Home » Articles » 1 0 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?

 
1 0 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?


ஜெயச்சந்திரன்
Author:

– சக்சஸ் ஜெயச்சந்திரன்

விசுவாசம் வெற்றி ஏணியின் ஆறாம் படி

வெற்றி ஏணியின் ஆறாவது படியாகிய விசுவாசத்தில் காலூன்றுங்கள். இதை ஆழ்ந்த நம்பிக்கை என்றும் கூறலாம்.

நீங்கள் தேர்ந்து கொண்டுள்ள குறிக்கோளின் மீதும், அதை அடைய முனைந்துள்ள உங்கள் மீதும, நீங்கள் அடையப் போகும் வெற்றியின் மீதும், அதை அடைய முனைந்துள்ள உங்கள் மீதும், நீங்கள் அடையப் போகும் வெற்றியின் மீதும், அதற்குத் துணை நிறகிற இறைவன் மீதும், ஒருங்கிணைந்த ஆழ்ந்த நம்பிக்கையே விசுவாசம்.

உலகில் பெரும் சாதனைகளைச் செய்தவர்கள் எல்லோரும் ஆழ்ந்த நம்பிக்கையினால் தான் செய்து முடித்தார்கள்.

கண்பார்வை இழந்த, காது கேளாத பேசும் திறன் இல்லாத ஹெலன் கெல்லர், பின்னாளில் உலகம் முழுவதும் சுற்றிவந்து, சிறந்த சொற்பொழிவாளர் என்னும் புகழைப் பெற்றது அவரது விசுவாசம் தந்த வெற்றிதான்!

உலகின் 3ல் 2 பங்கு நிலப்பகுதியை ஆண்ட பிரிட்டிஷ் பேரரசை, கத்தியோ துப்பாக்கியோ இல்லாமலே எதிர்த்துப் போரிட்டு, 40 கோடி இந்தியருக்கு விடுதலை வாங்கித் தந்தது காந்தியடிகளின் ஆழ்ந்த நம்பிக்கதான்!

உங்கள் குறிக்கோளை நோக்கி முன்னேறுவதற்கு, குறிக்கோளை அடைமுடியும் என்று விசுவாசம் கொள்வதற்குப் பெரும் தடையாக இருக்கக் கூடியது உங்கள் தாழ்வு மனப்பான்மைதான்!

நீங்கள் படித்துப் பட்டம் பெறாதவரா? வறுமையில்வாடுபவரா? உடல் ஊனமுற்றவரா? அழகில்லாதவரா? தாழ்ந்த சாதியில் பிறந்தவிட்டோம் என்று தளர்ந்து போகிறீர்களா? அப்படியானால் வெற்றி பெறுவதற்கு இவையெல்லாம் தடையே இல்லை என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள்.

ஆயிரத்துக்கு மேற்பட்ட அறிவியற் கண்டுபிடிப்புகளைத் தந்த தாமஸ் ஆல்வா எடிசன். உலகப் பேரறிஞர் என்று போற்றப்படுகின்ற சாக்ரடீஸ், ஆங்கிலப் பெருங்கவிஞர் ஷேக்ஸ்பியர், கம்யூனிசத் தந்தை காரல் மார்க்ஸ் மோட்டார் காரைத் கண்டு பிடித்துச் செல்வத்தைக் குவித்த என்றிபோர்டு.

இவர்கள் முறையாகப் பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காதவர்கள்.

‘ஏழையாகப் பிறந்துவிட்டோம். ஏதுவும் சாதிக்க முடியாது’ என்று நினைக்கிறீர்களா?

அமெரிக்காவின் எஃகு மன்னன் என்று பெயர் பெற்ற ஆண்டரூ கார்னகி. இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற நாட்காசிரியர் பெர்னாட்ஷா, ஆங்கில நாவலாசிரியர் சார்லஸ்டிக்கன்ஸ்.

உலக வரலாற்றில் இருமுறை நோபல் பரிசு பெற்ற பெருமைமிகு பெண்மணி மேடம் க்யூரி, ஆகியோர் வறுமையில் வாடியவர்கள்தான்.

தாவர ஆராய்ச்சியில் தலைசிறந்து விளங்கிய லூதர் பர்பாங், தொடக்கத்தில் பிச்சை எடுத்து வாழ்ந்தவர் என்பதையும் அறிந்து கொண்டால் உங்களிடம் தாழ்வு மனப்பான்மை தலைகாட்டுமா?

