Home » Articles » தேர்வில் வெற்றிபெற இதோ வழிகள்

 
தேர்வில் வெற்றிபெற இதோ வழிகள்


admin
Author:

– டாக்டர் பெரு. மதியழகன்

அன்பிற்கினீயீர்,

வணக்கம், வாழிய! தன்னம்பிக்கை வாசகர்களில் ஏராளமானவர்கள் மாணவர்கள். பள்ளிகளில், கல்லூரிகளில் இன்னும் பல்வேறு நிறுவனங்களல் பயிலும் நீங்கள் விரைவில் இவ்வாடு இறுதித் தேர்வுகளை எதிர்கொள்ள இருக்கும் நிலையில் இந்தக் கடிதம் வாயிலாக உங்களை வாழ்த்தி வழியனுப்பவும், வெற்றிபற சில வழிமுறைகள் கூறவும் விழைகிறேன்.

தேர்வு நெருங்க நெருங்க மாணர்களுக்கத் தேர்வுப் ப ம் தோன்றுது வழக்கம். தேர்வைத் தன்னம்பிக்கையோடு எதிர் கொள்ளவும், படித்ததைத்தேர்வு பயத்தால் மறந்துவிடாமல் இருக்கவும் நினைவாற்றலை வளர்த்துக்கொள்ளவேண்டும். படித்தத்தை எளிதில் நினைவில் வைக்கவும் மறந்துவிடாமல் இருக்கவும் படிக்கத்தூண்டும் சூழ்நிலையும், அமைதியான மனநிலையும் தேவை.

படிக்கும் சூழ்நிலை

பொதுவாக வீட்டில் அமர்ந்து படிக்கும் இடத்தை அடிக்கடி மாற்றக்கூடாது. ஒவ்வொரு நாளும் இடம் மாற்றினால் அந்தச் சூழ்நிலைக்கு மனம் பழகப்பட வேண்டும். பழக்கப்பட்ட சூழ்நிலையில் படிக்கும் போது மனம் குழப்பமடைவதில்லை. படிக்கும் இடம், மேசை ஆகியவை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். சிலருடைய மேசைகளைப் பார்த்தால் தாறுமாறாக நோட்டுப் புத்தகங்கள் போட்டுக் கிடக்கும். அதைப் பார்த்தாலே மனம் வெறுப்படையும். எனவே அவை எப்போதும் சீராக அடுக்கி வைக்கப்பட்டிருக்க ஏண்டும். படிக்கும் இடத்தில் சுவரிலோ அல்லது மேசை மீதோ இன்னின்ன பாடங்களை இதற்குள் படித்து முடிக்க வேண்டும் என்று அட்டவணை இட்டு, வாரம் ஒரு முறை அதைத் தேவைக்கு ஏற்ப மாற்றி வடிவமைத்து, இன்னின்ன பாடத்தை இந்த மணிக்குள் படித்து முடிக்க வேண்டும் எனத் தீர்மானம் செய்து, அதன்படி திட்டமிட்டவாறு உரிய காலத்தில் படித்து முடிக்க வேண்டும் என்று மனத்திற்குள் தீர்மானம் செய்துவிட்டால் விரைவில் பாடங்கள் நினைவில் நிற்கும்.
மனநிலை

ஒவ்வொரு முறையும் படிக்கத் தொடங்குமுன் மனத்தைச் சமநிலைக்குக்கொண்டு வரும் பயிற்சியை கண்களை மூடிக்கொண்டு ஓரிரு மணித்துளி செய்து விட்டுப் (இப்பயிற்சி முன்பே தன்னம்பிக்கை இதழில் நினைவாற்றல் மேம்பட வழி என்ற கட்டுரையில் வெளிவந்திருக்கிறது. அடைப்படிக்காதவர்கள் “நினைவாற்றல் மேம்பட வழி” என்ற எமதுத நூலைப் படித்துப் பயன்பெறலாம்). பிறகு படிக்கத் தொடங்கினால் சாதாரணமாக 1 மணி நேரத்தில் படித்து முடிக்கக் கூடியதைத 15 மணித்துளிகளில் படித்து முடித்துவிட முடியும். இந்த ஓரிரு மணித்துளி பயிற்சி மூளைக்கு அடியில் உள்ள ஐபோதலாமஸ் சுரப்பியைத் தூண்டுவதால் பயன் ஏற்படுகிறது.
கண்களுக்கு ஓய்வு

