Home » Articles » வளமூட்டும் சிந்தனைகள்

 
வளமூட்டும் சிந்தனைகள்


இராமநாதன் கோ
Author:

– டாக்டர் ஜி. இராமநாதன் , எம் .டி…

குழப்பமான நமது சிந்தனைகளை  எப்படி வளமாக்குவது என்பதைப் பார்க்கலாம்.

நமது குழப்பங்கள் வளமூட்டும் சிந்தனைகள்
1 . ஏதாவது நடந்துவிட்டால் எந்த செயலுக்கும் நான்கே விளைவுகள்தான் உண்டு
அ) திருமணத்தில் யாராவது குழப்பம் ஏற்படுத்தினால்! அ) நாம் எதிர்பார்ப்பது நடப்பது
ஆ) பயணத்தில் விபத்து நேர்ந்து விட்டால்! ஆ) நாம் எதிர்பார்த்ததை விட அதிகமாக நடப்பது
இ) படிப்பில் தோல்வியடைந்து விட்டால்! இ) நாம் எதிர்பார்த்ததைவிட குறைவாக நடப்பது.
ஈ) வேலை போய்விட்டால் நாம் எதிர்பார்த்தற்கு எதிராக நடப்பது
உ) தொழிலில் நட்டம் ஏற்பட்டால்!

நாம் எதைச் செய்தாலும் இந்த நான்கு விளைவுகளையும் ஆராய்ந்து தான் துவங்க வேண்டும். இங்கே எதிரான விளைவுகளைச் சிந்திப்பது நெகடிவ்

சிந்தனை ( Negative thinking )  அல்லவா ? என்ற கேள்வி எழலாம்.

ஒரு செயலை தொடங்கு முன் எல்லா விளைவுகளையும் ஆராய வேண்டும். அதைத் தொடங்கிய பிறகு எதிரான வளைவுகளை எண்ணக்கூடாது.

ஒரு வேளை முடிவு எதிரானதாக அமையுமானால் அதையும் எதிர்கொள்வதுதான் விவேகமாகும் .

2) அதிர்ஷ்டம்
என்னுடன் பள்ளியில் படித்தவன்தான் அப்போது கணக்கில் மக்கு.  ஒரு அதிர்ஷ்டம்.  பத்தாண்டுகளில் மிகப் பெரிய ஆளாகிவிட்டான். அந்த பத்தாண்டுகளில் அவர் உழைத்த உழைப்பு, சந்தித்த போட்டிகள், திட்டமிட்ட செயல்கள், பிறர் ஒத்துழைப்பை பெறச் செய்த சாமர்த்தியங்கள் இவைகளை நாம் சிந்திக்க வேண்டும்.
3) விதி:
என் வாழ்க்கையில் விதி விளையாடிவிட்டது. நமது  இழப்பின் போதும், ஏமாற்றத்தின்போதும் நமது விதியை குறை சொல்லி விடுகிறோம்.  இதனால் தோல்விகளின் காரணங்கள் என்னென்ன?  அதில் நம் பங்கு என்ன?  என்ற ஆராய்ச்சியை செய்வதில்லை.  அடுத்த முறை செயல்படும் போதும் அதே தவறை செய்கிறோம். மேலும்  தோல்வியே தொடர்கிறது.
4) உடல்நிலை:

என் உடல்நிலைக்கு இனிமேல் எதுவும் முடியாது.

4) மாரடைப்பு ஏற்பட்டு, இதயத்தில் பைபாஸ் ஆபரேஷன் செய்தவர்களும், இரத்தக் கொதிப்பு சர்க்கரை போன்ற நோய்களுக்கு பல ஆண்டுகள் சிகிச்சை பெற்றவர்களும் பெரும்பாலும் தலைவர்களாகவும், பெரிய நிர்வாகிகளாகவும், பெரிய உயர் அதிகாரிகளாகவும் உள்ளார்கள்.  அவர்கள் அதிலிருந்து பாதிப்படையாமல் செயல்படுகிறார்கள்.

உடல் நோயைவிட, உடலைப் பற்றிய கவலையால் பரும்பாலோர் அவதிப்படுகிறார்கள்.

5) வயது:

இளம் வயதில் ஏமாந்து விட்டேன்

5) சாதனையாளர்கள், நோபல் பரிசு பெறுபவர்கள்  பெரும்பாலும் ஐம்பது வயதைத் தாண்டியவர்கள்தான். அந்த வயதில்தான் அனுபவத்தை செம்மையாக பயன்படுத்த முடியும்.  எழுபது வயதிற்கு மேலும் சாதனையாளர்கள் செயலாற்றுகிறார்கள்.  கடந்த காலம் தோல்வியானாலும், இது நாள் வரை ஏற்பட்ட அனுபவங்களை பயன்படுத்தி மேற்கொண்டு திட்டமிட்டு செயல்பட்டால், அந்த கடந்த காலம் வீணல்ல.
6) திறமை:

மற்றவர்களைப் போன்ற திறமை எனக்கு கிடையாது

6) மற்றவரின் அறிவை அதிக மதிப்பீடு செய்தும், நம்முடைய அறிவை குறைத்து மதிப்பிடுதலும் இதன் முக்கிய காரணம்.

