Home » Articles » சேவையே வெற்றி

 
சேவையே வெற்றி


தியாகராசன் கு
Author:

அன்பு நண்பர்களே நீங்கள் எத்துறையை சார்ந்தவர் ஆனாலும் குடும்பத்திலும் – சமூக அரசியலில் – தொழில் நிறுவனத்தில் – ஆண் மீகத்திலும் அறிவியலிலும், எதிலும் வெற்றிபெற வேண்டுமா? பிறர்க்காக எனது பணிகள் என்று செயல்படுங்கள். இது சுயநல உலகுப்பாதையில் புதுமைபாணி பழமையான உண்மை. அதிகால முன்னோடிகள் மேதைகள் வாழ்வில் அவர்கள் வெற்றியாளர் ஆனதற்கு காரணம் இந்த சேவை எண்ணமே. தனக்கு தனக்கு என்று எந்த செயலையும் போது கிடைக்கும் புகழ்; சேரும் செல்வம் அவர்களின் மூன்றாம் தலை முறையுடன் மறைந்து போகின்றது. ஆனால் இச்சமூகம் பயனுற எனது வாழ்வு எனது செயல் பயனிளிக்க வேண்டும் என்று நினைத்த மாந்தர்கள் மட்டுமே நீடித்த புகழ் வெற்றியாளர்களாக திகழ்ந்தார்.

கொலம்பஸ், தாமஸ், ஆல்வா எடிஸன் – கலிலியே போன்றோர் புது நவீன உலகை அமைக்க தமது வாழ்வை அர்பணித்தனர். புத்தர் – ஏசு – நபிகள் போன்றோர் ஆன்மீக அமைதி உலகுக்காக வாழ்ந்தனர் – ஹோண்டா – ஸிங்கர் – போன்ற தொழில் மேதைகள் நவீன விஞ்ஞான தொழில் புரட்சிக்கு பாடுட்டனர் – வெற்றி பெற்றனர். மா. சே. துங் – லிங்கன் – காந்தி போன்றோர். அரசியலை (ஜனநாயகத்தை) உலகில் நடை முறைப்படுத்த வாழ்ந்தனர். இவர்களின் வாழ்க்கைப் பாடத்தில் நாம் அறிவது இவர்கள் அனைவரும் மனித குலத்தை மேம்படுத்த தமது சேவை அர்பணிப்பு உள்ளவர்களே வெற்றியாளர்களாக திகழ்கின்றனர். குடும்பத்தில் சேவையாற்றுங்கள் நல்ல குடும்பத் தலைவராகலாம். தொழிலில் சேவை ஆற்றல்கள் உயர்ந்த இடத்தைப் பிடிக்கலாம். சமூக அமைப்புகளில் சேவை ஆற்றுங்கள் தலைமையாளராக உயரலாம். மேற்கண்ட கருத்துக்களை நீங்கள் கடைபிடிக்கும் போது உங்களைப் பார்த்து உலகம் விலக்கலாம். பிறருக்காக வாழும் போது நாம் அறிவால் – உறுதியால் – திட்டத்த் தால் தெளிவாகிறோம் வெற்றி பெறுகிறோம் வெற்றிபெற வாழ்த்தும் அன்பன்.
– வானவில் கு. தியாராசன்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 1997

சிந்தனைத் துளிகள் – 1
இதுவரை நாம் சாதித்தது என்ன?
தன்னம்பிக்கை ஓர் பப்பா
சேமிப்பு ' தன்னம்பிக்கை ' யை கூட்டும்
வெள்ளாடுகளான நாம் நமக்குள் மோதிக் கொண்டால்… ஒநாய்களுக்கு லாபம்
''முயற்சியுடையார், இகழ்ச்சியடையார் ''
சிந்தனைத் துளிகள்
முன்னேற்றப்பாதை
y2k வைப்பற்றி அறிந்து கொள்ள
எந்த கல்வி மாணவரிடத்தே பண்பாட்டை,
தேவை 'தன்னம்பிக்கை' கல்வி
முயற்சியுடையார்; இகழ்ச்சியடையார்
எண்ணமே வாழ்க்கை
சூழ்நிலைகளும் முறையான மனப்போக்கும்
நினைவாற்றல் மேம்பட மனப்பயிற்சி
தன்னம்பிக்கை + உழைப்பு = வெற்றி
சேவையே வெற்றி
எல்லோரும் உயரலாம்
திருக்குறள் கவனகர் திரு. இரா. கனக சுப்புரத்தினம்