Home » Articles » முன்னேற்றப் பாதை

 
முன்னேற்றப் பாதை


இராமநாதன் கோ
Author:

– டாக்டர் ஜி. இராமநாதன், எம்.டி..,

உங்களின் தனித்தன்மை ( Personality) என்ன?

பொன்னம்பலம் தனது இரண்டு புதல்வர்களையும் அழைத்துக் கொண்டு ஜோதிடரிடம் செல்கிறார். மூத்தவருக்கு நாற்பது வயதாகிறது. இளையவருகு முப்பத்தைந்து வயதாகிறது.

அந்த ஊருக்கே செல்வந்தவராக வாழ்ந்த அவருடைய குடும்பம், தொடர்ந்து ஏற்பட்ட வியாபார நட்டத்தினாலும், நீதிமன்ற வழக்குகளாலும் எல்லாவற்றையும் இழந்துவிட்ட நிலை.

மூத்தவர், மிகவும் சாதுவானவர், வாயில்லா பூச்சி, அவருடைய பேச்சைக் கேட்டால் நமக்கு பரிதாபம் உண்டாகும். இளையவர், மிகவும் துடுக்கானவர். ‘வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டு’ என்ற கோணத்தில் பட்டென்று பேசுவார்.

ஜோதிடரின் முன் மூவரும் அமருகின்றனர். சில நிமிடங்கள் அவர்களிடம் பேசிய ஜோதிடர் மூத்தவரைப் பார்த்து,

‘யாரையும் நம்பி சாட்சிக் கையெழுத்துப் போடாதீர்கள்.

எந்த புதிய செயலையும் நீங்கள் தொடங்காதீர்கள்.

இவருடைய கையிலிருந்து எந்த முதலீடும் செய்யாதீர்கள்’ என்கிறார்.

இளையவரைப் பார்த்து,

‘அக்கம்பக்கத்தில் சண்டை சச்சரவு என்று முன்னால் போய் நிற்காதீர்கள்;

வீடு தேடி யாராவது சண்டையிட்டாலும் வீட்டிலுள்ளவர்களைப் பேசச் சொல்லுங்கள்.

நீங்கள் வாயைத் திறந்தால் ஜெயிலில் கம்பிதான் எண்ண வேண்டும்’ என்றார்.

இருவருடைய குணத்திற்கேற்ப, அவர்களுக்கு சில வழி முறைகளைச் சொன்னார். பொதுவாக ஒருவருடைய குணம், திறமை, கடந்த காலம், எதிர்காலம் போன்றவைகளை அறிய வேண்டுமானால், அவருடைய பேச்சு செயல்மற்றும் நடவடிக்கைகளை வைத்து மன இயலில் சொல்லிட முடியும்.

மனிதர்களுடைய குண நலன்களை அந்தந்த காலத்திற்கேற்ப வகைப்படுத்தி இருக்கிறார்கள்.

பகவத் கீதையில் சத்வ, ரஜோ, தமோ குணங்கள் என்றுபிரித்துள்ளார்கள். உறுதியாகவும், அமைதியாகும், இருந்தால் சத்வ குணம் என்றும், பேராசை, ஆணவம், அகங்காரம் இருந்தால் ரஜோ குணம் என்றும், நிறைய உணவை உண்டு, அதிகம் தூங்கி சோம்பேறிகளாக இருந்தால் தமோ குணமென்றும் கூறுகிறது.

மனங்களின் ஆய்வின் அடிப்படையில் முதிர்ந்த மனம், பெற்றோர் மனம், குழந்தை மனம் என்று பிரித்துள்ளனர். இதன்படி தெளிந்த அனுபவம் கொண்டவர்களை முதிந்த மனம் என்றும், மிகவும் கட்டுப்பாடான,பிடிவாத மானவரகளை பெற்றோர் மனம் என்றும், உணர்ச்சிகளின் அடிப்படையில் ஆரவாரத்துடன் செயல்படுபவர்களை குழந்தை மனம் Transactional Analysis என்றும் கூறுகிறது.

மருத்துவ ஆய்வுகின் அடிப்படியைல் A, B, C, என்று பிரித்துள்ளார்கள். இதன்படி எல்லா நேரங்களிலும் படபடப்புடன் பயம், குழப்பம் கொண்டவர்களை A வகை குணமுள்ளவர் என்றும், அமைதியாகவும், நிதானமாகவும் செயல்படுபவர்களை வகை B குணமுள்ளவர் என்றும், நம்பிக்கையில்லாமல் எதற்கும் பயனில்லாதவர்களை C வகை குணமுள்ளவர்கள் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

மனிதனின் மனவலிமை, குணநலன்கள் மற்றும் ஆளுமைத்திறன்களின் அடிப்படையில் 1) அடங்கும் குணம் (Passive Mind) 2) அடக்கும் குணம் (Agressive Mind) 3) உறுதியான குணம் (Assertive Mind) எனப் பிரிக்கலாம்.

ஒருவரின் அன்றாட நடைமுறைகளை ஆய்ந்தால் அவருடைய குணத்தின் வகையை அறிய முடியும். உங்களின் குணத்தை அறிய, கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதிலை எழுதுங்கள்.

1. பொது இடத்தில், உங்கள் பக்கத்திலுள்ளவர்கள் புகை பிடித்து ஊதுகிறார். உங்கள் மேலும் புகைபடுகிறது. நீங்கள் என்ன செய்வீர்கள்?

அ) அந்த இடத்தை விட்டு வேறிடம் சென்று விடுவேன்.

ஆ) சுமுகமாக அவரிடம் சொல்லி அவரை புகைக்காமல் செய்து விடுவேன்.

இ) சத்தம் போட்டு அவரைத் திட்டுவேன்.

