரிவுரையாளர்களுக்குச் சம்மாக அவரும் நிறைந்த அளவில் தேர்வுத் தாள்களைத் திருத்துகிறார். ஒரே வேறுபாடு, ஒருவர் அந்த விடைகளு
க்குரிய மதிப்பெண்ணை மணிகண்டன் மதிப்பிடுகிறார்.

தனக்குள்ள ஒரு குறைபாடு என்று மணிகண்டன் வருந்துவது . மற்றவர்களைப் போல நிறைந்த அளவில் நிறைய புத்தகங்களைப் படிக்கமுடிய
வில்லையே என்பது தான். ஏனெனில், பத்தகங்களைப் படித்துக் காட்ட மற்றவர்களைச் சார்ந்து இருக்கவேண்டிய நிலை.

பிறக்கும்பொழுதே வலதுகண் பார்வை முற்றிலும் இல்லாமல் பிறந்த மணிகண்டனின் இடதுகண் பார்வையும் முற்றிலும் மறைந்தது.அதன் காரணமாக
அவர் சமத்தூர் இராம ஐயங்கார் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடர இயலாமல் போய் விட்டது.சுமார் மூன்று ஆண்டுகள் ஒரு
பயனுமில்லாமல் வீட்டிலேயே  கழிந்தன. தனது வாழ்க்கையே  ஸ்தம்பித்து விட்டதோ என்று மனம் வருந்தினார் மணிகண்டன். அவருக்கு புத்துயிர்
கொடுத்தார் சந்திரன். பார்வையிழந்த சந்திரன், தான் எம். ஏ. தேர்ச்சி பெற்றிருந்ததைக் கூறி, மணிகண்டனுக்கு வழிகாட்டினார்.

அதற்குப் பிறகு மணிகண்டன் ப்ரேயில் முறையைப் பயின்று, மேல்நிலைத் தேர்வில் 1043 மதிப்பெண்கள் பெற்று முதன்மையாக வந்தார்.
புதுவாழ்வு மலர்ந்தது. கண்பார்வை  தெரியாமை அவருக்கு சுமையாக இல்லை. இந்திப் பாடத்தில் ப்ரவின் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

அவரது தந்தை திரு.இராஜமாணிக்கம் ஓர் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். அவரது தாய் திருமதி சுலோச்சனா. பெற்றோர் கூறுகின்றனர். எங்களால்
முடிந்த உதவிகளை அவனுக்குச் செய்து வருகிறோம். அவன் தன்னுடைய முயற்சியாலேயே இந்த அளவு உயர்ந்திருக்கிறான்.

தனது கல்லூரி செயலருக்கும், முதல்வருக்கும் மனம் நிறைந்த தன்றி கூறும் மணிகண்டன்,  பாரதியவித்யா பவன் தலைவர் திரு.கிருஷ்ணராஜ்
வானவராயர் அவர்களை மனநெகிழ்வோடு குறிப்பிடுகிறார். மணிகண்டனின் கல்லூரிப்படிப்பிற்கு திரு. வாணவராயர் பொருளுதவி செய்த்து குறிப்பிடத்தக்கது.

ஒருபேசும் கால் குலேட்டர், ஒரு பேசும் கடிகாரம் மற்றும் ப்ரேயில் கடிகாரம்- இவை மூன்றும் மணிகண்டனின் உடமைகள்.

சமூகம் பார்வையற்றோரிடம் இன்னும் கருணை காட்ட வேண்டும் என்கிற மணிகண்டன், கோவையிலுள்ள ஒரு புகழ்பெற்ற கல்லூரி,,தான் நேர்முகத்
தேர்வில் முதன்மையாக வந்திருந்தும்,தனது கண் பார்வை தெரியாமையைக் காரணம் கூறி, தனக்கு எம்.பில் படிப்பிற்கு அனுமதி மறுத்ததை மிகவும்
வருத்தத்தோடு கூறுகிறார்.

எங்களால் எதிர்கொள்ள முடியாது என்று நினைத்து, இன்று மிகப்பலர் எங்களைப் போன்றவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் தரத்தயங்குகிறார்கள்.
எங்களாலும் முடியும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 1999

தோல்விகள் ஏன் ஏற்படுகின்றன?
நினைவில் நிற்பவை
நல்ல சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வது எப்படி?
உயர்வுக்கு உரிய வழி
தற்கொலைகள் ஏன்?
நண்பருக்கு கடிதம்
வாசகர் கடிதம்
சிந்தனைத்துளிகள்
பார்க்க முடியாது வணிகவியல் கற்பிக்கிறார்
இல.செ.கவின் சிந்தனைகள்
மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரிய மூன்று காரியங்கள்
கேள்வி – பதில்
வளமூட்டும் சிந்தனைகள்
திட்டமிடல் வெற்றி ஏணியின் ஒன்பதாம் படி
ஏதேனும் முளைக்கட்டுமே!
உள்ளத்தோடு உள்ளம்
டாக்டர். இல . செ. கந்தசாமி அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி
அறிவோ ஆறு !