Home » Articles » கேள்வி – பதில்

 
கேள்வி – பதில்


admin
Author:

கேள்வி:

எனக்கு அடிக்கடி பல குழப்பங்கள் உண்டாகின்றன.  சில சமயங்களில் பல ஆசைகளால் உந்தப்பட்டு அலைகிறேன்.  சில சமயங்களில் எல்லாவற்றிலும் வெறுப்படைந்து செய்வதறியாது திகைக்கிறேன். இது ஏன்?

பதில்:

மனம் ஒரு விசித்திரமானது. அதனுடைய விருப்பு வெறுப்புகள் எப்படி மாறும் என்று நிர்ணயித்து சொல்ல முடியாது.  அதனால்தான் மனம் ஒரு குரங்கு என்றார்கள்.

பொதுவாக, நாம் பல ஆசைகளால் குறிப்பாக நியாயத்திற்கு மாறானா ஆசைகள், சபலங்கள் இவற்றால் ஒருபுறம் அலைகிறோம். மறுபுறம் எல்லாவற்றிலும் வெறுப்பு அல்லது சலிப்பு ஏற்பட்டு செயலற்று விடுகிறோம்.

இதுபோன்ற விருப்பு வெறுப்புகளில் அலைக்கழிக்கப்படாமல் சமநிலையில் செயல்பட முடிந்தால், அவன் மனதை வென்றவனாகிறான்.

இதற்கு உதாரணமாக சர்க்கஸில் ஒற்றை சக்கர சைக்கிள் ஓட்டுபவனைச் சொல்லலாம். அவன் ஓட்டும்போது வலதுபுறம் விழுவதுபோல இருந்தால் உடலை இடப்புறமாக சிறிது சாய்ப்பான்.  இடப்புறம் விழுவதுபோல் இருந்தால், உடலை வலப்புறமாக சிறிது சாய்ப்பான்.  அதைப்போல நியாயத்திற்கு மாறான ஆசைகள் ஒருபுறம் சாய்க்கும்போது மனதை கட்டுப்படுத்தி அதிலிருந்து சமநிலைக்கு திருப்பவேண்டும்.  வெறுப்பு அல்லது சலிப்புணர்வு நம்மை சாய்த்தால், ஏதாவது ஒரு ஆர்வமான செயலில் ஈடுபட்டு, அதிலிருந்து வெளிவர வேண்டும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 1999

தோல்விகள் ஏன் ஏற்படுகின்றன?
நினைவில் நிற்பவை
நல்ல சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வது எப்படி?
உயர்வுக்கு உரிய வழி
தற்கொலைகள் ஏன்?
நண்பருக்கு கடிதம்
வாசகர் கடிதம்
சிந்தனைத்துளிகள்
பார்க்க முடியாது வணிகவியல் கற்பிக்கிறார்
இல.செ.கவின் சிந்தனைகள்
மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரிய மூன்று காரியங்கள்
கேள்வி – பதில்
வளமூட்டும் சிந்தனைகள்
திட்டமிடல் வெற்றி ஏணியின் ஒன்பதாம் படி
ஏதேனும் முளைக்கட்டுமே!
உள்ளத்தோடு உள்ளம்
டாக்டர். இல . செ. கந்தசாமி அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி
அறிவோ ஆறு !