Home » Articles » கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்

 
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்


admin
Author:

பள்ளி, கல்லூரி தேர்வுகள் நெருங்கிக்கொண்டிருக்கின்றன. அடுத்த ஓரிரு மாதங்களில் முடிவுகள் வெளியாகிவிடும். இலட்சக்கணக்கான இளைஞர்களும், யுவதிகளும் தங்கள்படிப்பை முடித்து வெளிவருகிறார்கள். இதில் பொறியியல், மருத்துவம் போன்ற தொழில் கல்வி பயின்றவர்களும் அடங்குவர். ஆனால் படித்து வெளிவரும் இவ்வளவு பேருக்கும் வேலை உண்டா என்றால் நிச்சயமாக இல்லை என்ற பதில்தான். 100 கோடி மக்கள் தொகையை நெருங்கிக்கொண்டிருக்கும் நம் நாட்டில், உண்மையிலேயே வாய்ப்புகள் இல்லையா என்றால், வாய்ப்புகளோ ஏராளம்! ஏராளம்! இயற்கை அன்னை தன்னுள்ளே வளங்களை ஒளித்து வைத்திருக்கிறாள்! இரத்தத்தை வியர்வையாக்கி உழைப்போருக்குத் தனதுத செல்வத்தை அள்ளிக் கொடுக்கத் தயாராக இருக்கிறாள். ஆனால் அவ்வானு உழைப்பதற்குத்தான் நமது இளைய சமுதாயம் தயாராக இல்லை. வாழ்வின் அனைத்து வசதிகளையும் உழைக்காமல் அடைய வேண்டுமென்ற கூட்டம் தான் அதிகமாக இருக்கிறது.

அந்நிய நாட்டிலிருந்து நம் நாட்டில் பலதரப்பட்டதொழிலகங்கள், பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் கடந்த சில ஆண்டுகளல் அமைக்கப்பட்டுள்ளன. எதைக் கண்டு அவர்கள் இத்தொழிலகளை நம் நாடில் அமைக்கிறார்கள்? தயாரிப்புகளுக்கு சந்தை இல்லையென்றால் தொழிற்சாலைகள் அமைப்பார்களா? சற்றே சிந்தித்துப் பாருங்கள். மொத்த மகள் தொகையில் பாதிக்குமேல் நடுத்தர வர்கத்தினர், அவர்களின்தேவைகளோ ஏராளம். கடன் வாங்கியாவது வாழ்வின் அனைத்து வசதிகளையும் அடைந்தே தீரவேண்டம் என கண்டிப்பாக எண்ணுகிறார்கள். தங்களது எண்ணங்களை மேல் நோக்கி செலுத்துகிறார்களோ இல்லையோ தங்களின் தேவைகளை, வாழ்க்கைத் தரத்தை மேல் நாட்டவரைப்போல் ஆக்கிக் கொள்வதல் உறுதியாக இருக்கிறார்கள். தொழிற்கல்வி பயின்றவர்களும் அலுவலக வேலையைத்தான் விரும்புகிறார்கள். கல்லூரி படிப்பு முடிந்தால் வாழ்வில் படிப்பதற்கு வேறு ஒன்றுமே இல்லை. அனைத்தும் படித்து முடித்துவிட்டோம் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். வேலைக்குச் சேர்ந்ததும் அத்தோடு அவர்களது இலட்சியம் நிறைவுற்றதாக பலரும் நினைத்து விடுகிறார்கள்.

நம் நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு நமது பாடத் திட்டங்களிலுள்ள குறைபாடுகளை களைய வேண்டும் என்று பல ஆண்டுகளாக பலதரப்பினரும் குரல் எழுப்பிக் கொண்டு தானிருக்கிறார்கள். அது மக்கள் பிரதிநிதிகள் கையிலே, அரசாங்கத்தின் கையிலே இருக்கிறது. ஆனால் இளைஞர்களே உங்களது கையிலுள்ளதை செய்யத் தவறுகிறீர்களே! உங்கள் எண்ணங்களில், செயல்களில் மாற்றம் நிகழும்போதுதான் சமுதாய மாற்றம் ஏற்படும் என்பதை மறந்து விடுகிறீர்கள். அரசாங்கத்தையே நம்பிக்கொண்டிருந்தால் அரசாங்கம் எவ்வளவு பேருக்கு வேலை கொடுக்கும்? எங்கிருந்து சம்பளம் கொடுப்பது? உங்களுக்குச் சம்பளம் கொடுக்க தொழில்வளம் பெருக வேண்டுமல்லவா? தொழிற்சாலைகள் பெருக வேண்டாமா? இளைய சமுதாயமே… இன்றே, இப்பொழுதே முடிவெடுங்கள். சுய தொழில் ஒன்றை தொடங்குவது என்று!

அடுத்தவனுக்காக வேலை செய்து பிழைப்பதைவிட தாமே ஒரு தொழில் செய்து தமது தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல் தம்மால் வேறு சிலருக்கும் வேஐ கொடுக்க இயலும் சுய தொழில்மூலமாக! இளைஞர்களே! நன்றாக சிந்தித்துப் பாருங்கள். கல்வி தகுதி என்று ஒன்றும் தேவையில்லாத அதே சமயம் தமது உழைப்பையும் கற்பனை வளத்தையும் மட்டுமே நம்பி நடத்தும் தொழில்தான் சுய தொழில். இன்னும் அடுத்த இரண்டு மூன்று மூதங்களுக்கு எங்கு பார்த்தாலும் மாணவ, மாணவிகளுக்காக வழிகாட்டுக் காட்சிகளும் நடக்கும். அத்தகைய கருத்தரங்ககளிலே எந்தெந்தப் படிப்புக்கு என்னென்ன வேலைகள் கிடைக்கும் என்று காட்டுகிறார்களே தவிர சுய தொழில் குறித்து ஒன்றுமே இருக்காது. அப்படியே இருப்பினும் முக்கிய இடம் கொடுக்கப்படாமல் தான் இருக்கும்.

‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்’ என்ற கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் கருத்தாழம் மிக்க இந்த வரிகளை நோக்குங்கள். மத்திய மாநில அரசுகள் ஒவ்வொரு ஆண்டும் இளைஞர்கள் சுயதொழில்தொடங்க வேண்டும். வேலை வாய்ப்பை தொழில் மூலமாக ஏற்படுத்தத் தரவேண்டும் என்ற நோக்கத்தில் பல புதிய திட்டங்களை வகுத்து செயல்படுத்திக் கொண்டுதான் வருகிறார்கள். ஆனால் தேவையான அளவு இளைஞர்கள் இதிலே ஆர்வம் காட்டுவதில்லை. காரணங்ள் பல உள்ளன. அவற்றுள் பிரதானமாக.

1. இளைஞர்கள் வேலை வாய்ப்பைத் தெரிந்துகொள்ள காட்டும் ஆர்வத்தைப்போல் சுய தொழில் குறித்துக் காட்டுவதில்லை.

2. அரசுகளம், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பல சுய தொழில் திட்டங்களை தொடங்கி நடத்திவருகின்றனர். இத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை மாணவ மாணவிகளிடையே ஏற்படுத்துவதில்லை.

இதற்கெல்லாம் பெற்றோரையும் ஒரு காரணமாகச் சொல்ல்லாம். பெரும்பாலான பெற்றோர்கள் தமது பிள்ளைகள் படிப்பது ஒரு வேலைக்குச் செல்வதற்கு எனக்கூறி ளர்க்கிறார்களே தவிர, படிப்பது ஒரு தொழிலை உருவாக்குவதற்கு எனச் சொல்லி வளர்ப்பதில்லை. பெரும்பாலான மாணவர்கள் தாங்கள் எதற்குப் படிக்கிறோம் என்பதே தெரியாமல் படிக்கிறார்கள்; படித்தவர்களும் வேலைக்காகப் படிக்கிறார்களே தவிர, தொழில் செய்வதற்காக அல்ல. இவையெல்லாவற்றையும் விட அங்கே உடலுழைப்பு அதிகம் தேவைப்படுகிறது. அதைக் கொடுப்பதற்கு யாரும் தயாராக இல்லை. உழைப்பின்றி ஊதியம் எதிர்பார்க்கும் சமுதாயமாயிற்றே!

இந்தப் போக்கினை களைவதற்கு அரசாங்கம் ஒருபுறம் நீண்ட காலத் தீர்வாக கல்வி முறைகளை திருத்தியமைக்க முயல வேண்டும். மற்றொரு புறம் சுய தொழில் குறித்த விழிப்புணர்வை பள்ளி இறுதி வகுப்பிலிருந்தே இந்த துறை சார்ந்தவர்களும், வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தங்கள் அலுவலர்களை அனுப்பி பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஆவண செய்ய வேண்டும். இதனை யாரும் வெட்டி வேலை என்றோ, அதனால்மக்கு இலாபம் என்ன என்றோ எண்ணக்கூடாது. அவ்வாறு எண்ணினால், நம் கடமையில் தவறியவர்களாவோம்.

பெரும்பாலான அமைப்புகள் இச்செய்திகளை பள்ளி, கல்லூரிகளுக்குச்சென்று மாணவர்களிடையே பேசுவதை விரும்புவதில்லை. ஏனெனில் அதனால் பயனொன்றும் இல்லை என நினைக்கிறார்கள். திட்டங்கள் குறித்து தங்களிடம் தேடி வருபவர்களிடமே பல சமயங்களில் அதிகாரிகள் பேசவிரும்புவதில்லை. இந்த நிலைமாற வேண்டும். ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்’ என்று வெறும் பேச்சோடு நின்றால்பயனில்லை.மன்னர்களை உருவாக்குவதும் ஜனநாயகத்தில் நமது கடமையாகிறது. தொலை நோக்குடன் சிந்தித்து செயலாற்ற வேண்டும்.

இளைஞர்களே! நீங்கள் உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள் முதலில்! நீங்கள் மணி மகுடம் சூட்டத் தயாராகும் போது தானே, வெற்றி சூட இயலும்.

“தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு”

சோம்பலின்மை கல்வியடைமை ஒன்றை ஆராய்ந்து துணிந்து முடிவெடுக்கும் தன்மை ஆகிய மூன்று பண்புகளும் வேந்தனிடம் வேண்டும் என்று வள்ளுவன் சொல்கிறார். ஆகவே, இந்நாட்டு மன்னர்களே! நீங்கள் அனைவரும் தயாராகுங்கள். உங்களது தொழில் சாம்ராஜ்யத்தை நிறுவ! செங்கோலாட்சி புரிந்து உங்களது குடிகளயும் வளமுறச்செய்வீர்களாக!


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 1999

நினைவில் நிற்பவை – தொடர் 7
பெருமையைக் கெடுக்கும் பொறாமை
தேர்வில் முதன்மை பெற
சிந்தனைத்துளிகள்
தேர்வில் வெற்றிபெற இதோ வழிகள்
வாசகர் கடிதம்
10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?
வளமூட்டும் சிந்தனைகள்
கேள்வி – பதில்
சாதனையாளராக…
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.கவின் சிந்தனை
கவிதை