2. ஒரு பொருளை வாங்க மற்றவரிடம் பேசி ஒப்பந்தம் (Agreement) செய்கிறீர்கள். ஏதோ ஒரு காரணத்திற்காக அந்த ஒப்பந்தத்தின்படி அவர் கொடுக்க மறுக்கிறார். என்ன செய்வீர்கள்?

அ) போய்த் தொலையட்டும் என விட்டு விடுவேன்.

ஆ) ஒப்பந்தப்படி உறுதியாக நின்று அந்தப் பொருளைப் பெறுவேன்.

இ) மிரட்டியோ அல்லது சண்டையிட்டோ அதை பறித்துக் கொள்வேன்.

3. நண்பர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது பெரிய விவாதம் (Contradiction) ஏற்படுகிறது என்ன செய்வீர்கள்?

அ) நண்பருக்காக என்னுடைய உறுதியை விட்டு விடுவேன்.

ஆ) என்னுடைய கருத்து சரியானால் விடாப்பிடியுடன் விளக்கிச் சொல்லி அவர்களுக்குப் புரிய வைப்பேன்.

இ) சரியோ, தவறோ என்னுடைய கருத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன்.

4. உறவினர்கள் பலர் சூழ்ந்து உங்களை ஒரு காரியம் செய்யச்சொல்லி வற்புறுத்துகிறார்கள். அதில் உங்களுக்கு மனநிறைவு இல்லை என்ன செய்வீர்கள்?

அ) உறவினர்களுக்காக ஏற்றுக் கொள்வேன்.

ஆ) என்னுடைய மறுப்பைச் சொல்லி விடுவேன்.

இ) அவர்களிடம் சண்டை போடுவேன்.

5. உங்களுக்கு மேலே உள்ளவர் அல்லது மேலதிகாரி நீங்கள் செய்யாத பழியை உங்கள் மீது சுமத்துகிறார். என்ன செய்வீர்கள்?

அ) பயத்தினால் பழியைத் தாங்கிக்கொள்வேன்.

ஆ) தவறு என்னுடையது அல்ல என்பதை முறையிடுவேன்.

இ) பழிக்குப் பழி வாங்கத் திட்டமிட்டுச் செயல்படுவேன்.

6. பஸ்ஸில் பயணம் செய்கிறீர்கள். உங்களிடம் இல்லறை இல்லை. கண்டக்டர் சில்லறை இல்லாதவர்களை இறங்கச் சொல்கிறார். என்ன செய்வீர்கள்?

அ) இறங்கிவிடுவேன்.

ஆ) எல்லா சமயங்களிலம் சில்லறை பெறுவது கடினம் என்பதை எடுத்துரைத்து பயணம் செய்வேன்.

இ) சில்லறை இல்லாமல் எதற்கு கண்டக்டர் வேலைக்கு வந்தாய்? என்று சண்டை போடுவேன்.

7. பிறரைப் பற்றிய உங்களுடைய கணிப்பு என்ன?

அ) உயர்வாகவே எண்ணுவேன்

ஆ) சமநிலையில் எண்ணுவேன்.

இ) தாழ்வாகவே எண்ணுவேன்.

8. உங்களுக்கு விருப்பமான ஒரு செயலைச் செய்யும் போது மற்றவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் என்ன செய்வீர்கள்?

அ) அந்தச் செயலை விட்டு விடுவேன்.

ஆ) மற்றவர்களுக்கு அதனால் எந்த பாதகமுமில்லை என்பதை விளக்கி என்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுவேன்.

இ) எதிர்பவர்களிடம் சண்டையிடுவேன்.

9. மற்றவர்கள் உங்களை குறை கூறினால் என்ன செய்வீர்கள்

அ) மனதிற்குள் பொறுமுவேன்.

ஆ) என்னுடைய நியாயத்தை உணர்ந்து, மற்றவர்களின் விமர்சனத்தை பொருட்படுத்தமாட்டேன்.

இ) அடிதடியில் இறங்குவேன்.

10. நண்பர்களுடன் சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு பணம் செலுத்தும்போது என்ன செய்வீர்கள்?

அ) பெரும்பாலும் நானே முதலில் கொடுப்பேன்.

ஆ) ஒருசில சமயங்களில் கொடுப்பேன்

இ) மற்றவர்கள் கொடுக்கட்டுமே என இருப்பேன்.

மேற்கண்ட கேள்விகளுக்கு, உங்கள் பதில்களில் அ, ஆ, இ, பதில்களை தனித்தனியே எத்தனை என்பதை எழதவும்.

மொத்தத்தில் உங்களுக்கு ஆறுக்கு மேல்

அ – பதில்கள் வந்தால் – அடங்கும் குணம் உள்ளவர்.

ஆ – பதில்கள் வந்தால் – உறுதியான குணம் உள்ளவர்

இ – பதில்கள் வந்தால் – அடக்கும் குணமுள்ளவர்

என்பதை அறியலாம்.

தொடரும்….


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 1998

தன்னம்பிக்கை முத்துக்கள்
சிந்தனைத் துளிகள்
நூல் அறிமுகம்
கோவை தன்னம்பிக்கை இதழ் நடத்திய சுயமுன்னேப் பயிலரங்கம்
பத்திரிகைகள் பாராட்டுகின்றன
10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி?
வாசகர் கடிதம்
உழைப்பு
ஆலோசனைப் பகுதி
கவலை "No" தன்னம்பிக்கை "Yes"
சிகரம்
நினைவில் நிற்பவை
உரிமையும் கடமையும்
இளைஞனுக்கு வாழ்வு செழிக்க வழிகாட்டி
சிந்தனைத்துளி
மனித உறவுகள்
முன்னேற்றப் பாதை
சோம்பேறி யார்?
உள்ளத்தோடு உள்ளம்