Home » Articles » பங்குச் சந்தை

 
பங்குச் சந்தை


குமார் V.N.C
Author:

– வி.என். சி. குமார்

பாங்குச்சந்தையைப் பற்றி நீங்களும் அறிந்து கொள்ளலாமே!

1. நல்ல கம்பெனிகளில் முதலீடு செய்து 3 வருடத்தில் இரட்டிப்பு லாபம் பெறலாம் என எண்ணுவோருக்கு பங்கு சந்தை ஒரு லாபகரமான
தொழில்.

2. பங்கு முதலீடு பேராசை கொள்வோர்க்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுதும் தொழில்.

3. பங்கு மாற்றம் 1773 – ல் லண்டனில் துவக்கப்பட்டது. இந்தியாவில் 1887 – ஆம் ஆண்டு நிறுவப்பட்டு 1956 -ல் அரசாங்கத்தால் ஒழுங்கு முறைப் படுத்தப்பட்டது.

4. வருடம்தோறும் பங்கு மார்க்கட்டில் இடம் பெற்றுள்ள கம்பெனிகளின் அரை ஆண்டு மற்றும் முழு ஆண்டு அறிக்கையில் காணப்படும்
லாப நஷ்டங்களை பொறுத்து பங்குகளின் விலை ஏற்றம், இரக்கம் வரும். எனவே நாம் அந்த ஆண்டிலேயே பங்குகளை விற்று லாபம்
பெறலாம். பங்கு மார்க்கட்டில் லாபம் குறைந்த பட்சம் மாத வட்டியாக 3% முதல் 5% வரை குறையவில்லாமல் எதிர் பார்க்கலாம்.

5. நாம் பங்குச் சந்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு சிறய ஆங்கில அறிவு இருந்தாலே போதுமானது.

6. பங்குச் சந்தை சம்பந்தமாக ஒரு ஆங்கில ( பைனான்சியல் நாளிதழ் ) பத்தரிக்கையை நாள்தோறும் சுமார் அரை மணி நேரம் நமக்கு ஓய்வான நேரத்தில் படித்து வந்தால், நமக்கு பங்குச் சந்தையில் இடம் பெற்றுள்ள கம்பெனியின் பொருளாதாரம் பற்றியும், அதன் வரவு செலவுகள் பற்றியும் தெரிந்து நாமே கம்பெனியில் திறனாய்வு செய்து கொள்ளலாம்.

7. இன்றைய உலகில் ஒவ்வொரு வியாபாரிக்கும் பொருளாதாரமும் நிர்வாகமும் இரு கண்கள் போன்றது.

8. நமது இந்தியாவில் பங்குச் சந்தையில் சுமார் நல்ல லாபம் ஈட்டும் 300 கம்பெனிகள். அவற்றில் சுமார் 50 கம்பெனிகளைப் பற்றி நாம்
தெளிவாக அறிந்து கொண்டால்கூட, போதுமானது. எப்படி நாம் சிறுவயதில் வாய்ப்பாட்டை மனதில் பதியச் செய்துகொண்டோமோ?
அதன்படி கம்பெனியில் பெயர்களை மனதில் பதியச் செய்தல் வேண்டும.

இப்படி கப்பெனியின் பெயர்களை எவ்வாறு மனதில் பதியச் செய்வது எனில் கம்பெனியின் பெயர்கள் ஏ.பி.சி.டி. என முறையே வரிசைப்
படுத்தி, அதன்படி ‘ ஏ ‘ யில் ஆரம்பிக்கும் கம்பெனியின் பெயர் மற்றும் முறையே, பி.சி.டி. என ஆரம்பிக்கும் கம்பெனியின் பெயர்கள் என
பிரித்து ஒவ்வொரு கம்பெனியின் பங்குகளின் விலை ஏற்றமான நேரத்தில் பங்குகளை விற்றும், விலை இறக்கமான நேரத்தில்
பங்குகளை விற்றும், விலை இறக்கமான நேரத்தில் பங்குகளை வாங்கியும் நாம் லாபம் பெறலாம்.

9. பங்குகளை வாங்குவதற்கும், விற்பதற்கும் ஓர் நல்ல புரோக்கர் தேவை. அவர் நேர்மையான தொழில் ஆலோசகரா என்பதை கணித்து,
அவரின் ஆலோசனையையும் பெற்று நமது கணிப்புப்படி நல்ல ஷேர்களை மேற்படியாரின் மூலம் வாங்கியும, விற்றும் பழகவேண்டும்.

10. நம் அரசு கூட பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு படிக்கும் காலங்களிலேயே பொருளாதராத்தைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டி
மேல்நிலைப்பள்ளியில் இரண்டாவது ஆண்டில் வணிகவியல் எனும் பாட புத்தகத்தில் எண் 8ல் பத்திரச் சந்தை என்கிற தலைப்பில்
அறிமுகப்படுத்தி உள்ளனர்.

கருத்துக்கள் சரியான என்பதை சிந்திப்போம், நல்ல கம்பெனியில் முதலீடு செய்வது நம் பணித்திற்கு என்றும் பாதுகாப்பு என்பதும் சரிதானா என்பதை சிந்திப்போம்.

 

5 Comments

 1. rajan says:

  உங்கள் கருத்துக்கு நன்றி

 2. raja s says:

  very good message thanks……condinue

 3. Saravanakumar says:

  Very useful message

 4. nanthakumar nanthan says:

  மிகவும் பயனுள்ள கருத்து அருமை

 5. சந்தை பற்றின குழப்பத்தில் இருக்கும் போது சற்று நிழலான விசயமாக தன்னம்பிக்கை தருவிதமான குறும்செய்தி மன திடம் தரும் விதமாக இருந்தது.

Post a Comment


 

 


January 1999

உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ
பங்குச் சந்தை
வாசகர் கடிதம்
வாழ்த்துகிறோம்
சிந்தனைத்துளி
ஆண்டுகளின் கூட்டுத்தொகை வெற்றி
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க.வின் சிந்தனை
உன் இளமையின் மீது ஆணவம் கொள்ளதே!
ஓய் கொசுவே நீ வாழி!
''எதையும் சாதிக்க முடியும் ''
தேக்க நிலையிலும் வெற்றி காணுவோம்
கேள்வி – பதில்
சிந்தனைத்துளிகள்
'' ஷார்ப்பான '' சாதனைகள்
1 0 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?
தயக்கம் வருவது எதனால்?