Home » Articles » உணர்ச்சிவசப்படுவதுதான் மனித நேயம் மறையக் காரணம்

 
உணர்ச்சிவசப்படுவதுதான் மனித நேயம் மறையக் காரணம்


admin
Author:

கோவை மேனேஜ்மென்ட் அசோசியேஷன் சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த நிகழ்ச்சியில் தென்கச்சி சுவாமிநாதன் ‘ மனித நேயம்’ என்ற தலைப்பில் பேசியதாவது :-

கோவை எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் பிடித்தமான ஊர். மனிதர்கள் எப்படிப் பழக வேண்டும் என்பதை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் தகுதி கோவை மக்களுக்கு உரியதாக இருந்தது. ஆனால் இன்று சென்னையில் இருந்து ஒருவர் வந்து மனித நேயத்தை பற்றி பேச வேண்டிய அவல நிலை கோவைக்கு வந்துள்ளதை நினைத்தால் வருத்தமாக உள்ளது. அந்த அளவிற்கு காலம் மாறிவிட்டது.

ஒவ்வொரு மனிதனும், மூன்று வகையாக உள்ளான், என்னை பற்றி நான் நினைக்கும் மனிதனாக ஒன்று, என்னைப்பற்றி மற்றவர்கள் நினைக்கும் போது ஒன்று, கடைசி ஒன்றுதான். யாருக்கு வெளிப்படையாக தெரியாதது.

இருந்தாலும் அந்த 3வது மனிதன் அவ்வப்போது வெளிவருவதும் உண்டு. அதை அடையாளம் கண்டு கொண்டால் பிரச்னையே இல்லை.

இப்பொழுதெல்லாம் மிருகங்களைவிட மனிதனிடம் தான் ஜாக்கிரதையாக பழக வேண்டி உள்ளது. ஏனென்றால், மிருகங்கள் என்ன செய்யும் என்பது தெரியும். எனவே அதற்காக முன்கூட்டியே தயாராகிவிடலாம். ஆனால் மனிதன் அடுத்து என்ன செய்வான் என்பது யாருக்கும் தெரியாது. ஏன் அவனுக்கே தான் என்ன செய்கிறோம் என்பது தெரியாது.

என்ன தான் மதம் மனித நேயத்தை குலைக்கிறது என்றாலும், மதமோ, கட்சியோ, அரசியலோ எல்லாவற்றையும் விட மனிதநேயம் தான் முக்கியம் என்பதற்கு இன்றைக்கும் நடக்கும் பல நிகழ்ச்சிகள் உதாரணமாக உள்ளது.

மனித நேயம் குறைந்து வருவதற்கு மனிதர்கள், குறிப்பாக தமிழர்கள் அறிவு வசப்படுவதற்கு பதிலாக உணர்ச்சி வசப்படுவது தான் காரணம்.

பெரும்பாலும் மனிதநேயம் எங்கு குறைகின்றது என்றால், படித்தவர்கள், அரசியல்வாதிகள், பெரிய மனிதர்கள் அதிகம் உள்ள இடத்தில் தான் மனிதநேயம் தேய்கிறது.

அவசர வாழ்க்கை, கோபம், டென்ஷன், கர்வம் கொள்ளுதல் சகிப்புத்தன்மை குறைவு, பொறாமை போன்றவை தான் மனித நேயம் குறைய வழிவகுக்கிறது.

இதனால் மனிதனுக்கே மனிதனை அடையாளம் காட்ட வேண்டிய பரிதாப நிலை ஏற்படுகிறது.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 1998

கோபத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது?
அவர்களும் நீயும்
மனிதனின் துயரங்களும் வாழ்வின் அர்த்தமும்
பத்து ஆண்டுகளில் 1,00,00,000 ரூபாய் சம்பாதிப்பது எப்படி?. . .
இதோ! வெற்றிக்கு ஓர் முன் உதாரணம்
உணர்ச்சிவசப்படுவதுதான் மனித நேயம் மறையக் காரணம்
வாசகர் கடிதம்
முன்னேற்றப்பாதை – தொடர்
சிந்தனைத்துளிகள்
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க.வின் சிந்தனை