– 1997 – October | தன்னம்பிக்கை

Home » 1997 » October (Page 2)

 
 • Categories


 • Archives


  Follow us on

  தேவை 'தன்னம்பிக்கை' கல்வி

  நல்ல கல்வி பெற்ற எந்த ஒரு சமுதாயமும் ஏழையாக இருந்ததில்லை;
  நல்ல கல்வி அறிவு பெறாத எந்த ஒரு சமுதாயமும் ஏழ்மையை அனுபவிக்காமல் இருந்து இல்லை

  Continue Reading »

  முயற்சியுடையார்; இகழ்ச்சியடையார்

  சிகரத்தையடைவது சிறிய செயலென்று நினைத்தால்
  சிரமம்கூட – நம்மைவிட்டு சிறகடிக்கும்!
  அதனால் – சிறப்பு வந்து நம்மை எய்தும்!

  Continue Reading »

  எண்ணமே வாழ்க்கை

  நமது சமுதாய முன்னேற்றத்தின் முட்டுக்கட்டையே நம் மனத்தில்தான் இருக்கிறது. யாராவது வந்து நம்தைத் தூக்கிவிட வேண்டும் என்று ஏங்கி நிற்கிறோம். மற்றவர்களை நம்பி எதிர்பார்த்துக் காத்திராமல் என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை மிகுந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.

  Continue Reading »

  சூழ்நிலைகளும் முறையான மனப்போக்கும்

  ஒருவன் பொருளின்மை, காலமின்மை, கவர்ச்சியின்மை, குடும்பப்பற்றினின்று விட்டு விடுதலையாகி நிற்காமை போன்ற சூழ்நிலைகள் அவனை முட்டுக்கட்டையிட்டிராவிட்டால் தன்னால் / செயற்கரிய செயற்கரிய செயல்களைச் செய்திருக்க முடியும் எனக் கற்பனை செய்து கொள்கிறான். உண்மையில் அவன் அவ்வகைச்

  Continue Reading »

  நினைவாற்றல் மேம்பட மனப்பயிற்சி

  – டாக்டர் பெரு. மதியழகன்

  மனதைச் சமநிலைக்குக் கொண்டு வர எளிதில் முடியுமா என்றால் முடியும். மனத்தைச் சமநிலைக்குக் கொண்டுவரவும் நினைவாற்றலைக் கூர்மைப் படுத்தவும் சில எளிய பயிற்சிகள் க்ஷ.

  பயிற்சி : 1

  1.முதலில் வசிதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள். தரையிலோ அல்லது நாற்காலியிலோ எங்கு வேண்டுமானாலும் உட்கார்ந்து கொள்ளலாம்.

  2. பிறகு மெல்ல கண்களை மூடிக் கொள்ளுங்கள். அவசரப் படாமல் மிகவும் இயல்பாகச் செய்யுங்கள்.

  3. இப்போது காற்றை மூக்கின் வழியாக உட்சுவாசித்து பிறகு வாய்வழியாக மெல்ல வெளிவிடுங்கள். இப்படி நான்கைந்து முறை செய்யுங்கள். அப்படி காற்றை வெளிவிடும் போது அமைதி, அமைதி, அமைதி, என்றோ அல்லது Relax, Relax, Relax ” என்றோ உள்ளத்துள்ளேயே உச்சரியுங்கள்.

  4.தற்போது உங்கள் காதுகளை நன்கு தீட்டிக்கொண்டு வீட்டிற்கு வெளியிலிருந்து வரும் ஓசையைக் கவனியுங்கள் (வாகனங்கள் உண்டாக்கும், ஒலி, மோட்டார் உண்டாக்கும் ஓசைகள்). ஆனால், வீட்டில் அம்மா சமையலறையில் உருட்டுவதால் எழும் ஒலிகளில் கவனம் செலுத்தக் கூடாது. ஆனால் வீட்டில் அம்மா சமையலறையில் உருட்டுவதால் எழும் ஒலிகளில் கவனம் செலுத்தக் கூடாது. ஆனால் வீட்டில் காற்றாடி ஓடும் ( Fan ) சத்தம் போன்றவற்றைக் கேட்கலாம்.

