Home » Cover Story » பத்து ஆண்டுகளில் 1,00,00,000 ரூபாய் சம்பாதிப்பது எப்படி?. . .

 
பத்து ஆண்டுகளில் 1,00,00,000 ரூபாய் சம்பாதிப்பது எப்படி?. . .


ஜெயச்சந்திரன்
Author:

– சக்சஸ் ஜெயச்சந்திரன் எம்.ஏ

இறைவன் நமக்குத் தந்துள்ள மூளை மனமாகச் செயல்படுகிறது. மனம் என்று அழைக்கப்படும் மூளைப் பகுதி அமைப்பில் ஒன்றாக இருந்தாலும் செயல் பாட்டில் மூன்றாக அமைந்துள்ளது.

நினைவுமனம், ஆழ்மனம், பிரபஞ்ச மனம் என்பவை தான் அவை. இவற்றைப் பற்றிச் சுருக்கமாக அறிந்து கொள்ளலாமா?

நினைவுமனம்?

நான் பேசுவதைக் கேட்கிறீர்கள். புரிந்து கொள்கிறீர்கள். பின்னரலிருந்து சிறு ஒலி கேட்டவுடன் திரும்பிப் பார்க்கிறீர்கள். அதே நேரத்தில் வீட்டிற்கு நினைவு செல்கிறது. மதிய உணவு தாயாராகி இருக்குமா? இன்று மாலை அந்த வேலையை முடித்துவிட இயலுமா?

இவையெல்லாம் நினைவு மனதின் வேலைகள்!

ஆழ்மனம் :

இறைவன் படைத்த அற்புதமான படைப்புகளில் மனிதனின் ஆழ்மனம் தலையாயது. நினைவு தெரிந்தது முதல் நிகழ்ந்தவை, நினைத்தவை எல்லாம் இதில் பதிந்திருக்கின்றன. தேவையான போது இதிலிருந்து எண்ணங்களை மேலே கொண்டு வரலாம். ஆழ்மனதில் உருவாகும் மாற்றங்கள் தான் ஒரு மனிதனை உருவாக்குகின்றன.

பிரபஞ்ச மனம் :

மனித மனம் இறைவனோடு தொடர்பு கொள்ளக் கூடிய எல்லையில்லாத அறிவையும், ஆற்றலையும், உள்ளடக்கியுள்ள மனம் இதுதான். சாதனை படைப்பவர்களும், கண்டு பிடிப்பாளர்களும் இங்கிருந்து தான் ஆலோசனைகளையும், அறிவையும், ஆற்றலையும் பெறுகிறார்கள். இது மனிதனுக்கு விரும்பும் ஆற்றலை விரும்பும் அளவிற்கு வழங்குகிறது.

மனதின் மூன்று நிலைகளையும் ஆராய்ந்து கண்ட அறிஞர்கள் மனதை அடக்கி விரும்புவதில் செலுத்தவும் வழி கண்டார்கள். என்ன வழி அது?

சுயகருத் தேற்றம் :

உங்கள் ஆழ்மனதில் சில கருத்துகளைப் பதியச் செய்வதன் மூலம் உங்கள் சிந்தனையை மாற்றி அமைக்கலாம். மாறி அமைந்த சிந்தனையை திடப்படுத்தி உங்கள் குணம், பண்பு, நடத்தை எல்லாவற்றையும் மாற்றி அமைக்காலம் விரும்பும் ஆழ்மனதிற்கு நீங்கள் கட்டளை கொடுக்கலாம்.

நீங்கள் மகான் ஆக வேண்டுமா?

குற்றவாளி ஆக வேண்டுமா?

வீரனாக வேண்டுமா?

கோழையாக வேண்டுமா?

செல்வந்தனாக வேண்டுமா?

ஏழையாக வேண்டுமா?

எப்படிப்பட்ட மனிதனாக மாற விரும்புகிறீர்களோ, அதற்குப் பொருத்தமான கட்டளைகளை உங்கள் அழ்மனதிற்குக் கொடுத்துக் கொண்டே வந்தால் நீங்கள் விரும்பியபடியே மாறி விடுவீர்கள் !

சிறுவயதிலிருந்தே நம் தாய் அங்கே போகாதே! பேய் இருக்கிறது! அதோ பார் பூனை! பூச்சாண்டி வா! அதைத் தொடாதே! உடைந்துவிடும்! என்றெல்லாம் பயமுறுத்தியதால் ஏற்பட்ட பதிவுகளை நம் ஆழ்மனதில் அச்சமாக உருவாகி நம்மை எதற்கும் பயப்படும்படி செய்து கோழையாக்கி வைத்திருக்கின்றன. குற்றங்களையே பார்த்து, சிந்தித்து, பேசி வருபவன் கிரிமினலாக மாறி விடுகிறான்.

மகான்களைப்பற்றியே சிந்தித்து, பார்த்து, பேசி பழகி வருபவன் மாகானாக மாறிவிடுவது இயலக் கூடியதே! சுயகருத்தேற்றத்தைப் பதியச் செய்வதன் மூலம் நம்மையே நம்மால் மாற்றிக் கொள்ள முடியும். அத்துடன் நம் சிந்தனையைக் கட்டுபடுத்தி விரும்புவதில் செலுத்தலாம் என்றும், விரும்பாதவற்றிலிருந்து விலக்கலாம் என்றும் அறிஞர்கள் ஆராய்ந்து கண்டிருக்கிறார்கள்.

உதாரணமாக….

நாற்பது வயது வரை ஒருவன் சோம்பேறியாக வளர்ந்து, வாழ்ந்து விட்டாலும், ‘ நான் சுறுசுறுப்பாக இயங்குகிறேன்’ என்னும் பொய்யான கருத்தையே உணர்ச்சியோடு, ஆழ்மனதில் பதியுமளவிற்குச் சொல்லிக் கொண்டே வந்தால் நாளடைவில் அவனுடைய ஆழ் மனம் அவனைச் சுறுசுறுப்பானவனாக மாற்றி விடுகிறது.

இதே போன்று சுயகருத்தேற்றத்தின் மூலம் வேண்டிய எந்த குணத்தையும் பெறலாம். வேண்டாத எந்தக் குணத்ததையும் நம்மிடமிருந்து நீக்கலாம்.

அது மட்டுமா?

நீங்கள் விரும்புகிற, உங்கள் குறிக்கோளை அடைவதற்குத் தேவையான வாய்ப்புகளை உங்கள் ஆழ்மனம் உருவாக்கித் தருகிறது. உங்கள் விருப்பத்திறகேற்ப சூழ்நிலைக்களைக்கூட உங்கள் ஆழ்மனம் முற்றிலும் சாதகமாக மாற்றி அமைக்கிறது.

ஆகவே சுயகருத்தேற்றத்தைப் பயன்படுத்தி நீங்கள் இப்போதுள்ள உங்கள் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிட முடியும்.

இந்த அடிப்படையில், வெற்றி அல்லது தோல்வி அடைந்த 50,000 பேர் வாழ்க்கையே ஆராய்ந்து கண்ட உண்மையின் அடிப்படையில் 10 ஆண்டுகளில் நீங்கள் ஏற வேண்டிய வெற்றி ஏணியின் 12 படிகளை இப்போது உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகிறேன்.

தொடரும்…


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 1998

கோபத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது?
அவர்களும் நீயும்
மனிதனின் துயரங்களும் வாழ்வின் அர்த்தமும்
பத்து ஆண்டுகளில் 1,00,00,000 ரூபாய் சம்பாதிப்பது எப்படி?. . .
இதோ! வெற்றிக்கு ஓர் முன் உதாரணம்
உணர்ச்சிவசப்படுவதுதான் மனித நேயம் மறையக் காரணம்
வாசகர் கடிதம்
முன்னேற்றப்பாதை – தொடர்
சிந்தனைத்துளிகள்
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க.வின் சிந்தனை