Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

புத்தாண்டே வருக !

இதோ இன்னொரு புத்தாண்டு நமக்காக காத்திருக்கிறது. இப்போது நாம் மீண்டும் ஒரு முறை நம்மை சுய ஆய்வு செய்து கொள்வோம். நம்முடைய முன்னேற்றத்திற்கு எவ்வளவு உதவியாக இருக்கும் என்பதை நாம் அளவிடத் தெரிந்து கொள்ள வேண்டும.

நாம் கல்வி கற்ற காலத்தில் ஒவ்வொரு முறையும் தேர்வு அறையில் கேள்வித்தாள் கிடைத்தவுடன் அட்டா இந்த பகுதியை ஒரு முறை பார்த்தருந்தா இன்னும் நன்றாக எழுதலாமே, இதை பார்க்காமல் விட்டுவிட்டோமே என்ற பல எண்ணங்கள் தோன்றியதுண்டு. இந்த் எண்ணத்தை எழுதி வைத்து அடுத்த முறை பரிட்சைக்கு படிக்கும் முன் ஒரு முறை பார்த்திருந்தோமேயானால், அதை உணர்ந்து படித்திருந்தோமேயானால் உறுதியாக இம்முறை சிறப்பாகச் செய்ய முடியும். அங்கே உடனுக்குடன் மதிப்பெண் கிடைக்கும் ஆனால் வாழ்க்கைப் பாடத்தில்.

நாம் சென்ற ஆண்டுத் துவக்கத்தில் என்ன நினைத்தோம்? அதை எவ்வளவு தூரம் அடைந்துள்ளோம்? என்பதை ஆராய்ந்து பார்ப்பது அவசியம். நாம் நினைத்ததில் 90% அடைந்திருந்தால் நல்லது. நம்முடைய குறிக்கோளும் நாம் நடந்து கொண்டதும் சரி 50% என்றால் நாம் வகுத்த குறிக்கோள் தவறு அல்லது நாம் நடந்து கொண்டது சரியல்ல.

50% க்கு கீழ் என்றால் நம்மை மேலும் ஆராய வேண்டும் நம்முடைய கடந்த இரண்டு மூன்றாண்டு வரலாற்றை பார்த்து எங்கே தவறு நடந்தது? காரணம் என்ன? என்று பார்க்கவேண்டும். தேவைப்பட்டால் நம்மீது அக்கரை கொண்டவரிடம் அலோசித்து இவ்வருடம் அவ்வாறு நிகழாமல் தடுக்கலாம்.

நம்முடைய முன் அனுபவம், நமது சூழ்நிலை திறமையை முன் வைத்து நம்முடைய இவ்வாண்டு குறிக்கோளை முடிவெடுப்போம். மேலும் நம்முடைய சுயவளர்ச்சியைக் கணக்கிட நாம் புதிதாக படித்த நூல்கள், புதிதாக சந்தித்த நண்பர்கள், நாம் கடைபிடிக்கும் நல்ல பழக்கங்கள் போன்றவற்றை எழுதிவைத்து ஒப்பிட்டுச் செம்மைப்படுத்த வேண்டும்.

இது எப்போதும் வந்து போகும் சாதாரண புத்தாண்டாக இல்லாமல் நீங்கள் சாதனை படைக்கும் ஆண்டாக, உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தும் புத்தாண்டாக இருக்கட்டும்.

வாழ்த்துக்களுடன்
ஆசிரியர் குழு.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 1999

உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ
பங்குச் சந்தை
வாசகர் கடிதம்
வாழ்த்துகிறோம்
சிந்தனைத்துளி
ஆண்டுகளின் கூட்டுத்தொகை வெற்றி
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க.வின் சிந்தனை
உன் இளமையின் மீது ஆணவம் கொள்ளதே!
ஓய் கொசுவே நீ வாழி!
''எதையும் சாதிக்க முடியும் ''
தேக்க நிலையிலும் வெற்றி காணுவோம்
கேள்வி – பதில்
சிந்தனைத்துளிகள்
'' ஷார்ப்பான '' சாதனைகள்
1 0 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?
தயக்கம் வருவது எதனால்?