Home » Articles » உரிமையும் கடமையும்

 
உரிமையும் கடமையும்


admin
Author:

– டாக்டர் பெரு. மதியழகன்

கடமை ஆற்றுவது மட்டுமே பணிசெய்பவர்களின் பணி என்ற நிலைமாறி உழைப்பவர்கள் உரிமைபெற வேண்டும் என்ற முழக்கம் உலகெங்கும் ஒலிக்கத் தொடங்கியது. அதுவரை அடிமைகளாக, ஆமைகளாக, ஊமைகளாக, பொட்டுப் பூச்சிகளா உண்மைத்தேரைகளாய்க் கிடந்தவர்கள் விழிப்புற்றார்கள். தங்கள் கைகளில் பூட்டப்பட்டிருப்பது விலங்குகள் என்று கூடத் தெரியாமல் அதையே அணிகலன்களாக நினைத்துக் கொண்டிருந்தவர்கள் உண்மையை உணரத் தொடங்கினார்கள். இயக்கங்கள், சங்கங்கள், அமைப்புகள் தோன்றி வளர்ந்தன. அடுக்குமுறைகளை எதிர்த்து மக்கள் அணிவகுத்தார்கள்.

உரிமை வேட்கை:

உலகெங்கும் நிகழ்ந்த புரட்சிகள் உறங்கிக்கிடந்தவர்களைத் தட்டியெழுப்பியது. உலகத் தொழிலாளரகளே ஒன்றுபடுங்கள் என்ற முழக்கம். பாதிக்கப்பட்ட ஊழியர்களை, உரிமை மறுக்கப்பட்டவர்களை, சுரண்டப்பட்டவர்களை ஒன்று திரள வைத்தது. சங்கங்கள் தோன்றி வளர்ந்தன. உரிமை வேட்கை ஓங்கி வளர்ந்தது. தங்கள் நியாயமான உரிமைகளை ஆளுவோரிடம் போராடிப் பெற்றார்கள். ஆடிக்கறப்பதை ஆடியும்,பாடிக் கறப்பதை பாடியும், அடித்துக்கறப்பதை அடித்தும் பெற்றார்கள். தொழிற் சங்கங்கள் ஊழியர் அலுவலர் சங்கங்கள் தோன்றி வளர்ந்ததன் பயனாக உரிமைகளப்பெற்று மகிழ்ந்தார்கள். விடுப்பு, ஊதிய உயர்வு ஓய்வூதியம், பதவி உயர்வு, மருத்துவ வசதி என ஊழியர்களுக்கு இன்னும் எத்தனையெத்தனையோ சலுகைகளையும் உரிமைகளையும் பெற்றுத் தந்தது சங்கங்கள்தான்.

போராட்ட நெறி:

நமது நாட்டில் எல்லாச் சங்கங்களும் அகிம்சை நெறியான அமைதியான போராட்ட நெறி நின்றுதான் போராட வெற்றி பெற்றார்கள். அந்த நிலை இன்று மாறிவிட்டது. போராட்டம் என்ற பெயரால் பொதுச் சொத்துக்கள் நாசமாக்கப்படுகின்றன. மரங்களை வெட்டி சாலைகளின் குறுக்கே போடுதும், பாலங்களை உடைப்பதும், பேருந்துகளை எரிப்பதும், கடைகளைச் சூறையாடுவதும் வழக்கமாகிவிட்டன. உரிமக்காகப் போராடுவது எப்படி நமது உரிமையோ அப்படியே பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்காமல் இருப்பதும், பொது அமைதிக்கு குந்தகம் நேராமல் இருப்பதும், பொது மக்களுக்குப்பாதிப்பு ஏற்படாமல் போராடுவதும். அவற்றை நமது கடமையாக நினைக்க வேண்டும். காந்தியடிகள் அப்படித்தான் நமது நாட்டின் விடுதலைப் போராட்டத்த முன்னெடுத்துச் சென்றார். தந்தை பெரியார் அப்படித்தான் சமூக விடுதலைப் போராட்டங்களை நடத்தினார். எனவே போராட்ட உணர்வு மழுங்கிவிடக் கூடாது. அதே நேரத்தில் போராட்ட நெறி தவறிவிடக் கூடாது.

