Home » Articles » மனிதனின் துயரங்களும் வாழ்வின் அர்த்தமும்

 
மனிதனின் துயரங்களும் வாழ்வின் அர்த்தமும்


விஜயகுமார் எம்.ஆர்
Author:

– டாக்டர் எம்.ஆர். விஜயகுமார்

ஆசைதான் மனிதனின் துயரங்களுக்கெல்லாம் மூல காரணம் என்று அனைவரும் கூறிக்கொண்டிருப்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் நம்மை வாழவைத்துக் கொண்டிருப்பதும் அந்த ஆசைதான் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. அதனால் ஆசை என்பதை மிகச் சரியாகப் புரிந்து கொள்வது அவசியமாகிறது. ஆசை என்பது தன்னை மட்டுமே ( Selforiented ) சூழ்ந்து நிற்கும் வலையாக இருக்கக்கூடாது. அது மனிதகுலத்திற்கே விரிந்ததாகப் பரந்து இருக்க வேண்டும.

மனிதனுக்குச் சிந்தனை பிறந்து, நாகரிகம் தொடங்கிய காலந்தொட்டும், பல்லாயிரம் ஆண்டுகளாகவே மனிதகுலம் சரியானபாதையில் சென்று கொண்டிருப்பதாகத் தோன்றவில்லை சரியில்லாத பாதை என்பதைவிட Wrong Turn என்று ஆங்கிலத்தில் கூறுவது மிகவும் சரியானதாக இருக்கும். ஏனெனில், தவறான பாதை என்று கூறிவிட்டால், அது தவறான பாதையில் சென்று அதிலேயே முடிந்து போய்விடும் என்று அர்த்தம் விளைகிறது. ஆனால் Wrong Turn என்றால் தற்போது நடப்பது தவறான பாதையாக இருந்தாலும் மனிதகுலம் மீண்டும் திரும்பி ( Right Trun க்கு) சரியான பாதையில் செல்லும் என்று அர்த்தம் வருகிறது. ஆகவே Wrong Turn என்பதே மிகச் சரியானது (Wrong Turn) தவறான பாதை என்பது Hate for Hate Turn. அதாவது ஒரு கெடுதலுக்கு இரண்டு கெடுதல் செய்வது. உதாரணத்திற்கு, அடுத்தவர் ஒரு கத்தி வைத்திருந்தால் நாம் இரண்டு கத்திகள் வைத்திருப்பது அடுத்தவர் ஐந்து பீரங்கிகள் வைத்திருந்தால் நாம் பத்து பீராங்கிகள் வைத்திருப்பது; அடுத்தவர் பத்து ரேடார்கள் வைத்திருந்தால் நாம் இருபது ரேடார்கள் வைத்திருப்பது; அடுத்தவர் அணுகுண்டு வைத்திருந்தால் நாம் ஹைட்ரஜன் குண்டையே வைத்திருப்பது இந்தக் கெடுதலுக்குக் கெடுதல் (Hate for Hate Turn) தான் மனித குலம், நாகரிகம் தொடங்கிய காலம் தொட்டே பின்பற்றிக் கொண்டிருப்பது. அதனால்தான் வேற்றுமைகளும், அழிவுகளும், துயரங்களும், தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே போகின்றன. ‘கெடுதலுக்கும் நல்லது’ (Good for Hate) கொள்கையும், கோடிக் கணக்கான நபர்களில் அதுவும் ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு ஒருவர் பின்பற்றுகிறார், அதனால் பெரிய பலனில்லை, உதாரணமாக பசிபிக் மகாகடலில் ஒரு துளிதேனை விட்டால் பசிபிக் கடலே இனித்துவிடாது. அதனால் நாம் அனைவரும் எல்லாவற்றுக்கும் நல்லதே. அதாவது ”God for All” என்ற கொள்கையைப் பின்பற்ற வேண்டும். அதாவது யார் எதைச் செய்தாலும் நாம் நல்லதை மட்டுமே செய்வது. பெரும்பாலான மக்கள் உணர்ந்து பிற்பற்றத் தொடங்கினால் மனிதகுமலம் நிச்சயம் சுபிட்சிக்க ஆரம்பித்து விடும்.

மனிதகுலம் தவறான பாதையில் சென்று கொண்டிருப்பது மிகவும் தெளிவாகத் தெரியாது. ஆராய்ந்து கண்டு பிடிக்க வேண்டிய அவசியமில்லை.

உதாரணங்கள்

1. நம் பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டையிட்டு அவரைக் கொலை செய்துவிட்டால் உடனே நம்மைப் பிடித்து ஜெயிலுக்குள் போடுகிறார்கள். அதுவே, நாம் பக்கத்து நாட்டுக்காரருடன் சண்டையில் அவர்களைக் கொலை செய்தால், உடனே நமக்கு மாலை அணிவித்து தங்க மெடலைக் கொடுக்கிறார்கள்! இங்கு கொலை செய்தால் தப்பு அதற்கு தண்டனைக் கிடைக்கிறது. அங்கு கொலை செய்தால் அது சாதனை அதற்கு மாலையும் தங்க மெடலும் கிடைக்கிறது. ஏன் இந்த வித்தியாசம்? ஒரு மனிதன், மற்றொரு மனிதனை எங்குக் கொலை செய்தாலும் அது கொலையே! அங்கு செய்யும் கொலை நமக்கு சரியாகப்படுகிறது. அதனால், மனித குலம், எந்த அளவுக்குத் தவறான பாதையில் சென்று கொண்டிருந்தால், ஒரு மனிதன் அடுத்த மனிதனைக் கொலை செய்வதுகூட சரியாகப்படும் ? – கூறுங்கள் பார்க்கலாம்.