  5. அடுத்து உங்கள் சுவாசத்தை கவனியுங்கள். காற்று உட்சென்று வெளியேறும் ஒலியைக் கூர்ந்து கவனிங்கள்.

  6. இப்போது உங்கள் மனத்தில் எழும் எண்ணங்களைக் கவனியுங்கள். வருகிற எண்ணங்களை கட்டுப்படுத்த நினைக்காதீர்கள். உங்கள் அடிமனதில் அழுந்திக் கிடந்த தீய எண்ணங்களும், நிறை வேறாத ஆசைகளும் இன்னும் பலவும் பறந்து பறந்து வருவதைக் கவனிக்கலாம். ஓரிரு நிமிடம் எண்ணக்குதிரைகளை ஓடவிடுங்கள்.

  7. மீண்டும் சுவாசத்தைக் கவனியுங்கள். அடுத்து புற ஓசைகளைக் கவனியுங்கள். பிறகு மெல்ல இமைகளைத் திறந்து பாருங்கள்.

  இந்தப் பயிற்சிக்கு 5 நிமிடம் போதுமானது. தினமும் தொடர்ந்து இந்தப் பயிற்சியைச் செய்யுங்கள், யார் வேண்டுமானாலும் இந்தப் பயிற்சியைச் செய்யலாம். எப்போது எல்லாம் ஓய்வு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் செய்யலாம். அயர்வு மேலாண்மையில் ( Stress management ) இது ஒரு முக்கியப் பயிற்சியாகும். ஒவ்வொரு நாளும் பெரும்பாலும் எல்லோரும் பல்வேறு மன அழுத்தங்களுக்கு (Tension) ஆளாகிறோம். அவற்றிலிருந்து விடுபட மிகசிறந்த மருந்தாக இந்தப் பயிற்சி உங்களுக்குப் பயன்படும். அலுவலகத்தில் பணி புரிகிறவர்கள். அதிகமாக கோபப்படும் இயல்புடையவர்கள், மன அமைதியின்றி இருப்பவர்களுக்கு எல்லாம் மருந்து வாங்கி சாப்பிட்டாலும் கிடைக்காத உடல்நலம் இந்தப் பயிற்சியில் கிடைக்கும். மனம் சமநிலைக்கும் வரும்.

  மனப்பயிற்சி : 2 (எண்கள் முறை)

  நீங்கள் வழக்கமாகப் படிக்கின்ற இடத்தில் வசதியாக உடகார்ந்து கொள்ளுங்கள். கண்களை மூடிக்கொண்டு மூச்சை நன்கு உள்ளிழுத்துப்பிறகு வாய்வழியாக மெதுவாக மூச்சை விடுங்கள். இதை இரண்டு மூன்று முறை செய்த பிறகு ஒன்று முதல் இருபத்தைந்து வரை மனதுக்குள் சொல்லிப்பாருங்கள் பிறகு, 25, 24, 23 ….. என 1 வரை சொல்லுங்கள். பிறகு மெல்ல கண்களைத் திறந்து படிக்கத் தொடங்குங்கள். தினமும் காலையிலும் மாலையிலும் படிக்கத் தொடங்கும் முன்பு இந்தப் பயிற்சியைச் செய்யலாம். எண்களை உச்சரிக்கும்போது வாய்விட்டு உச்சரிக்கவேண்டும் என்பதை மறவாதீர்கள். இந்த மனப்பயிற்சியைத் தொடங்கி ஒரு மாதத்திற்கும் பிறகு 1 முதல் 50 வரை. பிறகு பின்னோக்கியும் சொல்லிப் பாருங்கள். பிறகு மெல்ல மெல்ல 100 வரை சொல்லிப் பயிற்சி செய்யலாம். சிறுவர்களுக்கு இந்தப் பயிற்சியே போதுமானது.

  மனப்பயிற்சி : 3 (மனக்கொப்பு முறை)

  நினைவாற்றலில் சாதனை புரிய இந்தப் பயிற்சி பயன்படும். இந்த பயிற்சியைத் செய்யத் தொடங்கும் முன்பு உங்கள் மனதுக்குள் 100 கோப்புகளைத் தொடங்கி அந்த நூற்றுக்கும் வரிசையாக எண்ணிட்டு உங்களுக்குத் தெரிந்தவர்கள் பெயர்களைச் சூட்டுங்கள். ஒவ்வொரு கோப்பின் பெயரும் உங்கள் நினைவில் இருக்குமாறு மனதில் பதிவு செய்து கொள்ளுங்கள். எப்போதும் கேட்பினும் கோப்பின் எண்ணைச் சொன்னால் பெயர் உடனே நினைவுக்கு வர வேண்டும்.

  இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பயிற்சிகளில் ஏதேனும் ஒன்றைக் கடைப்பிடித்தால்கூடப் போது மானது. இந்தப் பயிற்சிகள் அனைத்திலும் மனம் சமநிலைக்கு வரும். ஆனால் பயிற்சி இரண்டு மற்றும் மூன்றும் மனத்தைச் சம நிலைக்குக் கொண்டு வருவதுடன் நினைவாற்றலைக் கூர்மையாக்கும். சிறுவர்கள் முதலிரண்டு பயிற்சிகளில் ஏதேனும் ஒன்றைச் செய்து வரலாம். மற்றவர்கள் மூன்றாவது பயிற்சி முறையைச் செய்யலாம். குறிப்பாக மூன்றாவது பயிற்சி முறையைக் கடைபிடிக்கிறவர்கள் தங்கள் நினைவாற்றலில் நல்ல அளவுக்கு விரைவான வளர்ச்சியைக் காணலாம்.

  தன்னம்பிக்கை + உழைப்பு = வெற்றி

  சிறிய வியாபாரங்களில் (Small scale business) சில குறிப்பிட்ட நபர்களே வெற்றி பெறுகிறார்கள்.

  வெற்றி பெறாதவர்கள் கூறுவதோ ஆயிரம் காரணங்கள் : நேரம் சரியில்லை. முதல் கடையின் அமைப்பு சரியில்லை வரை.

  Continue Reading »

  சேவையே வெற்றி

  அன்பு நண்பர்களே நீங்கள் எத்துறையை சார்ந்தவர் ஆனாலும் குடும்பத்திலும் – சமூக அரசியலில் – தொழில் நிறுவனத்தில் – ஆண் மீகத்திலும் அறிவியலிலும், எதிலும் வெற்றிபெற வேண்டுமா? பிறர்க்காக எனது பணிகள் என்று செயல்படுங்கள். இது சுயநல

  Continue Reading »

  எல்லோரும் உயரலாம்

  எல்லையில்லாத மூடநம்பிக்கைகள் இன்றைக்கும் கிராம மக்களை ஆக்கரமித்துக் கொண்டிருக்கின்றன. போலிச்சாமியார்களை நம்பி ஏமாந்துபோகும் கிராம மக்களை நினைத்தால் நெஞ்சம் சுடுகிறது. மந்திரம்; மாயை, சூன்யம், மருந்து வைத்தல், மருந்து எடுத்தல், குறி சொல்லல், குறி கேட்டல் எனக் கூட்டம் கூட்டமாக மக்கள் அலை மோதுகிறார்களே!

  மூடப் பழக்கங்கள் நிர்மூலமாகும் காலம் ஒன்று வருமா? மிச்சமுள்ள தன்னம்பிக்கையையும் சாப்பிட்டுவிடுமா?

  கலப்புத் திருமணம், விதவைகள் மறுபணம் இன்னும் கிராம்ப்புறங்களில் ஊக்கப்பட வில்லை. கூடவே சினிமா, டி.வி. மோகம் கிராம மக்களைச் சீரழித்து வருகிறது. ‘ மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் ‘ என்கிற தத்துவப்படி வாழ்ந்தால் எல்லோரும் உயரலாம்.

  ச. இலக்குமிபதி,
  இலவம்பாடி.

  திருக்குறள் கவனகர் திரு. இரா. கனக சுப்புரத்தினம்

  திருக்குறள் கவனகர் திரு. இரா. கனக சுப்புரத்தினம் அவர்கள் சமீபத்தில் கோவையில், ஒரே நேரத்தில் பல காரியங்களை நேர்த்தியாக செய்து காட்டினார். அவர் தமிழர்களின் மறையான திருக்குறளில் வல்லவர். ‘ தன்னம்பிக்கை ‘ இதழின் சார்பில்

  Continue Reading »