Home » Articles » 10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?

 
10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?


ஜெயச்சந்திரன்
Author:

– சக்சஸ் ஜெயச்சந்திரன் எம்.ஏ.

நம்பிக்கை வெற்றி ஏணியின் நான்காம் படி

10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிக்கும் முயற்சியில் நம்பிக்கை என்னும் நான்காவது படியில் கால் வைக்கிறீர்கள். முதிலில் உங்கள் குறிக்கோள் சிறந்தது என்னும் நம்பிக்கையை வளருங்கள். தவறான அல்லது நிறைவேறாத ஆசையை வளர்த்து விட்டோம் என்று நினைக்கிறீர்களா? உங்களால் எதையும் சாதிக்க முடியும்.

தேர்வு செய்துள்ள குறிக்கோள் தவறானது என்று சந்தேகப்படாதீர்கள். 1 கோடி ரூபாய் சேர்ப்பீர்களானால் நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் சகோதர சகோதரிகளும், நண்பர்களும், உறவினர்களும், உங்களுடன் வாழும் சமுதாயத்தினரும் நன்மையடையும்படி அதப் பயன்படுத்த வேண்டும் என்று கருதுங்கள். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் உணர்வோடு செல்வத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யுங்கள்.

பணம் எல்லாத் தீமைக்கும் வேர் அன்று. பணப் பேராசைதான் எல்லாத் தீமைகளுக்கும் வேர். ஆகவே நீங்கள் வரித்துக் கொண்டுள்ள குறிக்கோள் சிறந்தது சந்தேகமே கொள்ளாதீர்கள்!

1 கோடி ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்னும் உங்கள் குறிக்கோள் குறைவற்றது. பிழையற்றது என்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி மனதில் பதியுங்கள்!

பணம் சேர்ப்பது பிறரிடம் ஆதிக்கம் செலுத்தவோ, ஆடம்பர வாழ்க்கைக்காகவோ, பிறரை ஆக்கிரமிக்கவோ அல்ல! அந்த விருப்பத்தோடு பணம் சேர்ப்பவர்கள் முடிவில்பரிதாபமாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மனதில் இருத்துங்கள்.

அதே சமயம் சிறந்த அறிவுடையவர்கள், நல்ல பண்புடையவர்கள்கூட, பணத்தைச் சேர்த்து வைக்காமையினால் சமுதாயத்தில் அலட்சியப் படுத்தப்பட்டு, மரியாதை இன்றி வாழ்வது எதனால்? மனிதர்கள் அறிவைக்காட்டிலும், ஒழுக்கத்தைக் காட்டிலும் பணத்தயே பெரிதாகக் கருதுவதே இதற்குக் காரணம்.

பணம் இன்றி உணவு இல்லை. உடை இல்லை, உறையுள் இல்லை!

பண ஆசை வெறுக்கத்தக்கது போலவும், பண ஆசை கூடாது என்றும் உங்களால் உபதேசம் செய்வது எளிதாக இருக்கலாம். ஆனால் பணத்தின் மீது ஆசையில்லாமல் இருக்க முடியாது என்பதே உண்மை!

பணம் மகிழ்ச்சியைக் கொடுக்குமா? என்று பிறரைக் கேளுங்கள். தராது என்று பதில் வரும். இப்போது உள்ளதை விட இன்னும் கொஞ்சம் பணம் கிடைத்தால் மகிழ்ஞ்சி அடைவீர்களா? என்று கேட்டுப்பாருங்கள். நிச்சயமாக என்று பதில் வரும். இதுதான் உண்மையான நேர்மையான பதில்.

ஆகவே பணத்தைப் பற்றிய திட்டவட்டமான கண்ணோட்டம் உங்களிடம் இருக்கட்டும். பணத்தின் மீது ரகசியமான ஆசை வைத்துக் கொண்டே பண ஆசை இல்லாத்து போன்று மனிதன் இரட்டை வேடம் போடுவதால் தான் ஏமாற்று, மோசடி ஆகியவை சமுதாயத்தில் இடம் பெறுகின்றன.

