Home » Cover Story » சாதனையாளர்களைச் சந்தித்தபோது

 
சாதனையாளர்களைச் சந்தித்தபோது


கந்தசாமி இல.செ
Author:

டாக்டர் இல.செ.கந்நசாமி

இதோ ஓர் இளைஞர், உழைப்பால் உயர்ந்தவர். தான் உழைத்துச் சம்பாதித்த பணத்தில் தொழிலுக்கு உதவியாக புதிய ஸ்கூட்டர் வாங்கியுள்ளதை என்னிடம் மகிழ்வோடு கொண்டு வந்து காட்டிச் சென்றார்.

அவர் ஒரு இளம் விவசாயி, விவசாயத்தோடு வேறு ஒரு தொழில் செய்யவேண்டும் என்று நினைத்தவர் இரண்டு மூன்று ஆண்டுகள் முயன்றும் எதுவும் பிடிபடவில்லை. இப்போது பால் விற்பனையில் ஈடுபட்டு கடந்த இரண்டு ஆண்டுகளில் 720 நாட்களிலும் காலையும், மாலையும் மழையானாலும் கூட உரிய நேரத்தில் பால் கறப்பதை, விற்பனைக்கு எடுத்துச் செல்வதை இதுவரை தவறியதில்லை என்று பெருமையோடு கூறினார்.

பள்ளிப்படிப்பை முடித்த அவர் தானும் வளரவேண்டும், இந்தச் சமுதாயத்திற்கும் தம்மாலான உதவியினைச் செய்ய வேண்டும் என்ற உணர்வு உடையவர்.

முதலில் 20 லிட்டரில் தொடங்கி இன்று ஒரு நாளைக்கு 130 லிட்டர் என்ற அளவில் தானே. ஒரு ஆள்வைத்து கறந்து விற்பனை செய்கிறார். தொழில் நாணயம் – நியாயமான விலை – வாடிக்கையாளர்களிடம் பழகும் முறை பால் கறக்கும் இடத்தில் – கறவையின் சொந்தக் காரர்களிடம் நடந்து கொள்கின்ற முறை – உரிய நேரத்தில் விற்பனை – சுத்தம் – இவைகளே தன் வளர்ச்சிக்கு வழிகோலியதாகக் கூறுகிறார்.

இந்தப் பகுதி மக்கள் எந்தப் பாலை அதிக் விரும்புகிறார்கள்? இங்கு எத்தனை டீக்கடைகள் இருக்கின்றன? எவ்வளவு குடும்பங்கள் இருக்கின்றன? இந்தப் பகுதிக்கு எவ்வளவு பால் தேவைப்படும்? எத்தனை பால்காரர்கள் இருக்கிறார்கள்? தொழிலை விரிவுபடுத்த முடியுமா? பால்காரர்ககளில் சிலர் நொடித்து போகிறார்களே ஏன்? என்றெல்லாம் சிந்தித்துக் குறைவராமல் செயல்படுவதாகவும் கூறினார். இந்த அணுகுறை ஒவ்வொரு தொழிலுக்கும் தேவை என்று தன் அனுபவத்தையும் கூறினார்.

அதேபோல் கறவையின் வளர்ப்பு , தீவனம் நோய்வந்தால் தேவையான மருந்து – பாதுகாப்பு – கால்நடை மருத்துவர்களின் பழக்கம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்துகிறார்.

ஒரு தொழிலில் வெற்றி பெறவேண்டுமானால் அந்தக் தொழிலை பற்றிய முழுமையான விவரங்களும் அறிந்திருக்க வேண்டும். தொழிலில் ஈடுபாட்டோடும், பொறுமையோடும் செயல்படவேண்டும். இவ்விரு கருத்துக்களும் அவரது அனுபவ மொழியாக வெளிவந்தன. இந்த இரண்டு கருத்துக்களும் அனுபவம் தந்த செல்வமாகும். இந்த அறிவுச் செல்வத்தை இன்றைய இளைஞர்கள் முதலீடாகப் பயன்படுத்தி வெற்றி காண்பீர்களா.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 1998

வெற்றி பெற்றவர்களிடம் காணப்படும் சில தனித் தன்மைகள்
தினமும் பல கோடி ரூபாயை செலவாக்கும் மனிதர்
தொழில் துவங்க தாய் நாடு
உயர்வுக்கு உயரம் தடையல்ல:
சிந்தனைத் துளிகள்-2
காலப்பணம்
போட்டியாளர்களுக்கே வெற்றி
'' என் பகைவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன்."
எங்கும் தமிழர் எதிலும் தமிழர்
தனிமனிதனும் சமுதாயமும்
சிந்தனைத் துளிகள் – 1
முன்னேற்றப்பாதை
சாதனையாளர்களைச் சந்தித்தபோது
ஜாதியா மதமா
சிந்தனைத் துளிகள்
கடனைத் தீர்க்க சில வழிகள்
குறளமுதம்
நாம் விரும்பியது எல்லாம் அடைய சுவாமி விவேகானந்தர் கூறும் வழி
நெஞ்சோடு நெஞ்சம்
இல.செ. க வின் சிந்தனை