தொடர்ச்சியாகப் பல மணி நேரம் படிப்பவர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு மணித்துளி கண்களை மூடீ கண்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு மீண்டும் படிக்கத் தொடங்கலாம். உள்ளங்கையிலோ அல்லது கண் கிண்ணத்திலோ (Eye cup – இயற்கை மருத்துவ மனைகளில் கிடைக்கும்) தண்ணீரை எடுத்துக்கொண்டு விழிகளை அதில் நனைத்து, சுழ்ழவிட்டுக் கழுவலாம். இதனால் கண்களில் வெப்பம் குறைந்து புத்துணர்ச்சி பெறும். மேலும் கண் எரிச்சல் இருப்பின் கால் பாதங்களைக் குளிர்ந்த நீரில் நனைக்க வேண்டும்.

வீண் பேச்சு

தேர்வுக்காகப் படிக்கும் சமயங்களில் அங்கும் இங்கும் செல்வதையும், நேரத்தைப் பலியிடும் வெட்டிப் பேச்சுக்களையும் கட்டுப்படுத்துங்கள். அதிகம் படிப்பதால் சலிப்புத் தோன்றுமானால் சிறிதுத நேரம் வெளியில் நடந்து வரலாம். சற்று நேரம் தொலைக்காட்சி கூடப் பார்க்கலாம். ஆனால் தொலைக்காட்சி முன்பு உட்கார்ந்து விட்டால் அந்த மயக்கத்திலிருந்து விடுபட்டு எழ மணம் வராது. எனவே முடிந்தவை அதைத் தவிர்ப்பது நல்லது.

காப்பியும் தேநீரும்

இரவில் நீண்ட நேரம் படிக்கும்போது உடலுக்குச் சத்தான உணவு தேவை. வேர்க்கடலையுடன் சிறிது வெல்லம் சேர்த்துத உண்ணலாம். அல்லது கடலை மிட்டாய் தின்றுவிட்டு நிரம்பத் தண்ணர் அருந்தினால் போதுமானது. ஆனால், இரவில் படிப்புக்கு இடையில் சோர்வு நீங்க கோப்பை கோப்பையாக்க் காப்பியும் தேநீரும் அருந்துவது நல்லதல்ல, பழச்சாறு, தேன் கலந்த நீர் மிகவும் ஏற்றது. அல்லது தண்ணீரே போதுமானது.

இதோ ஒரு கடிதம்

அன்புள்ள ஐயா,

நான் பதினொன்றாம் வகுப்புப் படித்து வருகிறேன். எங்கள் பள்ளியில் நீங்கள் ‘மாணவனின் மாண்பு’ என்ற தலைப்பில் பேசியபோது, ‘படி என்றால் புத்தகத்தைப் படி என்று மட்டும் பொருளன்று. பெற்றோர்க்குக் கழ்ப்படி, ஆசிரியருக்குக் கீழ்ப்பட என்றும் பொருள்படும்’ எனச் சொன்னீர்கள். இதுவரை அம்மாவை எடுத்தெறிந்து பேசி வந்த நான் என்னை மாற்றிக் கொண்டேன். அது மட்டுமல்ல தங்கள் அறிவுரைப் படி ஓய்வு நேரத்தில் பெற்றோர்களுக்கு உதவியாகும் சில வேலைகளைச் செய்கிறேன். நீங்கள் குறிப்பிட்டபடியே அட்டவணை போட்டுத் திட்டமிட்டுப் படித்தேன். அரையாண்டுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள கிடைத்து. ஆனால் படித்தது கூட தேர்வெழுதும்போது மறந்து போகிறது. இதற்கு என்ன செய்வது? பேராசிரியர் அவர்களே உடனே கடிதம் எழுதுங்கள்.