நீங்கள் பணத்தைப் பற்றி நேர்மையான, உண்மையான கண்ணோட்டம் உடையவராக இருங்கள். இரட்டை வேடம் உங்களுக்குத் தேவை இல்லை.

நேர்மையாக அறவழியில் பொருளைத் தேடுவேன் என்றும், சேர்த்த பொருளில் பெரும்பங்களை சமுதாய நலனுக்கா பகிர்ந்தளிப்பேன் என்றும் முடிவு செய்யுங்கள்.

அடுத்து உங்கள் குறிக்கோள் உங்களால் அடையக் கூடிய ஒன்றுதான். சாத்தியமானது தான் என்று திட்டவட்டமாக நம்புங்கள். அடைய இயலாது, கற்பனை உலகில் வாழ்கிறார் என்று நண்பர்களோ, உறவினர்களோ, கடிந்து கொண்டால் அதை அலட்சியம் செய்யுங்கள். முடியும் என்று நம்புகிறவனுக்கு முடியாதது எதுவுமில்லை.

என்னால் முடியும் என்றுநினைத்தால் உங்களால் முடியும். முடியும் என்னும் நம்பிக்கை உங்கள் உள்ளத்திலும், உடலிலும் உயர்விலும் மாற்றத்தை விளைவித்து வெற்றிக்கு வழிவகுக்கிறது.

முடியும் என்று நினைக்கும் போது முடிப்பதற்குரிய அறிவும், திறனும், வழிகளும் உங்களிடம் வந்து ஒட்டிக் கொள்கின்றன. செய்வது எளிதாகிறது. தொடர்ந்து செய்ய உற்சாகம் பிறக்கிறது. படிப்படியாக ஆனால் உறுதியாக உங்களால் முன்னேற முடிகிறது.

முடியாது என்று நினைக்கும்போது, இருக்கும் வாய்ப்புக்கள் உங்களுக்குத் தெரிவதில்லை. உடல் வலுவிழந்து போகிறது. உள்ளம் சோர்வடைகிறது. உற்சாகம் மங்கிப்போகிறது. சந்தேகமும் பமும் உங்களைத் தொற்றிக் கொள்கின்றன. நீங்கள் தொடங்கும்போதே தோற்றுப் போகிறீர்கள்!

ஆகவே எதுவும் என்னால் முடியும் என்றும் நம்பிக்கையை வளருங்கள்.

எந்தச் செயலுக்கும், முதல் தடை, பெரிய தடை மனத்தடைதான்.

இதுவரை எந்தச் செயலைச் செய்யும்படி கூறப்பட்டாலும், சாத்தியமில்லை என்பதற்குரிய ஆதாரங்களையும் காரணங்களையுமே சிந்திக்கும் பழக்கம் இருந்தால் இன்றே அதை ஒழித்து விடுங்கள்.

மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதற்கு அதிக முக்கியத்துவம் தராதீர்கள்.

சராசரி மனிதர்கள் தங்கள் அறிவுக்கு எட்டாத்தை, தங்கள் அனுபவத்தில் காணாததை, தங்களால் முடியாத ஒன்றை மற்றவராலும் முடியாது, இயலாது என்று கூறுவார்கள்.

ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் ஒருவர் பேசுவதைக் கேட்கும் கருவி ஒன்று செய்வேன் என்று மார்க்கோனி சொன்னபோது இயலாது என்று மற்றவர்கள் சொல்லவில்லையா? ஏன் அவருக்கு மன நோய் என்று முடிவு செய்து பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்க்கவில்லையா?

பூமி தட்டையானது என்று எல்லோரும் நம்பிக்கை கொண்டிருக்கக் அதை உருண்டையானது என்று நிரூபிக்க முயன்ற கலிலியோவை நீதி மன்றத்தில் நிறுத்தி மரண தண்டனை விதிக்கவில்லையா?

