Home » Articles » வாசகர் கடிதம்

 
வாசகர் கடிதம்


admin
Author:

சந்திரா மனோகர் அவர்கின் ‘நம்பிக்கை’ கவிதை எங்களையும் ஒரு பீனிக்ஸ் பறவையாக்கியது. தன்னம்பிக்கை இதழ் இருக்கும் வரை எங்கள் தன்னம்பிக்கையும் குறையாது.

ஆர். சக்தி வேலவன்,
காசிபாளையம்.

எப்படித்தான் உங்களைப் பாராட்டுவது எனத் தெரியவில்லை. உருக்கமான அறிவுரைகள், தேவையான விளக்கங்கள், எத்தனையோ சினிமா புத்தகங்கள் பார்த்தபின், அமைதியாக உலவும் ‘தன்னம்பிக்கை’ இதுவரை என் கண்களுக்குத் தெரியவில்லை. சென்ற இதழ் படித்தேன் ஆச்சரியமாக நின்றேன்.

கருணா. குண சேகரன்,
கோவை – 38

குடும்பப் பிரச்சினை, அலுவல் பிரச்சினை என்று மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் பிரச்சினை, ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏற்படுவது இயல்பு. அப்பிரச்சினைகளைச் சமாளிப்பது எப்படி என்பதை கட்டுரை அழுகுபட எடுத்துக் காட்டியது. நம்பிக்கை கவிதை சிறப்பு.

அ. கிருஷ்ணகுமார், பு. புளியம்பட்டி.

அக்டோபர் இதழில் வெளியான டேல் கார்னிகியின் ‘உங்களைப் பற்றிய விமர்சனங்களைச் சமாளிக்க எட்டு வழிகள்’ மற்றும் காமாட்சி பக்தன் எழுதிய ‘தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள எளிய வழிகள்’ ஆகியன மிகவும் அருமையாக இருந்தன.

எஸ். சத்தி விஜயா, முள்ளாங்கரை.

டாக்டர் ஜி. இராமநாதன் அவர்கள் எழுதும் முன்னேற்றப் பாதை தொடரில் மனவலிமை பகுதி மிகவும் அருமை. தொடரைத் தொடர்ந்திட, ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

பூவை. ஜி. மகாலிங்கம்.

பூவாளூர்.

அக்டோபர் இதழில் வெளியான உள்ளத்தோடு உள்ளம் அருமை, சிந்தனையின் அருமை மற்றும் குறிக்கோளின் அருமை ஆகியவற்றை தெளிவாக அறிய வைத்தது நன்றி.

எஸ். முருகேசன், திருப்பூர்.

திரு K.K. இராமசாமி அவர்களின் நினைவில் நிற்பவை தொடர் எங்களைப் போன்ற இளைஞர்கள் பிற்காலத்தில் வளம் பெற ஓர் அடிக்கல்லாக அமைகின்றது.

K. தேவராஜ். அருகம்பாளையம்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 1998

தன்னம்பிக்கை முத்துக்கள்
சிந்தனைத் துளிகள்
நூல் அறிமுகம்
கோவை தன்னம்பிக்கை இதழ் நடத்திய சுயமுன்னேப் பயிலரங்கம்
பத்திரிகைகள் பாராட்டுகின்றன
10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?
வாசகர் கடிதம்
உழைப்பு
ஆலோசனைப் பகுதி
கவலை "No" தன்னம்பிக்கை "Yes"
சிகரம்
நினைவில் நிற்பவை
உரிமையும் கடமையும்
இளைஞனுக்கு வாழ்வு செழிக்க வழிகாட்டி
சிந்தனைத்துளி
மனித உறவுகள்
முன்னேற்றப் பாதை
சோம்பேறி யார்?
உள்ளத்தோடு உள்ளம்