Home » Articles » வெள்ளாடுகளான நாம் நமக்குள் மோதிக் கொண்டால்… ஒநாய்களுக்கு லாபம்

 
வெள்ளாடுகளான நாம் நமக்குள் மோதிக் கொண்டால்… ஒநாய்களுக்கு லாபம்


அண்ணா இராசகோபால்
Author:

– முனைவர். அண்ணா இராசகோபால்

அடுதலும் தொலைதலும் உலக வழக்கு என்னும் தமிழ்ப்புலவர் வெள்ளைக்குடி நாகனார் கருத்தியல் வழி; முரண்பாடும், மோதல்களும், காழ்ப்புகளும், வெறுப்புகளும் இன்று வரை மனித சமுதாயம் எதிர்கொண்டு வரும் எதார்த்தங்கள் அண்ணன் – தம்பி, அக்காள் – தங்கை, கணவன் – மனைவி, இருப்பங்காளிகள், கொண்டவர்கள் கொடுத்தவர்கள், ஒரு கும்பல் – அடுத்த கும்பல், ஒரு மதம் – மற்றொரு மதம், ஒரு சாதி – மற்றொரு சாதி, ஒரு நாடு – மற்றொரு நாடு இப்படி முரண்படும் குழுக்கள் காலங்காலாய் மோதிக்கொள்கின்றன. முரண்பாடுகளையும், மோதல்களையும் தீர்க்கவும், சமூக உறவுகளை உருவாக்கவும் மூன்றாம் மனிதர்களின் பங்களிப்பு அவசியம்.

தமிழ் நிலத்து மூவேந்தர்கள் குறுநில மன்னர் ஒருவரின் இரண்டு ஆண் குழந்தைகளை யானைக்காலில் இட்டு மதிக்க முனைந்தபோது தமிழ்புலவர் பெருந்தகை கோவூர் கிழார் தடுத்து நிறுத்தினார். பிஞ்சுக் குழந்தைகளைக் கொன்ற பழிக்கு ஆளாக வேண்டாமென்று மூவேந்தர்களுக்கு அறிவுரை வழங்கினார். உலகின் ஒப்பற்ற அறநெறி படைப்பான வள்ளுவம் பிறந்த மண்ணிலும் வெறியாட்டம் தொடங்கிந்து. அப்போது ஒரு மூன்றாம் மனிதரால் – அறிவு ‘ மாமேதையால் அழிவுச்செயல் தடுத்து நிறுத்தப் பட்டது. ஆக மூன்றாம் மனிதர்கள் பங்களிப்பு நீதி தழைக்க முதன்மையானது, தேவையானதுமாகும்.

தென் தமிழகத்தில் பல குலங்களில் இரு தமிழ்க் குலங்கள் மோதிக் கொள்கின்றன. அதன் விளைவாக பல்லாண்டுகளாக இருந்து வந்த பெரியோர் பலரின் பெயர்கள் மாவட்டத்திலிருந்தும், போக்குவரத்துக்கழங்களிலிருந்தும் மறைந்து போயின. ஆளுவோரும், ஆங்கில – தமிழ் இதழ்களும் ஒரு சேர பேசுவது ஒரு சாதியின் (குலத்தின்) இருப்பு நிலையை (அந்தஸ்தை) மற்றொரு சாதி ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதாகும். இது ஒரு கண்ணியமான பெறுப்புள்ள கருத்தாகும்.

இவற்றையெல்லாம் தெளிவு படுத்த தமிழ்நிலத்தில் சான்றோர்களும், பெரியார்களும், அறிஞர்களும் முன்வர வேண்டும். சமுதாய அளவில் தன்னம்பிக்கை வளர மூன்றாம் மனிதர்கள் தேவை. இம்மூன்றாம் மனிதர்கள் ஆட்சி அதிகாரம் கொண்டவர்களல்ல; சான்றோர் வேடமிட்ட போலிகளல்ல; உழைக்கும் கோடான கோடி மக்களே.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 1997

சிந்தனைத் துளிகள் – 1
இதுவரை நாம் சாதித்தது என்ன?
தன்னம்பிக்கை ஓர் பப்பா
சேமிப்பு ' தன்னம்பிக்கை ' யை கூட்டும்
வெள்ளாடுகளான நாம் நமக்குள் மோதிக் கொண்டால்… ஒநாய்களுக்கு லாபம்
''முயற்சியுடையார், இகழ்ச்சியடையார் ''
சிந்தனைத் துளிகள்
முன்னேற்றப்பாதை
y2k வைப்பற்றி அறிந்து கொள்ள
எந்த கல்வி மாணவரிடத்தே பண்பாட்டை,
தேவை 'தன்னம்பிக்கை' கல்வி
முயற்சியுடையார்; இகழ்ச்சியடையார்
எண்ணமே வாழ்க்கை
சூழ்நிலைகளும் முறையான மனப்போக்கும்
நினைவாற்றல் மேம்பட மனப்பயிற்சி
தன்னம்பிக்கை + உழைப்பு = வெற்றி
சேவையே வெற்றி
எல்லோரும் உயரலாம்
திருக்குறள் கவனகர் திரு. இரா. கனக சுப்புரத்தினம்