மாடு, குதிரை எதுவும் இழுக்காமல் தானே நகர்ந்து செல்லும் ஊர்தி ஒன்று செய்வேன் என்று கூறிய ஹென்றிபோர்டு அவர் காலத்தவரால் ஏளனம் செய்யப்பட்டார் அல்லவா? அந்த ஏளனத்தையே தன் உழைப்பிற்கு உரமாகிக்கொண்டு இந்த பூமிப் பந்தை ஆட்டோமொபைல் வாகனங்களால் வரிந்து கட்டுவேன்! என்றுசவால் விட்டுச் சாதிக்கவில்லையா?

வானத்தில் ஊர்ந்து செல்லும் விமானத்தைக் கண்டு பிடிக்க உழைத்த க்ளென்மார்ட்டினைப் பார்த்து மனிதன் வானத்தில் பறக்க வேண்டும் என்று இருந்தால் கடவுளே அவனுக்கு பறவைகளைப் போன்று இறக்கைகளைக் கொடுத்திருக்க மாட்டானா? ஆகவே வானத்தில் பறக்க வேண்டும் என்னும் ஆசையைக் கைவிடு! என்று மற்றவர்கள் கடிந்து கொள்ளவில்லையா? வானத்தில் பயணம் செய்யும் மனிதனின் ஆசை இன்று நிறைவேறியுள்ளதா இல்லையா?

ஆகவே நிகழ்காலத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு பார்ப்பவர்கள் எதையும் முடியாது என்றே சாதிப்பார்கள். அவர்களைக் கண்டு மனத்திற்குள் சிரியுங்கள்!

ஓட்டப் பந்தயத்தில் 100 மீட்டர் தூரத்தை 20 நொடியில் கடப்பதே ஒரு காலத்தில் சாதனையாகக் கருதப்பட்டது. 18 நொடியில் ஓடிக் கடப்பேன் என்று கூறிய பொழுது சாதியமில்லை என்றார்கள். 18 நொடியில் ஒருவர் ஓடிக் கடந்தபொழுது சாத்தியம் என்று ஏற்றுக் கொண்டார்கள். 16 ஓடமுடியும் என்பதை மறத்துப் பேசினார்கள். அதையும் ஒருவர் சாதித்துக் காட்டினார். தற்போது 100 மீட்டரை 10 நொடிக்கும் குறைந்த நேரத்தில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே நேற்று சாத்தியமில்லாத்து இன்று சாத்தியமாகும். இன்று சாத்தியமில்லாத்தை நாளை சாதிக்க முடியும். தன்னால் முடியும் என்று நினைக்கும் மனிதனுக்கு எதுவுமே சாத்தியமே!

மனிதன் தன் மனதில் நினைத்துப் பார்க்கக் கூடிய எதுவும் சாத்தியமானதே. ஆனால் நீங்கள் உறுதி மிக்க மனமும். ஊக்கம் மிகுந்த உழைப்பும் உடையவரா என்பதே கேள்வி!

தொடரும்…

 

4 Comments

 1. S.Rasiya says:

  இ நீட் job

 2. MAYAVAN says:

  சூப்பர்… தங்க யு சோ மச்
  தேங்க்ஸ் எ லோட்

 3. கார்த்திகேயன் மணி

 4. Nanthakumar says:

  Super sir thank you very much.

Post a Comment


 

 


November 1998

தன்னம்பிக்கை முத்துக்கள்
சிந்தனைத் துளிகள்
நூல் அறிமுகம்
கோவை தன்னம்பிக்கை இதழ் நடத்திய சுயமுன்னேப் பயிலரங்கம்
பத்திரிகைகள் பாராட்டுகின்றன
10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?
வாசகர் கடிதம்
உழைப்பு
ஆலோசனைப் பகுதி
கவலை "No" தன்னம்பிக்கை "Yes"
சிகரம்
நினைவில் நிற்பவை
உரிமையும் கடமையும்
இளைஞனுக்கு வாழ்வு செழிக்க வழிகாட்டி
சிந்தனைத்துளி
மனித உறவுகள்
முன்னேற்றப் பாதை
சோம்பேறி யார்?
உள்ளத்தோடு உள்ளம்