Home » Articles » சிந்தனைத்துளி

 
சிந்தனைத்துளி


admin
Author:

மனிதனின் மனம் எதைச் சிந்தித்து, உறுதியாக நம்புகிறதோ,
அதை உறுதியாக அடைந்தே தீரும்.

—————-
எல்லா மனிதர்களிடமும் சமமான திறமையே அடங்கிள்ளது. வெற்றி பெறுபவன் தன் திறமையை அதிக அளவில் பயன்படுத்திக் கொள்கிறான் மற்றவர்களுக்கு தங்களிடம் திறமை இருப்பது தெரிவதில்லை, தெரிந்தாலும் அதனைச்சரியாக கையாள்வதில்லை.

– கிம் வூ சூங்.
——————————-
வெற்றியையும் தோல்வியையும் நீங்கள் தான் உருவாக்கிக் கொள்கிறீர்கள். உங்களுடைய விதியைத் தீர்மானிப்பது நீங்களே. அதில் கடவுளுக்குப் பங்கில்லை.
– ஸ்ரீ சத்ய சாயிபாபா.
——————————-
பைசாவை நீங்கள் கவனித்தால் போதும்
ரூபாய்கள் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளும்.
பிராங்கலின்
தகவல் – ஏ.பிரகாசம், தாரமங்களம்
——————————–
என்னுடைய எல்லா வழிகளையும் முயற்சி செய்து பார்த்துவிட்டேன் என்ற உணர்வு உங்களுக்கு வரும்போது, ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள், எல்லா வழிகளும் இன்னும் தீர்ந்து விடவில்லை.
– ராபர்ட் ஷீலர்.
————————————————————————————–
எல்லாப் பறவைகளுக்கும் உணவை இறைவன் உறுதியாய்ப் படைத்திருக்கிறான். ஆனால் உணவை அவன் கூண்டில் கொண்டு வந்துபோடுவதில்லை.
—————————————————————————————————–
‘ உங்களால் முடியும் ‘ என்று நீங்கள் நம்பினால் உறுதியாக உங்களால் முடியும் என்பதும் உண்மை, ‘ உங்களால் முடியாது ‘ என்று நீங்கள் எண்ணினால் ‘ உங்களால் முடியாது ‘ என்பதும் உண்மை
– ஹென்றிஃபோர்ட்
——————–

” தாங்கள் சூழ்நிலையை மேம்படுத்திக்கொள்ள மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மனிதர்கள் பதற்றப்படுகிறார்கள். ஆனால், தங்களை மேம்படுத்திக் கொள்ள முடிவதில்லை. எனவே, சூழ்நிலையின் கைதிகளாக அவர்கள் வாழ்கின்றனர்”.
– ஜேம்ஸ் ஆலன்.
————————————
பயணமாக இருந்தாலும் சரி. ஓர் அடி எடுத்து வைத்துக் கிளம்பிய பின்புதான் பயணமே தொடங்குகிறது. அந்த முதலடிக்குப் பெயர்தான் முழு ஈடுபாடும் தன்னையே அர்ப்பணித்துக் கொள்வதும்!
————————————
” நேற்றைய நாட்கள் என்னிடம் இல்லை. காலம் அவற்றைக் கவ்விக் கொண்டு ஓடிவிட்டது. நாளைய நாட்களும் என்னிடம் இல்லை. காரணம், அவை உறுதியில்லை!ஆனால், இதோ என்னிடம் உறுதியாக இருப்பது இன்றைய நாள்! இன்றைய நாளை நான் வீண்டிக்க மாட்டேன்”.
– பெர்லீ ஈயேதன்.


Share
 

1 Comment

  1. natarajan.d says:

    very nice

Post a Comment


 

 


January 1999

உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ
பங்குச் சந்தை
வாசகர் கடிதம்
வாழ்த்துகிறோம்
சிந்தனைத்துளி
ஆண்டுகளின் கூட்டுத்தொகை வெற்றி
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க.வின் சிந்தனை
உன் இளமையின் மீது ஆணவம் கொள்ளதே!
ஓய் கொசுவே நீ வாழி!
''எதையும் சாதிக்க முடியும் ''
தேக்க நிலையிலும் வெற்றி காணுவோம்
கேள்வி – பதில்
சிந்தனைத்துளிகள்
'' ஷார்ப்பான '' சாதனைகள்
1 0 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?
தயக்கம் வருவது எதனால்?