இப்படிக்கு,
………………

இந்தக்கடிதம ஒரு சான்றுதான். பலருகும் இந்தக் குறைபாடு உண்டு. படித்துவிட்டுப் போனேன். தேர்வுப்பயத்தில்எல்லாம் மறந்துவிட்டது என்பார்கள். இத்தகையவர்களுக்கு இதோ சில வழிமுறைகள்.

தேர்வுப் பயத்தைப்போக்குவது எப்படி?

அரையும் குறையுமாகப் படித்திருந்தால் பயம் ஏற்படும். அய்யோ! படித்து வருமோ வராதோ? வினாக்கள் கடனமாக இருக்குமோ? அல்லது எளிதாய் இருக்குமோ? என்றெல்லாம் உள்ளத்தில் எண்ணங்கள் தோன்றி பயத்தைத் தோற்றுவிக்கும். நன்கு படித்திருந்தால் நாம் நன்கு படித்திருக்கிறோம் என்ற நம்பிக்கை பிறக்கும். எதைக்கேட்டாலும் நம்மால் எழுத முடியும் என்ற தன்னம்பிக்கை உங்கள் உள்ளத்தில் இருந்தால் பயம் உங்களை நெருங்காது. உள்ளத்தில் தெளிவிருந்தால் செயலில் துணிவிருக்கும். பயம் வந்தால் படித்து மறந்துவிடும் நிலை ஏற்படும். தன்னம்பிக்கையோடு இருந்தால் மறதி ஏற்படாது.

ஒரு மணிநேரம் முன்னதாக

தேர்வு நடக்கும் இடத்திற்குக் குறைந்தது ஒரு மணிநேரம் முன்னதாகவே சென்றுவிட வேண்டும். இல்லை என்றால் சரியாக மணியடிக்கும்போது சென்றடைவீர்களேயானால் உங்களுடைய இடம் எந்த அறையில் எந்த வரிசையில் இருக்கிறது என்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தால் ஒரு வழியாக உங்கள் இடத்தைத்தேடிப் பிடிப்பதற்குள் மற்றவர்கள் தேர்வு எழுத ஆரம்பித்து விட்டால் பதற்றம் ஏற்படும். இதனால் மனம் சமநிலை இழந்து படித்ததைக்கூட மறந்துவிட நேரிடும்.

தேர்வுக்கூடம் நடந்து செல்லும் தொலைவில் இருப்பவர்களுக்கு அவ்வளவாகச் சிக்கல் இருக்காது. ஆனால் தொலைவில்இருந்து வருகிறவர்கள் பேருந்து, மோட்டார் வண்டி அல்லது மிதிவண்டியை நம்பி வரவேண்டி இருந்தால் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். பேருந்து வராமல் போகலாம். வண்டி வழியில் பழுது ஆகலாம். எனவே எந்த நிலையிலும் துணிவுடன் எதிர்கொண்டு உரிய நேரத்திற்கு 1 மணி நேரம் முன்னதாகவே தேர்வு நிகழும் இடத்தைச் சென்றடைய வேண்டும்.

நன்கு படித்து வந்திருப்பினும், சரியான நேரத்தில் தேர்வு அறையில் உரிய இடத்தில் சென்றமர்ந்து இருப்பினும், பேனா, பென்சில், அழிப்பான் அனைத்து உடமைகளடன் சென்றிருப்பினும் சிலருக்கு ஒரு தவிப்பு இருந்து கொண்டே இருக்கும். மனம் சமநிலையில் இருக்காது. இது பொதுவாக எல்லோருக்கும் இருக்கக்கூடியது தான். எனவே, தேர்வு அறையில் என்று அமர்ந்தவுடன் ஒரு மணித்துளி நேரம் கண்களை மூடி மனத்தைச் சம நிலைக்கு கொண்டுவரும் பயிற்சியைச் செய்யுங்கள்.

