Home » Articles » மனித உறவுகள்

 
மனித உறவுகள்


கவிதாசன்
Author:

– கவிஞர் கவிதாசன்

பரந்த வானத்தின் கீழ் நீங்கள் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும். அவ்வாறு சாதிக்க ஒரே ஒரு வழிதான் உள்ளது. அந்த வழிதான் நீங்கள் நினைப்பதைச் செய்ய மற்றவர்களை ஊக்குவிப்பது, அல்லது நீங்கள் நினைப்பதையே மற்றவர்களையும் நினைக்க வைப்பது. மற்றவர்களின் மனம் உங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். இதில் நீங்கள் வெற்றிபெற்றுவிட்டால் வாழ்க்கையே வெற்றிதான். மறந்துவிடாதீர்கள் – அந்த ஒரே வழி அன்பு வழிதான்.

கத்தி முனையில் ஒருவருடைய காரைப் பெறலாம்; வேலை நீக்கம் செய்துவிடுவேன் என்று மிரட்டிப் பணியாளர்களை பணிய வைத்து வேலை வாங்கலாம்; உங்கள் குழந்தைகளைப் பயமுறுத்தி நீங்கள் சொல்வதைச் செய்ய வைக்கலாம். ஆனால் இவையெல்லாம் உங்கள் கண் பார்வை இருக்கும் வரை தான் நடக்கும். உங்கள் பார்வை படிவில்லை என்றால் அவர்களின் போக்கு தலைகீழாக மாறிவிடும். பெரும்பாலும் உங்கள் விருப்பத்தையும் ஆவலையும் பூர்த்தி செய்ய முயல்வதை விடுத்து, செயலைச் செய்யாமல் விடுவதற்கான காரணங்களைதான் தேடிக் கொண்டு இருப்பார்கள். ஆகவே கத்தி முனையிலும் அச்சுறுத்தலிலும் காரியம் சாதிப்பது நிலையானதும் அல்ல. நிம்மதியைக் கொடுக்கக் கூடியதும் அல்ல! ஆகவே உங்கள் அணுகுமுறையும், உத்தரவுகளும், அதிகாரம் கலந்ததாக இருக்குக் கூடாது. அன்பு மிகுந்ததாக இருக்க வேண்டும்.

அவரவர்களின் தேவை என்னவோ அதைத அறிந்து அதைக்கொடுப்பதன் மூலமே நீங்கள் விரும்பும் எதை வேண்டுமானாலும் செய்து வெற்றியினைக் குவிக்க முடியும். ஒவ்வொருவரும் எதைத எதிர்பார்க்கிறார்கள் என்ற கேள்விக்கு மனோத்த்துவ மேதை சிக்மண்ட் பிராய்டு (Sigmund Freud), “ஒவ்வொருவரும் இரு தேவைகளை பூர்த்தி செய்யும் எதிர்பார்ப்புடனேதான் வேலை செய்கிறார்கள்”. 1. உடல் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கம் 2) உயர்ந்தவராக திகழும் ஆவல் (Desire to be Great). மேலும் அமெரிக்கத் த்த்துவ ஞானி ஜான் டேவ் (John Devey) “இயற்கையாகவே ஒவ்வொரு மனிதனிடமும் அவனுடைய மன ஆழத்தில்பதிந்துள்ள ஒரே ஒரு தேவையான, முக்கியமானவராகத் திகழ வேண்டும் என்ற ஆவலை ( Desire to be important)” பூர்த்தி செய்யவே அவன் உழைக்கிறான் என்கிறார்.

அப்படி முக்கியமானவராகத் திகழ ஒவ்வொருவரும் என்னதான் எதிர்பார்க்கிறார்கள். அதவர்களின் தேவைதான் என்ன? ஆசைதான் என்ன? பெரும்பாலும் ஒவ்ஒருவருக்கும் இருக்கும் தேவைகள் கீழ்க் கண்டவைகளை உள்ளடக்கியதாகவே இருக்கும்.

1. உணவு 2. உறக்கம் 3. ஆரோக்கியம் 4. பணம் 5. எதிர்கால வாழ்க்கை 6. குழந்தைகளின் எதிர்காலம் 7. முக்கியமானவர் என்ற உணர்வு என்று பட்டியலிட்டுக் கொண்டே செல்ல்லாம். மேற்சொன்ன எல்லாத் தேவைகளிலும் ‘முக்கியமானவராகத் திகழுதல்’ தான் தலையான தேவையாகும். மனோதத்துவ மேதை சிக்மண்ட் பிராய்டு கூறும் ‘உயர்ந்தவராகத் திகழுதல்’ என்பதும் தத்துவஞானி ஜான்தேவ் கூறும் ‘முக்கியமானவராகத் திகழுதம்’ என்பதும் ஒன்றாகவே தென்படுகிறது. ஆகவே ஒவ்வொருவருக்கும் ‘தான்’ முக்கியமானவர் என்ற ஆழ்மனத் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக உங்கள் நடத்தை, வார்த்தை, பழக்கம், உத்தரவு ஆகியவை அமைந்தால் உங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்வதற்காக அவர்களாகவே முன் வருவார்கள். செயலை முடித்துக் கொடுப்பார்கள்.

தொடரும்….


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 1998

தன்னம்பிக்கை முத்துக்கள்
சிந்தனைத் துளிகள்
நூல் அறிமுகம்
கோவை தன்னம்பிக்கை இதழ் நடத்திய சுயமுன்னேப் பயிலரங்கம்
பத்திரிகைகள் பாராட்டுகின்றன
10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?
வாசகர் கடிதம்
உழைப்பு
ஆலோசனைப் பகுதி
கவலை "No" தன்னம்பிக்கை "Yes"
சிகரம்
நினைவில் நிற்பவை
உரிமையும் கடமையும்
இளைஞனுக்கு வாழ்வு செழிக்க வழிகாட்டி
சிந்தனைத்துளி
மனித உறவுகள்
முன்னேற்றப் பாதை
சோம்பேறி யார்?
உள்ளத்தோடு உள்ளம்