Home » Articles » சிந்தனைத்துளிகள்

 
சிந்தனைத்துளிகள்


admin
Author:

திறமை என்பது பாட்டரி மின்சாரம் போன்றது. அதை வீண்டிக்காதீர்கள். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

******************************
நேர்மையான வழியில் வராத எதுவும் நிலைத்து நிற்பதுமில்லை. நிறைவைத் தருவதும் இல்லை.
*******************************
“முடியும்” என்கற எண்ணம் எவ்வாறு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குகிறதோ அதைப் போலவே முடியாது என்கிற எண்ணம் பாதகமான சூழ்நிலைகளை உருவாக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.
********************************

ஓர் இலட்சியத்திற்காக நீ உன் உயிரையும் அர்பணிக்க கூடியவனாக இருந்தால்தான் நீ ஒரு தலைவனாக இருக்க முடியும்.
*******************************

எதிர்பார்த்த சந்தர்ப்பங்கள் கிடைக்காதபோது கிடைக்கிற சந்தர்பங்களை சாமர்த்தியமாக பயன்படுத்திக்கொள்ளத் தெரிந்தவனே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான்.

*************************

ஏழ்மை கடவுளின் விருப்பமல்ல. நீ நிரந்தரமாக ஏழையாகவே இருக்க வேண்டுமென்று யாரும் சொல்லவில்லை. உன் மனத்தை உற்சாகமாக வைத்துக்கொள்வது எப்படி உன் கையிலிருக்கிறதோ, அதே போல் உன் விதியை நிர்ணயித்துக் கொள்வதும் உன் கையில் தானிருக்கிறது.

************************

இருக்கிற நிலையில் அப்படியே ஏற்றுக்கொண்டு நிரந்தரமாக அதே நிலையில் வாழ வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. இருக்கிற நிலைகளை நாம் இரும்புகிறபடி மாற்ற முயல வேண்டும். அதுதான் முயற்சி. அதுதான் ஜீவனின் இயல்பு.

************************

எந்தக் காரியத்தையும் புன்முறுவலுடன் ஏற்றுக்கொள்; வெற்றியடைவாய், புன்முறுவலில்லாத முகத்தையுடைய ஒருவன் வியாபாரம் செய்ய அருகதையற்றவன்.

******************

வாழ்வு இரண்டு உண்மைகளில் அடங்கி இருக்கிறது. ஒன்று உற்சாகம் மற்றது நம்பிக்கை. இவை இரண்டும் இருக்கும்போது மனிதன் தானாகத் துணிந்து செயல்படுவான்; உற்சாகமாகச் செயல்படுவான்.

****************************

மனத்தல் நாம் கொண்டிருக்கும் எண்ணங்களுக்கேற்ப நம் சூழ்நிலை அமைகிறது. நாம் எந்த சூழ்நிலையை விரும்புகிறோமோ அதற்கேறப மன எண்ணங்களை அமைத்துக் கொண்டால் வாழ்வு நாம் விரும்புகிறபடி அமையும்.

**********************************

வாழ்வில் முன்னேற நல்ல அடித்தளம் தேவை. அந்த அடித்தளங்கள்தான் நாமாக நம் வாழ்வில் அமைத்துக்கொள்ளும் கட்டுப்பாடுகள்.
**********************

அற்பமான வேலைகளுக்கு முணுமுணுப்பவன் எல்லாவற்றுக்கும் முணுமுணுப்பான். துன்ப வாழ்க்கை வாழ்வான்; அவன் தொடுவதெல்லாம் தோல்வியில் முடியும்.

– சுவாமி விவேகானந்தர்

******************************

முடியும் என்கிற வலுவான சொல் உங்களுக்கு துணையிருக்கும்போது முடியாது என்கிற கோழைத்தனத்தில் எதற்காக நீங்கள் தஞ்சம் புகவேண்டும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 1999

நினைவில் நிற்பவை – தொடர் 7
பெருமையைக் கெடுக்கும் பொறாமை
தேர்வில் முதன்மை பெற
சிந்தனைத்துளிகள்
தேர்வில் வெற்றிபெற இதோ வழிகள்
வாசகர் கடிதம்
10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?
வளமூட்டும் சிந்தனைகள்
கேள்வி – பதில்
சாதனையாளராக…
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.கவின் சிந்தனை
கவிதை