Home » Articles » உன் இளமையின் மீது ஆணவம் கொள்ளதே!

 
உன் இளமையின் மீது ஆணவம் கொள்ளதே!


ஆசிரியர் குழு
Author:

உன் இளமையின் மீது ஆணவம் கொள்ளதே!

இன்றைய வேலையை நாளைக்குத் தள்ளிப் போடாதே!

தேவையற்ற பொருள்களை தேடி அலையாதே!

தீயவனோடு எதையும் பேசாதே!

பெரியோர்களின் பேச்சை இலேசாக எண்ணாதே!

குடித்திருப்பவனுக்கும், பேத்தியகாரனுக்கும் அறிவுரை கூறாதே!

உன் பகைவன் சிறியவனாக இருந்திடினும் அவனை இலேசாக எண்ணாதே!

தகுதியற்றவனிடம் எதையும் பெற முயலாதே!

பழிப்பப்ட்டவனிடம் சேர்ந்திருக்காதே!

பிறவியிலே மூடனாக இருப்பவனுக்கு அறிவுரை கூறாதே!

பணியாட்களிடம் கிண்டலாகப் பேசாதே!

உடல் நலத்தில் கவலையற்று இருக்காதே!

நீ எதைப்படிக்கின்றாயோ, அதை விளங்கி அறிந்து படி…!

எதையும் தெரிந்தவன் போல் பேசாதே!

உன் பேச்சை மதியாதவனுக்கு எதையும் கூறாதே!

எல்லாரிடத்திலும் அவர்களின் நிலை அறியாது நட்பு கொள்ளதே.

உன்னுடைய இரகசியத்தை கேட்க உன் காதுகளைத் தாழ்த்தாதே!

பிறன் பொருள் விழையாதே!

பணியாளர்களை குற்றமின்றித் தண்டிக்காதே!

எவரையும் சபிக்காதே!

கடு மொழி கூறாதே!

ஏழையைப் பழிக்காதே!

மார்க்கத்தின் அடிப்படையில் செயல்படுவாயாக!

தகவல் : ஏ. முத்துராமலிங்கம், கணபதி, கோவை -6

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment