Home » Articles » காலப்பணம்

 
காலப்பணம்


admin
Author:

நித்தச் செலவுக்கு மட்டுமல்ல
நிமிடச் செலவுக்கும் கணக்கு
எழுது நண்பா !

இன்று தலையில் கைவைத்து
உட்கார்ந்தவனை கேள்!
நேற்று
கையில் தலை வைத்து
படுத்திருந்தேன் என்பார்

காட்டில் வாழும்
அட்டை கூட
ரத்தம் தான் உறிஞ்சும்
ஆனால்
காலண்டர் அட்டைகளோ
உன்
வயதையே உறிஞ்சிவிடும்

ஓடி விட்ட நிமிடத்திற்கு
பிடி வாரண்டும்
கிடையாது
கிழிந்து விட்ட தேதிக்கு
தையல் ஊசியும் கிடையாது

கடிகாரம்
சில நூறு ரூபாய்க்கு
திரும்பவும் கிடைக்கும் மணியும், நிமிடங்களும்
பல கோடி ரூபாய்க்கும்
கிடைக்காது

உலக வங்கியிலும்
கடன்
வாங்க முடியாத
காலப் பணத்தை மட்டும்
போற்றிச் செலவிடு
கண்ணீர்ச் செலவே உன்
கண்களுக்கு வராது.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 1998

வெற்றி பெற்றவர்களிடம் காணப்படும் சில தனித் தன்மைகள்
தினமும் பல கோடி ரூபாயை செலவாக்கும் மனிதர்
தொழில் துவங்க தாய் நாடு
உயர்வுக்கு உயரம் தடையல்ல:
சிந்தனைத் துளிகள்-2
காலப்பணம்
போட்டியாளர்களுக்கே வெற்றி
'' என் பகைவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன்."
எங்கும் தமிழர் எதிலும் தமிழர்
தனிமனிதனும் சமுதாயமும்
சிந்தனைத் துளிகள் – 1
முன்னேற்றப்பாதை
சாதனையாளர்களைச் சந்தித்தபோது
ஜாதியா மதமா
சிந்தனைத் துளிகள்
கடனைத் தீர்க்க சில வழிகள்
குறளமுதம்
நாம் விரும்பியது எல்லாம் அடைய சுவாமி விவேகானந்தர் கூறும் வழி
நெஞ்சோடு நெஞ்சம்
இல.செ. க வின் சிந்தனை