Home » Articles » கேள்வி – பதில்

 
கேள்வி – பதில்


admin
Author:

கேள்வி: எனக்கு ஐம்பது வயது. ஜவுளி தொழிலை செய்து வந்தேன். தொழிலில் நஷ்டம். கடன் பெருகிவிட்டது. இருக்கின்ற சொத்துக்களை விற்று கடன் முழுதும் அடைக்க முடிவு செய்துள்ளேன். மேற்கொண்டு எப்படி முன்னேறுவது? B.A., படித்துள்ளேன். எல்லாமே போய்விட்டதால் குழப்பநிலையில் அமைதியின்றி தவிக்கிறேன். வழிகள் என்னென்ன?

பதில்: இதுபோன்ற சூழ்நிலையில், முதலில் செலவுகளை உங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து குறைந்த பட்சமாக்கிவிடவும். இதனால் உண்டாகும் மனக்குழப்பங்களை நீக்கி மீண்டும் முன்னேற்ற வாய்ப்புகள் உண்டு என்பதை தெளிவாக்கிக்கொள்ள வேண்டும். இது போன்ற சூழ்நிலையைத்தான் புதுமையாக, மேலும் முன்னேற்றமானதாக உருவாக்கி, சாதனைகளைப் படைக்கிறார்கள் என்பதை உணரவும். உங்களை பற்றிய உயர்ந்த , ஆக்கப்பூர்வ மனநிலைதான் உங்களைமுன்னேற்ற முடியும். நடைமுறை எவ்வளவு தாழ்வாக இருந்தாலும், நம்பிக்கை மனநிலை மட்டும் இருந்தால் நீங்கள் நினைக்கும் புதுமையை அடைய முடியும்.

புதிய வழிகளைக் கையாளுங்கள்:

1. முதலாவதாக உங்களை நம்புங்கள்: உங்களுடைய கடந்தகால அனுபவங்களை பயன்படுத்தி, மனதில் உள்ள ஆர்வமான புதிய துறையை தேர்ந்து, அதில் உயரிய நிலையை அடைய முடிவெடுத்துக் கொள்ளுங்ள். அந்த உயரிய நிலையை அடைந்துவிட்டதாக உருவகம் செய்து, அதே குறிக்கோளை காலை எழுந்தது முதல் தூங்கும் வரை வேண்டுவதாக (Prayer) செய்யுங்கள்.

2. உங்களுடைய பாசிடிவ் அம்சங்களை பட்டியிடுங்கள்:

1) உங்களுடைய படிப்புச் சான்றிதழ் (Qualification)

2) அதிகப்படியான திறமைச் சான்றிதழ் (Extra Curricular Activities)

3) தொழிலில் பெற்ற விருதுகள் ( Awards)

4) உங்களுக்கு கிடைத்த கடந்த கால பாராட்டுக் கடிதங்கள்.

5) நீங்கள் பங்கேற்ற முக்கிய நிகழ்ச்சிகளின் போட்டோக்கள்.

6) உங்களுடைய ஆர்வங்கள், அதை அடையும் வழிமுறைகள்( Proposed ractical Steps)

போன்றவைகளை சேர்த்து எடுத்து ஒரு (Bio-Data) – வைத் தயார் செய்யுங்கள்.

3. உங்களுடைய புதிய குறிக்கோளுக்கு விண்ணப்பம் செய்யுங்கள்:

உங்களுடைய புதிய குறிக்கோளுக்கு வாய்ப்பகள் உள்ள இடங்களை அறிந்துகொள்ளுங்கள். செய்தித்தாள் முதல் இன்டர்நெட் வரை உள்ள விளம்பரங்கள் மற்றும் தனியார் துறையினரை அறிந்து உங்களுடைய (Bio- Data) – வை அனுப்பி நேரில் ஒரு இன்டர்வியூக்கு வாய்ப்பை பெறுங்கள்.

4. புதிய மனிதராகுங்கள்:

நீங்கள் இதுவரை நெருங்கி பழகிய சிலருகு மட்டுமே உங்களுடைய தோல்வியைப் பற்றிய விபரம் தெரியும். மற்ற அனைவருக்கும் குறிப்பாக புதியதாக வாய்ப்பினை கேட்கும் நபர்களுக்கு உங்களுடைய தோல்வியைப்பற்றி தெரியாது. ஆகையால் உங்களுடைய தோல்வியைப்பற்றியோ, பொருளிழப்பைப் பற்றியோ யாரிடமும் பேசத் தேவையில்லை.