2. மனிதகுலம் எவ்வளவு தூரம் தவறான பாதையில் சென்று கொண்டிருந்தால், உலகிலுள்ள 650 கோடி மக்களுக்கு ஒரு ஆண்டு முழுவதும் உட்கார்ந்து உண்ண எவ்வளவு செலவாகுமோ அதை ஒரு நாள் இராணுவத்திற்காகச் செலவு செய்து கொண்டிருப்போம். அறிவில்லாமல்? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

3. நாம் எவ்வளவு தூரம் தவறான பாதையில் சென்று கொண்டிருந்தால், பசியாலும், பஞ்சத்தாலும், ஏன் நம்மூர் சாலை ஒரத்தில்கூட ஒரு வேளைச் சோற்றுக்குக்கூட வழியில்லாமல் பட்டினியால் துடிதுடித்து செத்துக் கொண்டிருக்கும் நம் சகோதர மக்களைப் பார்த்தும் பார்க்காதவராய்ச் சென்று நாம் வயிறார உண்டு கொண்டிருப்போம் ? கூறுங்கள் பார்க்கலாம்?

4. நாம் எவ்வளவு தூரத்திற்குத் தவறான பாதையில் சென்று கொண்டிருந்தால், அடுத்தவர் வீழ்ச்சி நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும்? கூறுங்கள் பார்க்கலாம்.

5. நாம் எவ்வளவு தூரத்திற்குத் தவறான பாதையில் சென்று கொண்டிருந்தால், அடுத்த மனிதரை அடிமைப்படுத்தி அதில் சுகம் காண்போம். கூறுங்கள் பார்க்கலாம்?

6. நாம் இந்த உலகை விட்டுப்போகும்பொழுது இறக்கும் பொழுது, எதையும் கொண்டு போகப் போவதில்லை என்பது உலகமக்கள் அனைவருக்குமே நன்கு தெரியும் அப்படித் தெரிந்திருந்தும், நாம் எவ்வளவு தூரத்திற்குத் தவறான பாதையில் சென்று கொண்டிருந்தால், உண்மையான கருணையையும், அன்பையும், அறிவையும் கால்களுக்கடியில் போட்டு மிதித்துவிட்டு வெறும் பணத்தை மட்டுமை தலைமேல் தூக்கி வைத்து ஆடிக்கொண்டிருப்போமா? – கூறுங்கள் பார்க்கலாம். இதற்கெல்லாம் என்ன காரணம்? மனிதனின் ஆறாவது அறிவாகிய வேறுபடுத்திப் பார்க்கும் அறிவை நாம் அனைவரும் தவறாகப் பயன்படுத்தியதால் வந்த வினையே. எதற்கெடுத்தாலும் நாம் எதையும் வேறு படுத்திப்பார்த்தே ஆரம்பநாளிலிருந்து பழக்கப்பட்டுவிட்டோம். அதற்கு அடிமையும் ஆகிவிட்டோம்.

உதாரணத்திற்கு

பூமி என்றால் எல்லாம் ஒரு பூமியே!

அதாவது Earth = Earth தான்.

அதில் இங்கிலாந்து பூமி, அமெரிக்கா பூமி, ஜப்பான் பூமி, ஜெர்மன் பூமி, இந்திய பூமி என்று வேறுபடுத்துவது மிகத் தவறு. அதாவது England earth, American earth, Indian earth என்று கிடையாது. Earth = Earth தான்.

அதே போன்று, மனிதன் = மனிதன் தான். பூமியில் எங்கிருந்தாலும் மனிதன், மனிதனே! சிலர் சொல்லலாம், இங்கிலாந்து மனிதன் (England Man) வெள்ளையாக இருக்கிறான். அவன் பழக்க வழக்கங்கள் வேறாக உள்ளன என்றும் கூறலாம். வெப்ப நிலைக்குத் தகுந்தாற்போல அவன் தோல் வெள்ளையாக இருக்கலாம். பழக்கவழக்கங்கள் கூட மாறியிருக்கலாம். ஆனால் உரித்துப் போட்டால் எல்லாம் ஒன்றே!

சரி, இங்கு நம் நாட்டில் உள்ளவர்கள் மட்டும் அனைவரும் ஒரே மாதிரியாகவா இருக்கிறார்கள்? ஒரு ஊரில் உள்ளவர்கள் கூட, ஏன் ஒரு வீட்டில் உள்ளவர்கள்கூட ஒரே மாதிரி இன்னொருவர் இருக்க முடியாது. அதுதான் இயற்கையின் தனிச் சிறப்பு! அழகு! அதனால் மனிதனுக்கு மனிதன் வேற்றுமைப்படுத்தினால், நம்மில் அனைவரையும் அனைவரில் நம்மையும் காணும் அறிவும் ஞானமும் நமக்கு இன்னும் வரவில்லை என்றுதான் அர்த்தம். இந்த உண்மையைப் புரிந்து கொண்டால், நிச்சயமாக நாம் மனிதனுக்கு மனிதன் வேறுபடுத்திப் பார்க்க மாட்டோம்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 1998

கோபத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது?
அவர்களும் நீயும்
மனிதனின் துயரங்களும் வாழ்வின் அர்த்தமும்
பத்து ஆண்டுகளில் 1,00,00,000 ரூபாய் சம்பாதிப்பது எப்படி?. . .
இதோ! வெற்றிக்கு ஓர் முன் உதாரணம்
உணர்ச்சிவசப்படுவதுதான் மனித நேயம் மறையக் காரணம்
வாசகர் கடிதம்
முன்னேற்றப்பாதை – தொடர்
சிந்தனைத்துளிகள்
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க.வின் சிந்தனை