Home » Articles » பெருமையைக் கெடுக்கும் பொறாமை

 
பெருமையைக் கெடுக்கும் பொறாமை


ரங்கசாமி பி
Author:

– தி. ரங்கசாமி

நம்மில் பெரும்பாலோர் பொறாமை குணம் கொண்டிருப்பதால் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.பொறாமை குணம்தானா என்று நமக்கே தெரியாது. நம்மையறியாத நிலையில் நமது பொறாமை குணத்தை வெளிப்படுத்தும்போது நமது பொன்னான நேரங்களை வீணடிக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எது பொறாமைக் குணம்?

நம் நிலையையும் நாம் அறிந்த அல்லது அறியாத ஒருவருடைய நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்து, நமது நிலை மற்றவரது நிலையைவிடக் குறைவானதாகத் தெரியும்போது அதனை உள்ளது உள்ளபடி ஏற்க மனம் ஒப்பாமல் மற்றவர் மீது வெறுப்புணர்ச்சி கொண்டு அந்த வெறுப்பைச் சொல்லாலும், செயலாலும் வெளிப்பபடுத்தி விடுகிறோம்.

அடுத்துச் செய்யவேண்டியவற்றைச் சிந்திக்க வேண்டிய நேரத்தை முடிந்துபோன விஷயத்தில் செலவிட்டு விடுகிறோம். வெறுப்புணர்வு நமது நரம்பு மண்டலங்களைத் தாக்குவதன் காரணமாக ஆரோக்கியமும் கெடுகிறது. நமது முன்னேற்றத்திகுப் பொறாமைக் குணம் அவசியமே இல்லை. நமது உழைபுக்கு ஏற்ற பலன்தான் கிடைக்குமாதலால் நமது உழைப்பை உயர்ந்த அளவில் உறுதிப்படுத்த முனைவதே நமக்குப் பெருமை சேர்க்கும். பிறர் மீது பொறாமை கலந்த நமது விமர்சனம் நமக்குப் பெருமை சேர்க்காது.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment