Home » Articles » நீங்கள் இறுக்கமான மனதரா? இணக்கமான மனிதராகுங்கள்!

 
நீங்கள் இறுக்கமான மனதரா? இணக்கமான மனிதராகுங்கள்!


admin
Author:

எதெற்கெடுத்தாலும் அவசரப்படுகிறீர்களா? யாரிடத்திலும் சண்டைக்கும் போவீர்களா? அடிக்கடி பொறுமை இழந்து விடுவீர்களா? சின்ன விசயங்களுக்கெல்லாம் கோபம் கொள்வீர்களா? அப்படியென்றால் நீங்கள் இறுக்கமான மனிதர்.

எந்த நேரத்திலும் உங்கள் இயல்பான இதயத்துடிப்பு பாதிக்கப் படலாம். இறுதி நேரலாம். எச்சரிக்கையாக இருங்கள். இந்தப் பண்புகளை மாற்ற முயற்சி செய்யுங்கள்.

இதோ சில வழிமுறைகள் :

முதலில் உங்களைப்பற்றி கணித்துப் பாருங்கள்.

1. உங்கள் வாழ்வின் இலட்சியங்கள் நீங்கள் நேரத்தை செலவிடும் முறைகள், உங்களுக்கு, உங்களைச் சார்ந்தவர்களுக்கும் முக்கியமானவை எவை. என்று வரையறை செய்யுங்கள். இவற்றை அடைவதை விட இவற்றில் எது நமக்குத் தகுதி வாய்ந்தது என்று கண்டறிந்து அதை மட்டும் அடைய முயற்சி செய்யுங்கள்.

2. உங்களுக்கும் எத்தனை நண்பர்கள்? எத்தனை அமைப்புகளில் தலைவர் பதவி உறுப்பினர் பதவி பெற்ற சிறப்புக்கள் எத்தனை எத்தனை என்ற எண்ணிக்கையில் பெருமை கொள்ளாதீர்கள் இவற்றின் தரத்தில் மகிழ்ச்சி கொள்ளுங்கள். குறைவாகக் செய்தாலும் குணமாகச் செய்யுங்கள் அகந்தை இன்றிச் செய்யுங்கள்.

3. நான்தான் உயர்ந்தவன் என் சொல்படிதான் எல்லாம் நடக்க வேண்டும் என்று வீட்டிலும் வெளியிலும் வற்புறுத்தாதீர்கள். இதில் வரும் சிறு எதிர்ப்புகள் கூட உங்கள் உடல் நலத்தைப் பாதிக்கும்.

4. எல்லாவற்றிலும் ஒரு முழுமையான தன்மை – முழுத் தூய்மையை எதிர் பார்க்காதீர்கள். வீட்டிலும் அலுவலகத்திலும் உங்களால் எதைச் செய்ய முடியுமோ. அதை மட்டுமே செய்யுங்கள். மற்றவர்களிடம் சிற்சில பொறுப்புக்களை ஒப்படைத்து விடுங்கள்.

5. உங்களுக்காக சிறிது நேரம் ஒதுக்கி ஓய்வெடுங்கள். ஏதேனும் நிகழ்ச்சிகளுக்கு செல்லுங்கள் அழகிய காட்சிகளைக் கண்டு மகிழுங்கள். நல்ல சிந்தனையைத் தூண்டும் புத்தகம் ஒன்றைப் படியுங்கள் அல்லது வேறுமனே உட்கார்ந்து கொண்டு விண்ணில் நிகழும் விந்தைகளை மாற்றங்களை கண்டு மகிழுங்கள்.

6. எந்த ஒரு செயலைச் செய்தாலும் சற்றுக் கூடுதலான நேரத்தை ஒதுக்குங்கள். அதற்குள் அது முடிந்து விடும். இல்லாவிடினும் முடியும் தருவாயில் இருக்கும் அதனால் நமக்கு மன உலைச்சல் இருக்காது.

7. எங்கேனும் காத்திருக்க நேர்ந்தால் கையில் ஒரு புத்தகம் வைத்திருங்கள் அல்லது அங்குள்ள மக்களைப் பற்றி சிந்தியுங்கள் உங்களை நேசிப்பவர்களை பற்றி எண்ணிப் பாருங்கள். அங்குள்ள பிறரோடு அன்பாக பேசி அந்த நேரத்தைப் பயனுள்ள தாக்குங்கள். அல்லது எரிச்சலடையாமல் இருக்கவாவது பயன் படுத்துங்கள்.

8. ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை ஒத்துக் கொள்ளாதீர்கள், அல்லது இதை இப்போது முடித்துத் தருகிறேன் என்று நெருக்கமாக முடிவு தேதி அறிவிக்காதீர்கள்.

9. வழக்கமாக எழுவதைவிட 15 மணித்துளிகள் முன்னதாகவே எழுந்திருங்கள். உங்கள் வேலைகளை அவசரமில்லாமல் தொடங்க அது வாய்ப்பாக அமையும்.

10. ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போதே இடையில் பேசாதீர்கள். இது பண்புடையவர்கள் செயல் அல்ல. பிறர் பேசுவதை முதலில் கேட்கப் பழகுங்கள். அதேபோல் ஒருவர் மெதுவாகச் செய்து கொண்டிருக்கும். வேலையை இடையில் புகுந்து அதிகாரம் இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளாதீர்கள். அவ்வேலை முடியும் வரை பொறுத்திடுங்கள். பொறுக்க முடியவில்லையாயின் அந்த இடத்தில் நிற்காதீர்கள். ஒதுங்கி விடுங்கள்.

11. ரயில் தாமதமாக வருவதற்கும், திடீரென்று உங்களை ஒருவர் வந்து சந்திக்க முனைந்ததற்கும், மழை காற்று, போன்ற இயற்கை எதிராக நிற்பதற்கும் கோபிப்பது பயனற்ற செயல் என்பதை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்.

12. உங்களைச் சீண்டி விடுகின்ற நண்பர்களைச் சந்திப்பதைத் தவித்து விடுங்கள். அப்படி நேர்ந்தாலும் அதை மிகவும் பெரிய செயலாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அதற்கு மதிப்பளிக்காதீர்கள். இதனால் உங்களைச் சுற்றிலும் பகைமைதான் பெருகும் என்பதை உணருங்கள்.

13. இணக்கமான நண்பர்களைத் தேர்ந்தேடுங்கள். அவர்கள் அதிகம் உங்களுக்கும் சொல்லாவிட்டலும் நீங்கள் சொல்லதைக் கேட்டு ஒரு முன் மாதிரியாக நடப்பார்கள். அதுவே உங்களுக்கு உதவியாக இருக்கும். நீங்கள் நடந்து கொள்ள வேண்டிய முறையை அவர்கள் நடைமுறையில் உணர்த்துவார்கள்.

14. மிகவும் அவசரப்படும் பழக்கமும் போட்டியால் நிகழும் பகைமை உணர்வும், இதயத்துடிப்பைப் பாதிக்கும் முக்கிய காரணிகளாகும் முடிந்தால் மனம் விட்டுச் சிரிக்கப்பழகி இந்த மன உலைச்சலைப் போக்கிக் கொள்ளலாம்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 1998

நீங்கள் இறுக்கமான மனதரா? இணக்கமான மனிதராகுங்கள்!