கடமைமறந்தோம்: உரிமைகளைப்பெற்றோம். சலுகைகளை அனுபவிக்கத் தொடங்கினோம். ஆனால் கடமைகளை மறக்கத் தொடங்கினோம். பொதுவாகவே இன்றைக்கு நாடெங்கும் எல்லாத்துறைகளிலம் எல்லா மட்டங்களிலும் கடமையாற்றுவது நமது கடமை என்ற உணர்வும், பொது ஒழுக்கமும், அறவுணர்வும் குன்றிவருகின்றன.

வெட்டிப்பேச்சு:

மாதந்தோறும் கைநிறைய ஊதியம் வாங்கும்போது இந்த ஊதியம் பெறத்தக்க அளவு நாம் உழைத்திருக்கிறோமோ? என்று எண்ணிப் பார்க்க வேண்டும். இப்போதெல்லாம் அலுவலகத்தில் வேலைநேரத்தில் தூங்கி வழிகிறவர்களும், வீண்பேச்சு பேசி காலத்த வெட்டியாய்க் கழிக்கிறவர்களும், அதிகமாகிவிட்டார்கள். இந்த வெட்டிப்பேச்சு வீர்ர்கள் தாங்கள் கெடுவதோடு ஒழுங்காக வேலை செய்பவர்களையும் விடுவதிலை. அவசரமாக முக்கியமாக முடிக்க வேண்டிய வேலையைச் செய்து கொண்இருப்பவரிடம் சென்று ஊர் கதைகளையும், உதவாதச் செய்திகளையும், அரசியல், திரைப்படம் என உப்பு சப்பில்லாதவற்றையும், ஆற்றுகின்ற பணிக்கு அவசியமில்லாததையும் பேசி இந்த வெட்டிப் பேச்சு வீரர்கள் பிறர் நேரத்தையும் கொன்று விடுகிறார்கள். இவர்கள் ஒருவகை.

மற்றொரு வகையினர் எப்போது போய் பார்த்தாலும் அவர்கள் இருக்கையில் அவர்களைப் பார்க்க முடியாது. எங்கே இருப்பார்கள் என்றால் டீக் கடையில், கேண்டீனில் இருப்பார்கள். அரைமணி நேரம் வேல பார்த்தால் ஒரு மணிநேரம் டீக் கடையில் இருப்பார்கள். டீ குடிக்கக் கூடாது என்பதல்ல. ஒரு நாளைக்கு 8 மணி நேரத்தில் நான்கு முறை எட்டு முறை டீ குடிக்கப் போனால் கடமையாற்றுவது எப்போது. ஒவ்வொரு நாளும் எத்தனை மணி நேரம் உழைக்கிறோம் என்று சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

புறங்கூறித்திரிவோர்:

தாங்கள் செய்கற தவறை மறைப்பதற்காக மற்றவர்கள் மேல் பழிபோட்டு தனக்கு மேலே இருப்பவர்களிடம் போய் ஒழுங்காக வேலை பார்க்கின்ற ஊழியரைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லித் தன்னை காப்பாற்றிக் கொள்வதாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள் கடமை மறந்தவர்களாவர். இதகையவர்கள் எல்லா காலத்திலும் தப்பித்துக் கொள்ள முடியாது.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். இவர்களுக்கு மொட்டைக் கடிதம் எழுதுவதே வேலை. நன்றாக பணிபுரிகிறவர்களைக் கூட இவர்கள் விட்டு வைப்பதில்லை. அமைதியான நிறுவனங்களில் இத்தகையவர்கள் சலசலப்பை உண்டு பண்ணி சுமூகமான செயல்பாடுகளுக்குக் குந்தகம் விளைவித்துவிடுகிறார்கள். இவர்கள் கடமை மறந்தவர்கள் மட்டுமல்ல; காரியங்களைக் கெடுப்பவர்களும் ஆவர்.

மேலும் சிலர் அதிகாரிகளிடத்தில் நெருக்கமான தொடர்புடையவர்கள் என்ற காரணத்தினாலேயே வேலை செய்யாமல் அதிகார இந்த வேலை செய்யச் சொன்னார். அந்த வேலை செய்யச்சொன்னார் என்று இல்லாத வேலைகளை கற்பித்துச் சொல்லி அவர்களுக்கு உரிய வேலையைச் செய்யாமல் சுற்றிக் கொண்டிருப்பார்கள். இத்தகையவர்கள் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும். கடமையாற்றுவது தங்கள் கடமை என்பதை உணர வேண்டும்.