முதலில் வசதியாக அமர்ந்து கொண்டு கண்களை மூடிக்கொள்ளுங்கள். நன்கு மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கவும். மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது ஏற்படும் ஒலியை உங்கள் செவிகளால் உணருங்கள். உள்ளிழுத்த மூச்சுக்காற்றை வாய்வழியாக (மூக்கு வழியாக அன்று) மெல்ல வெளிவிடுங்கள். அப்படி வெளிவிடும்போது மனதுக்குள் Relax, Relax, Relax என்று சொல்லுங்கள். இவ்வாறு ஓரிரு நிமிடம் செய்தால் போதம். இந்தப் பயிற்சியால் உங்கள் தவிப்பு குறைந்து போயிருக்கும். மனம் சமநிலையில் இருந்தால் படித்தது மனமடவென நினைவுக்கு வரும்.

தேன்நீர்

இது தேநீர் அல்ல தேன்நீர். தொடர்ந்து தேர்வுகள் நடைபெறுமாயின் தேர்வுக்கு படிக்கும் ஆர்வத்தில் உணவு சரியாக்க்கொள்ளாமல் இருக்கநேரிடும். சரியான உணவு உட்கொள்ளாமல்தேர்வுகளைத் தினமும் எழுதும் சமயத்தில் பசி மயக்கத்தால் நலை தடுமாறி நினைவு தடுமாற்றம் நேரிடும். தேர்வு நடந்து கொண்டிருக்கும் நாள்களில் உடல்நலம் குன்றினாலும் தவிர்க்க முடியாமல் தேர்வு எழுத்த வேண்டிய நிலைவரும். குறிப்பாகப் பெண்களுக்கு இயற்கையில் நிகழும் உடல்நலக்குறைவு தேர்வச் சமயத்தில் ஏறபட்டால் உடல் சக்தியற்றத் தேர்வு நன்கு எழுத முடி்யாத நிலை ஏற்படும் எனக்குத் தெரிந்த ஒருவர் நான் பணியாற்றி ஊரில் புள்ளியல் ஆய்வாளராகப் பணியாற்றினார். அவருடைய மகள்தான் பள்ளியில் முதல் மதிப்பெண் பெறுபவர். பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு நடந்து கொண்டிருந்த சமயத்தில் பெண்களுக்குரிய இயற்கையான உடல்நலிவு ஏற்பட்டதில் கைலியால் அவர் தேர்வை நன்கு எழுத முடியாது போனது. இதனால் ஒரு பாடத்தில் மதிப்பெண் குறைந்ததால் மருத்துவப் படிப்புக்குச் சேர முடியாமல் போனது, ஆனாலும் பொறியாளரானார்.

இந்த நிகழ்ச்சி நமக்கு உணர்த்துவது என்ன? இத்தகு இடர்பாடுகளைத் தேர்வு நேரத்தில் சரியாக எதிர்கொள்ளவில்லை என்றால் ஆண்டு முழுவதும் படித்ததுத கூட வீணாகிவிடலாம். எனவே இத்தகு நிலைகளை ஓரளவ்வு சமாளிக்கத் தேர்வுக்குச் செல்லும் போதுத ஒரு தண்ணீர் பாட்டிலில் தேன் கலந்த நீர் எடுத்துச் செல்லுங்கள். தேர்வு எழுதிக்கொண்டிருக்கும்போது களைப்பு தோன்றினால் தேன்நீர் சிறிது அருந்தினால் போதும். உடனே, அடுத்த வினாடியே புத்துணர்ச்சியும் சக்தியும் பெறலாம்.

 

1 Comment

  1. சரன் says:

    Your information is helpful

Post a Comment


 

 


March 1999

நினைவில் நிற்பவை – தொடர் 7
பெருமையைக் கெடுக்கும் பொறாமை
தேர்வில் முதன்மை பெற
சிந்தனைத்துளிகள்
தேர்வில் வெற்றிபெற இதோ வழிகள்
வாசகர் கடிதம்
10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?
வளமூட்டும் சிந்தனைகள்
கேள்வி – பதில்
சாதனையாளராக…
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.கவின் சிந்தனை
கவிதை