உங்களைப்பற்றிய நல்ல அபிப்பிராயங்களை உங்களுடைய உடையும் (Dress) , நீங்கள் பேசுகின்ற வார்த்தைகளுமே (Words) செய்யும். ஆகவே உயர்ந்த ஆடைகளில் ஒன்று அல்லது இரண்டை வாங்கி, அதை அணிந்துகொண்டு மற்றவர்களை சந்தியுங்கள். பிறருடன் பேசுகின்ற வார்த்தைகளை முன்கூட்டியே தேர்வு செய்யுங்கள். தெளிவாக, சுருக்கமாக பேசுங்கள். தோல்வியாளன் என்ற பிரதிபலிப்பு உங்கள் வார்த்தையில் வரக்கூடாது.

5. பேட்டியில் பேச வேண்டியவை; நேர்முகப் பேட்டிக்கு செல்லும்போது

புதியதாக தேர்வு செய்யும் தொழிலில் என்ன செய்ய முடியும்?

அதில் உங்களின் தனித் திறமை என்ன?

கடந்த காலத்தில் பெற்ற உங்களுடைய அனுபவங்கள் இந்த துறைக்கு எப்படி பயன்படும்?

அடுத்த 5 ஆண்டுகளல் தொழிலில் எதிர்பார்க்கும் முன்னேற்றங்கள்

புதிய துறையில் உங்களால்

உற்பத்தி செலவைக் குறைக்கும் வழிகள்

உற்பத்தி அளவைப் பெருக்கும் வழிகள்

கம்பெனிக்கு உண்டாகும் ன்மைகள்

உற்பத்தியை துரிதமாக்கும் வழிகள்

மற்ற நிர்வாகிகள், தொழிலாளர்களுடன் உங்களுடைய ஒத்துழைப்புமுறைகள் போன்றவைகளை தனித்தாளில் எழுதிச் செல்லுங்கள். பேட்டியின் போது ஆதை கொடுங்கள். அவர்கள் கேட்பதில் தேவையானவற்றை மட்டுமே பேசுங்கள்.

6. பேட்டிக்கு நன்றி:

நீங்கள் யாரைச் சந்தித்தாலும், அவர்களுக்கு நன்றிக் கடிதம் எழுதுங்கள். உங்களுடை புதிய வாழ்ப்பு உங்களுக்கு எந்த நேரத்திலும் வந்து விடும். முதலில், முதலீடு இல்லாத வருமானத்திற்கு ஒரு வேலையில் சேருங்கள். சில ஆண்டுகளில் மீண்டும் சொந்த தொழிலை பெரிய அளவில் செய்து சாதனைகளைப் படைக்கலாம்.

7. புதிய வாழ்க்கைக்கு பழக்கத்தை மாற்றுங்கள்:

வரவு – செலவு கணக்குகளை எழுதி – செலவுகை கட்டுப்படுத்துதல்.

அத்தியாவசிய செலவுகளைத் தவிர மற்ற அனைத்தையும் தவிர்த்தல்.

குடும்பத்திலுள்ள அனைரும், கிடைக்கின்ற பகுதிநேர வேலைகளையும் செய்தல்.

சம்பிரதாயச் செலவுகளைத் தவிர்த்தல்.

குறைந்த கால கடன்களை நீண்ட காலக் கடன்களாக மாற்றுதல். (போன்றவைகள் பொருளாதாரத்த சீர்ப்படுத்தும்.)

8. உடல் நலம்

தினமும் உடற்பயிற்சிக்காக ஒரு மணி நேரம் நடக்கலாம். அதையும் நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும்போது ஒரு கிற்பிட்ட இடத்திலிருந்து நடந்தே செல்லலாம். இதனால் உடலுக்கு பயிற்சியாகும். பயணச் செலவும் குறையும்.

9. மனநிலை:

இதுபோன்ற சூழ்நிலைகளில் உண்டாகும் மனச்சோர்வு மனப்பதட்டம், ஏமாற்றம், வெறுப்பு, ஆற்றாமை கவலை போன்றவைகளால் பாதிக்கப்படாமல் உறுதியாக செயல்பட வேண்டும். யோகப் பயிற்சிகள், தியான பயிற்சிகளை தினமும் செய்யலாம்.

நம்பிக்கையுடன் புதிய வாய்ப்புகளை தேர்வு செய்யுங்கள். விடா முயற்சியுடன் செயல்படுங்கள். புதிய பாதை வெற்றியாக அமையும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 1999

நினைவில் நிற்பவை – தொடர் 7
பெருமையைக் கெடுக்கும் பொறாமை
தேர்வில் முதன்மை பெற
சிந்தனைத்துளிகள்
தேர்வில் வெற்றிபெற இதோ வழிகள்
வாசகர் கடிதம்
10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?
வளமூட்டும் சிந்தனைகள்
கேள்வி – பதில்
சாதனையாளராக…
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.கவின் சிந்தனை
கவிதை