உடல் ஊனமுற்றமையால் உள்ளம் நோந்து போயிருக்கிறீர்களா?

ஹெலன் கெல்லரை விட நீங்கள் எந்த விதத்தில் அதிகம் ஊனமற்றவர்?

இளம்பிள்ளைவாதத்தால் கால் ஊனமுற்ற பிராங்களின் டி. ரூஸ்வெல்ட், அமெரிக்காவின் ஜனாதிபதியாகி வெள்ளை மாளிகையை அலங்கரிக்கவில்லையா?

இன்னும் எதனால் தாழ்வு மனப்பான்மை கொள்கிறீர்கள்? வாஷிங்டன் கார்வல், மார்டின் லூதர்கிங், நெல்சன் மண்டேலா, டாக்டர் அம்பேத்கர் போன்றவர்கள் இனத்தைக் குறித்து தாழ்வு மனப்பான்மை கொண்டிருந்தால் செயற்கரும் செயல்களைச் செய்திருக்க முடியும்?

எடுத்த காரியத்தில் வெற்றி பெற இனிமோ, நிறமோ எக்காலத்திலும் தடையாக இருந்ததில்லை.

அமெரிக்காவில் நீக்ரோ சிறுவன் ஒருவன் தன் தாயுடன் கடைவீதிக்குப் போய்க்கொண்டிருந்தான். சற்று தூரத்தில் பலூன் வியாபாரி ஒருவன் ‘ ஹீலியம் ‘ நிரப்பிய பலூன்களை விற்றுக் கொண்டுருந்தான்.

அந்தப் பலூன்களையே உற்றுப் பார்த்துக் கொண்டுருந்த சிறுவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. ” ஏம்மா ! கறுப்ப பலூனும் மேலே பறக்குமா?”

அந்தக் குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை எவ்வளவு அழமாகப் பதிந்திருந்தது பாருங்கள் ! தாய் பதில் கூறினார். ” பலூன்காரனையே கேட்டுவிடலாம்வா !”

பலூன்காரன் பதில் சொல்லவில்லை. கருப்பு பலூன் ஒன்றை எடுத்தான். கையிலிருந்து பம்பிலிருந்து நிறைய ஹீலியத்தை நிரப்பினான். கறுப்பு பலூன் மேலே.. மேலே.. மேலே சிவப்பு, நீலம், பச்சை பலூன்களை விட உயரமாகச் சென்றது.

குழந்தை ஆனந்தமாகக் கைத்தட்டி ரசித்தது.

அப்போது பலூன்காரன் சொன்னான் ” தம்பி உயரே போவதற்கு நிறம் முக்கியமில்லை உள்ளே என்ன ஸ்டப் இருக்கிறது என்பது தான் முக்கியம்.”

எவ்வளவு பெரிய உண்மை! உங்கள் நிறமோ, இனமோ, மதமோ உங்களை முன்னேற்றத்தைத் தடுத்து விடவும் முடியாது. உங்கள் தாழ்வு மனப்பான்மையை நீக்கி விட்டு விசுவாசம் என்னும் ஹீலியத்தை நிரப்புங்கள்! நீங்கள் விரும்புகிற உயரத்திற்கு உங்கள் வாழ்க்கை என்னும் பலூன் செல்வதை நீங்களே காண்பிர்கள்!

இறைவன் மனிதனைத் தன் சாயலில் படைத்திருப்பதாகப் படிகிஇறீர்கள். சொல்கிறீர்கள்! ஆனால் அதன் முழுமையான பொருள் பற்றச் சிந்தித்திருக்கிறீர்களா?

சாயல் என்பது உடல் அமைப்பு, தோற்றம் இவற்றை மட்டுமா குறிக்கிறது? இறைவனுக்குள்ள உருவாக்கும் சக்தி, படைக்கும் சக்தி உங்களுக்குள் இருப்பதை அது குறிக்கவில்லையா?

சர்வ வல்லமையுள்ள இறைவன் உங்களுக்குள் வாசம் செய்யும் போது இந்த உலகில் உங்களால் முடியாதது என்ன இருக்கிறது? முடியாது என்று நீங்கள் எண்ணுவது உங்களைத்தன் சாயலில் படைத்த இறைவனை மறுதலிப்பதாகாதா?