மிகச் சிறந்த அறிவாளிகள்கூட மூளையில் பத்து சதம் மட்டும் உபயோகிக்கிறார்கள்.

நமக்கு எவ்வளவு அறிவு என்பதைவிட, இருக்கின்ற அறிவை எப்படி திறமையாக பயன்படுத்தினோம் என்பதே வெற்றியை நிர்ணயிக்கிறது.

7) மிகைப்படுத்துதல்:

அவனுக்கு எல்லாம் செய்தது நான் தான்:

என்னால் முன்னேறியவன் இப்போது என்னையே மதிப்பதில்லை;

எனக்கு மற்றவர்கள் கடன்பட்டவர்கள்;

நாம் செய்தவற்றை மிகைப்படுத்ததலும், மற்றவர்களிடம் அளவிற்கதிகமாக எதிர்பார்த்தலுமே இதற்கு காரணம்.

சிலசமயங்களில் பிறருக்கு நம் சக்திக்கு மீறி உதவிவிட்டு, அவர்களை நமக்கு கட்டுப்பட எதிர்பார்க்கிறோம். அதன் விளைவுதான் இந்த ஆற்றாமை.

சிலருடைய முன்னேறங்களுக்கு நாம் காரணங்களாகயிருக்கலாம்.  ஆனால் நாம் இல்லாவிட்டால் அவர் முன்னேறியிருக்கமாட்டார் என்பது சரியல்ல.

8) பிரச்சனைகள்:

யாருக்கும் இல்லாத சுமைகளை எனக்கு கொடுத்துவிட்டார்.

யாருமே என்மீது அனுதாபப்பட்ட வில்லை;  எனக்கு உதவவில்லை

8) பிறருடைய அனுதாபத்தை பெறுவதால் நம்முடைய பிரச்சனைகள் தீர்வதில்லை;  அனுதாபத்தை எதிர்பார்க்கின்ற மனதில் திறமை குறைகிறது.

நமக்கு பிறர் உதவ வேண்டும் என எதிர்பார்க்கலாம். மற்றவர்கள் உதவ நாம் என்ன செய்திருக்கிறோம்?  ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை உண்டு ( Everything has a cost) அல்லவா?

பிரச்சினைகளை தீர்ப்பதன் மூலமே வளர்ச்சி பெறுகிறோம். தேர்விற்கு நன்கு படித்த மாணவன் உற்சாகமாக இருக்கிறான்.  படிக்காதவன் குழப்பமடைகிறான்;  அதுபோல, நாமும் பிரச்சினைகளை வளர்ச்சிக்கான வாய்ப்பாக கருதி, உற்சாகத்துடன் எதிர்கொண்டால், முன்னேற்றமாக அமையும். இல்லையேல், அந்த பிரச்சனைகளிலேயே வாழ்க்கை மூழ்கிவிடும்.

9) குற்றவுணர்வு:

ஏதாவது தவறாக நடந்திருப்பேனா? என்னைத் தவறாக புரிந்திருப்பாரோ?

உணர்ச்சி வயப்பட்டு மகிழ்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுதலும், சோகத்தில் மற்றவர்களை வசை பொழிதலும் இதன் காரணமாகின்றன.  கொந்தழித்த மனம் (Emotional Mind) நம்மையும் மற்றவரையும் சுடத்தான் செய்யும்.

“வாழ்க்கை என்பது வெறுமனே வாழ்வதற்கல்ல;  கொண்டாடுவதற்கு”.  (Life is festival:  celebrate it) என்றார் ரஜனீஸ்.  சிந்தனைகளை வளமாக்குவதே வாழ்க்கையை விழாவாக்கும்.

 

1 Comment

  1. PRASANH says:

    குட்

Post a Comment


 

 


April 1999

தோல்விகள் ஏன் ஏற்படுகின்றன?
நினைவில் நிற்பவை
நல்ல சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வது எப்படி?
உயர்வுக்கு உரிய வழி
தற்கொலைகள் ஏன்?
நண்பருக்கு கடிதம்
வாசகர் கடிதம்
சிந்தனைத்துளிகள்
பார்க்க முடியாது வணிகவியல் கற்பிக்கிறார்
இல.செ.கவின் சிந்தனைகள்
மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரிய மூன்று காரியங்கள்
கேள்வி – பதில்
வளமூட்டும் சிந்தனைகள்
திட்டமிடல் வெற்றி ஏணியின் ஒன்பதாம் படி
ஏதேனும் முளைக்கட்டுமே!
உள்ளத்தோடு உள்ளம்
டாக்டர். இல . செ. கந்தசாமி அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி
அறிவோ ஆறு !