Home » Articles » குழந்தை வளர்ப்பு

 
குழந்தை வளர்ப்பு


admin
Author:

உண்மை சம்பவத்தின் அடிப்படை

பெற்றோர்கள் அவசியம் படிக்கவேண்டிய உளவியல் கட்டுரை :

மே மாதம் என்றால் கோடைக்கால மட்டுமல்ல, பள்ளி விடுமுறை காலம். அந்த குடும்பத்தில் குழந்தைகளுக்குதான் விடுமுறையே, தவிர, பணிபுரியும் பெற்றோர்களுக்கு விடுமுறை இல்லை. துரதிஷ்டவசாக கணவனுக்கு வெளியூரிலே வேலை. அந்த பெற்றோர்களுக்கு ஒரு மகளும் ( வயது – 11) ஒரு மகனும் (வயது – 10). இந்த இரண்டு குழந்தைகளும் இதுவரையில் பிரிந்து வாழ்ந்ததில்லை. கோடைவிடுமுறையை குழந்தைகளோடு செலவிட, வெளியூரில் பணிபுரியும் கணவன் பத்து நாட்கள் லீவிலே வந்து விட்டிலே தங்கினான். அச்சமயம், குழந்தைகளோடும், மனைவியோடும் இன்ப சுற்றுலாவும் சென்றான். லீவு முடிந்தது. அவன் பணிபுரியும் ஊருக்கு திரும்பும் நாள் நெருங்குகையில், பத்தே வயது நிரம்பிய மகன் அப்பா ! என்னையும் உங்களோடு அழைத்து செல்லுங்கள் என அடம்பிடித்தான். மனைவியும் கூடவே, அவனை உங்களோடு அழைந்து சென்றால், எனக்கும் சற்று நிம்மதியாக இருக்குமே என பரிந்துரைத்தாள். வேறு வழியில்லாமல் அவன் தன் மகனையும் தான் பணிபுரியும் ஊருக்கு ஒரு ஞாயிற்றுகிழமையில் பயணமானான்.

திங்கட்கிழமை காலை அவன் பணிபுரியும் ஊர் வந்து சேர்ந்தார்கள். அப்போது அந்த குழந்தையின் முகத்தில் குதுகாலம். காலையில் குளித்து, சிற்றுண்டி அருந்தி, தன் மகனை தெரிந்தவர்கள் வீட்டில் ஒப்படைத்து விட்டு, அலுவலகத்துக்குச் சென்றான். மதியம் உணவிற்காக வீட்டிற்கு வந்தான். குழந்தை அங்குள்ள குழந்தைகள் சிலருடன் நன்கு விளையாடிக் கொண்டிருந்தான். அதை கண்ட அவனுக்கு மகிழ்ச்சி அன்று மாலை சற்று முன்னரே வீடு திரும்பிய அவன், குழந்தையுடன் ” பூங்காவிற்கு சென்று அகமகிழ்ந்தான். மறுநாள் ( செவ்வாய்கிழமை) காலையிலும் வழக்கம்போல், அலுவலகம் செல்லும் முன், குழந்தையை தெரிந்தவர்களின் வீட்டில் ஒப்படைத்து விட்டு சென்றான். அன்று மதியம், மதிய உணவிற்காக வீட்டிற்கு சென்ற அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. குழந்தைக்கு ஜீரம் வந்து படுத்து கிடக்க, அவன் குழந்தையை தொட்டபோது, சுமார் 103 டிகிரி ஜீரம். அலுவலகத்திற்கு லீவு போட்டுவிட்டு, டாக்டருக்கு போன் செய்ய, அவர் ஒரு மாத்திரையே பரிந்துரைத்தார். அதை குழந்தைக்கு கொடுத்தான். அதற்கு பிறகு சமயோசிதமாக, அவனது மனைவிக்கு போன் செய்து உடனே புற்ப்பட்டு வருமாறு கூறினார். அவளும் ஒரு நாள் கழித்து வருவதாகவும், குழந்தையை நல்ல டாக்டரிடம் காண்பிக்குமாறு கூறினாள். அன்று இரவு குழந்தை சாப்பிட்ட பிஸ்கட், தேநீரை வாந்தியெடுக்க பதறி போய்விட்டான். மறுநாள் ( புதன்கிழமை ) காலை டாக்டரிட்ம் சென்று காண்பிக்க, அவர் குழந்தைக்கு 103 டிகிரி ஜீரம் இருப்பதாக கூறினார். சில மாத்திரைகளை பரிந்துரைத்தார். வீட்டிற்கு வந்து டாக்டர் கூறிய மாத்திரைகளை கொடுத்தான். அந்த குழந்தை இதுவரை பிரிந்திராத தன் அக்காவிடம் போனில் பேசவேண்டும் எனக் கூற, அவன் அதற்கும் ஏற்பாடு செய்தான். அன்றும், அவன் ஆபீசுக்கு லீவு எடுத்துவிட்டு குழந்தையுடன் விட்டில் தங்கினான். குழந்தையின் உடல் ஜூரத்தினால், மனமொடிந்து போய்விட்டான். அடுத்த வீட்டில் உள்ளவர்கள் அறிவுரை கூற Ice – Waterல் நனைத்த துணி கொண்டு குழந்தையின் உடம்பை துடைத்தெடுத்தான். அன்று அவன் அனுபவித்த இன்னல் – மன உளைச்சல் ( Tension ) மதிப்பிடஇயலாது. அடிக்கடி வாந்தி எடுப்பதால் WIDAL – Blood Test ( மஞ்சள் காமாலை உள்ளதா என அறிய ) செய்யும்படி கூறினார். இடிந்த மனத்துடனும் இரவு முழுவதும் உறங்காமல் கண் விழித்து குழந்தையை பார்த்து கொண்டிருந்தான்.