மாறுதல்:

பொது நிறுவனங்களில், பல கிளைகள் இருக்கிற அமைப்புகளில் பணியாற்றுகிறவர் எவராயினும் மாறுதலுக்கு உள்ளாவது என்பதுத வழக்கமான ஒன்றுதன். ‘என்னை மாறுதல் செய்துவிட்டார்களே’ என்று பணிபுரியாமல் இருப்பது நியாயமாக்காது. மாறுதலுக்கு உள்ளாக்கப்படுகிற ஒருவர் வயது முதிர்ந்த பெற்றோர்கள் வயதுக்கு வந்த பிள்ளைகள், குழந்தைகள் கல்வி இப்படி பல்வேறு தொல்லகளுக்கு ஆளாக்க் கூடும். உண்மைதான். அதற்கு என்ன செய்யவேண்டும்? மாறுதல் அளித்த இடத்தில் சிரமங்களையும் தாங்கிக்கொண்டு நன்கு கடமையைச் செய்து வருவதும், பிறகு உரிய அலுவலரை அணுகி நிலைமையை எடுத்துச்சொல்லி மாறுதல் கேட்பதுவுமே முறையாகும். அதை விடுத்து என்னை மாறுதல் செய்துவிட்டார்கள். நான் ஒரு வேலையும் செய்யப் போவதில்லை!’ என்று சபதமேற்பவர்களும்,மாறுதல் செய்த அதிகாரியை தரக்குறைவாக அர்சனை செய்பவர்களும் உண்டு. இது அதிகாரிகள் காதுக்கு எட்டும் போது மேலும் வெறுப்படையவே செய்வார்கள். இதனால் சிக்கலுக்குத் தீர்வு வருவதற்கு பதில் சிக்கல் மேலும் பெரிதாகும். ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’, ‘நுணலும் தன் வாயால் கெடும்’ ‘யாகவாராயினும் நாகாக்க’ போன்ற கருத்து மணிகளை நினைவில் வைத்துக் கொண்டு கடமையாற்றுவே தங்கள் சிக்கல்களுக்கு நல்ல தீர்வாகும் என்பதை உணர வேண்டும்.

விடுப்பு:

விடுப்பு அனுபவித்துக்கொள்வது ஒவ்வொருவரின் உரிமை. மிகவும் நெருக்கடியான நேரத்தில் அவசியத்தின் பொருட்டு ஊழியர் விடுப்பு கேட்கும் போது அதை மறுத்து தன் அதிகாரத்தை அலுவலர் காட்டிக்கொள்வது மனித்த் தன்மை ஆகாது. இப்படிச் செய்வதால் நன்கு கடமையாற்றுகிறவர்கள் கூட பல முறை பாதிப்புக்கு ஆளாகும்போது வெறுப்படைந்து தங்கள் இயல்பை மாற்றிக் கொள்வதுண்டு. எனவே, பணியாளர்கள், கெடுவதற்கு அலுவலர்கள் காரணமாகிவிடக் கூடாது. அதேபோல அவசர அவசியப் பணிகள் அலுலகத்தில் இருக்கும்போது அதைத் தட்டிக் கழிப்பதற்காகவே விடுப்பு போட்டுவிட்டுச் செல்வது கடமை உணர்வுடயவர்கள் செய்யக் கூடிய காரியமாகாது.

தொடரும்…


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 1998

தன்னம்பிக்கை முத்துக்கள்
சிந்தனைத் துளிகள்
நூல் அறிமுகம்
கோவை தன்னம்பிக்கை இதழ் நடத்திய சுயமுன்னேப் பயிலரங்கம்
பத்திரிகைகள் பாராட்டுகின்றன
10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?
வாசகர் கடிதம்
உழைப்பு
ஆலோசனைப் பகுதி
கவலை "No" தன்னம்பிக்கை "Yes"
சிகரம்
நினைவில் நிற்பவை
உரிமையும் கடமையும்
இளைஞனுக்கு வாழ்வு செழிக்க வழிகாட்டி
சிந்தனைத்துளி
மனித உறவுகள்
முன்னேற்றப் பாதை
சோம்பேறி யார்?
உள்ளத்தோடு உள்ளம்