இறைவன் நூற்றுக் கணக்கான வாக்குறுதிகளை உங்களுக்குத் தந்துள்ளார் அல்லவா? அதை நிறை வேற்ற வல்லவர் என்னும் உறுதியான வசுவாசம் உங்களுக்கு இருக்க முடியும்?

மணிக்கணக்கில் இறைவனிடம் மன்றாடிய பின்னர். துன்பங்களையும், பிரச்சினைகளையும் நினைத்துக் கலங்குவது விசுவாசமாகுமா? என்பதைக் குறித்து யோசித்துப் பாருங்கள்.

இறைவன் அளிக்கும் சக்தியைக் கொண்டு எல்லாவற்றையும் செய்து முடிக்கும் வல்லமை உங்களுக்கு உண்டு என்பதை ஆழமாக நம்புங்கள் அதுவே விசுவாசம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!,

மனிதன் மனதில் எண்ணிப் பார்க்கிற எதையும் ஆசைப்படுகிற எதையும் நிதர்சனமாக்க விசுவாசம் துணை செய்கிறது.

தாமஸ் ஆல்வா எடிசன் தன் விசுவாசத்தினால் தான் 10,000 தோல்விகளுக்குப் பிறகும் தொடர்ந்து உழைத்து மின்சார விளக்கைக் கண்டுபிடித்தார்.

காற்றிலுள்ள ஈதர், ஒலியதிர்வுகளைத் தாங்கி செல்லக் கூடியது என்று ஆழமாக நம்பியதால் தான் பல தோல்விகளுக்குப் பிறகும் விடாப்படியாக உழைத்து வானொலிப் பெட்டியைக் கண்டுபிடித்தார் மார்க்கோனி.

கொலம்பஸ் பூமி உருண்டையானது என்று நம்பினார். தொடர்ந்து மேற்கு நோக்கிப் பயணம் செய்தால் புதிய நிலப்பகுதியைக் கண்டு பிடிக்கால்ம் என்று ஆழமாக நம்பினார். அதனால் நம்பிக்கை யற்ற மாலுமிகளின் எதிர்ப்பையும் தாங்கி கொண்டு அவரால் மேலும் மேலும் பயணம் செய்து வெற்றிபெற முடிந்தது.

நீங்கள் கொண்டிருக்கிற குறிக்கோள் உங்களுக்கும், சமுதாயத் திற்கும் பெரும் நன்மை செய்யக் கூடியது. அதைச் சாதிக்கும் ஆற்றல் உங்களிடம் இருக்கிறது. கடவுளும், காலமும், உங்களோடு வாழும் சமுதாயமும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கின்றனர் என்னும் விசவாசத்தை மனதில் ஆழப் பதியுங்கள்.

சந்தேகம், பயம் ஆகியவற்றை முழுமையான விரட்டி விடுங்கள்.

பல மாதங்களாக ‘ ஒரு கோடி ரூபாய் உருவாக்கு’ என்று உங்கள் ஆழ்மனத்திற்குக் கட்டளை கொடுத்து வந்திருக்கிறீர்கள்.

ஒரு கோடி ரூபாய் சம்பாதித்தால் நீங்கள் வாழக்கூடிய அழகிய, பெரிய மாளிகைகளையும், பயணம் செய்யக்கூடிய விலையுயர்ந்த வாகனங்களையும், நீங்கள் மிடுக்கான உடையணிந்து செல்வதையும், உங்கள் மனைவி மக்கள் அணி கலன்களை அணிந்து அகமகிந்து வாழ்வதையும், வருத்தப்பட்டுப்பாரம் சுமப்பதையும், கற்பனைக் கண்கொண்டு மனச் சிந்திரமாக்கிப் பாருங்கள்!

தொடரும்…

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 1999

உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ
பங்குச் சந்தை
வாசகர் கடிதம்
வாழ்த்துகிறோம்
சிந்தனைத்துளி
ஆண்டுகளின் கூட்டுத்தொகை வெற்றி
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க.வின் சிந்தனை
உன் இளமையின் மீது ஆணவம் கொள்ளதே!
ஓய் கொசுவே நீ வாழி!
''எதையும் சாதிக்க முடியும் ''
தேக்க நிலையிலும் வெற்றி காணுவோம்
கேள்வி – பதில்
சிந்தனைத்துளிகள்
'' ஷார்ப்பான '' சாதனைகள்
1 0 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?
தயக்கம் வருவது எதனால்?