மறுநாள் காலை ( வியாழக்கிழமை ) அவருடைய கஷ்டத்திற்கு விடிவு வந்தது. அவனது மனைவி ( குழந்தையின் தாய் ) வடிவிலே. ஆம் ! ஊரிலிருந்து மனைவி வந்துவிட்டாள். அவள், இரண்டு நாட்களாக ஒன்றுமே சாப்பிடாமல் களைந்திருந்த, தன மகனை எடுத்து தன் மடியிலே கிடத்தினாள். தாயின் முகத்தைக் கண்ட அந்த குழந்தை ஆனந்த கண்ணீருடன் தாயை கட்டிப் பிடித்தான். அவ்வளவுதான். ஜீரம் போய்விட்டது. அவனுடைய தாய் கொடுத்த உணவுகளை சிறிதுசிறிதாக உண்ண ஆரம்பித்தான். படுத்த படுக்கையாக இருந்தவன் எழுந்து விளையாட ஆரம்பித்தான். இதை ஆச்சரியம் என்பதா? (அ) மருத்துவதுறைக்கு ” தாயின் அரவணைப்பை ” ஒரு சவால் என்பதா? டாக்டர் பரிந்துரைத்த Blood Test-க்கு அவசியமில்லாமல் போய்விட்டது. அவர்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டார்கள்.

இங்கு, குழந்தை தன் தாயையும், சகோதரியையும் பிரிந்த ஏக்கத்தினால், சுகவீனம் கூடியது என்ற உண்மையை யாவரும் அறிவர். ஆனால், டாக்டர் கூறியபடி Blood Test – ன் அவசியமே இல்லமால் போய்விட்டது.

அந்த கணவனை நோக்கி மனைவி கேட்டாள். ” நீங்கள் லட்சம், லட்சமாக பணம் உண்டாக்கினாலும், அவற்றை பெட்டியில் வைத்து பூட்டத்தான் முடியுமோ, தவிர உங்களின் இந்த மன உளைச்சலைப் ( Tesnion ) போக்க என்னால் ( குழந்தையின் தாயால் ) மட்மே முடியும் என்றாள் ” கணவன் வேறு வழியில்லாமல் அமோதித்து. தலைகுனிந்தான்.

கணவன், மனைவி அவர்களின் நண்பர்கள் இவர்களில் யார் செய்தது தவறு?


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1998

மனிதாபிமானத்திற்கு ஈடு இணையில்லை
லஞ்சம் வாங்குபவர்களை ஒடுக்க அருமையான யோசனை
உலகம் உங்கள் கையில்
முயற்சி
இதோ . . . உங்கள் வாழ்நாளின் எண்ணிக்கை
பகவத் கீதை படித்தபோது…..
சிந்தனைத்துளிகள்
சிறகுகள் விரித்து. . .
குழந்தை வளர்ப்பு
நெஞ்சோடு நெஞ்சம்
இல.செ.கவின் சிந்தனை
இந்தியர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும்
திருப்பூரில் நடந்த 1 – 2 – 98 அன்று மனித நேய முன்னேற்ற பயிலரங்கம்
கவலையற்றிருத்தலே வீடு
முன்னேற்றப் பாதை
ஆற்று நீரை அணைகட்டி தேக்கி விட்டால்
உஷார் ! உஷார் ! உஷார் !
மனிதர்கள் வாழ்வின் அடிமைகள்
காலம் பொன் போன்றது (Time is Gold )