Home » Articles » சிந்தனைத் துளிகள்

 
சிந்தனைத் துளிகள்


admin
Author:

முடியும் என்கிற வலுவான சொல் உங்களுக்குத் துணையிருக்கும் போது முடியாது என்கிற கோழைத்தனத்தில் எதற்காக நீங்கள் தஞ்சம் புகவேண்தும்?
———————————–
‘ முடியும் ‘ என்கிற எண்ணம் எவ்வாறு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கி விடுகிறதோ அதைப் போலவே

‘ முடியாத ‘ என்கிற எண்ணம் பாதகமான சூழ்நிலைகளை உருவாக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.
————————————–
பத்து விரல்களே ஒரு மனிதனின் தலைசிறந்த நண்பர்கள்.
————————————
எதிர்பார்த்த சந்தர்ப்பங்கள் கிடைக்காதபோது, கிடைக்கின்ற சந்தர் பங்களை சாமார்த்தியமாக பயன்படுத்துக் கொள்ளத் தெரிந்தவனே வாழ்க்கையில் பெறுகிறான்.
——————————–
‘ திறமை ‘ என்பது பாட்டரி மின்சாரம் போன்றது.
அதை வீணடிக்காதீர்கள். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
—————————-

எந்தக் காரித்தையும் புன்முறுவலுடன் ஏற்றுக் கொள்; வெற்றியடைவாய். புன்முறுவலில்லாத முகத்தையுடைய ஒருவன் வியாபாரம் செய்ய அருகதையற்றவன்.
—————–
பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கற்பிப்பதைவிட வேறொரு மேலான வெகுமதி அளிக்கமுடியாது.
– நபிகள் நாயகம்.
———————-
மனிதனாகப் பறிந்த ஒவ்வொருவரிடமும் புதையல் போன்ற வற்றாத செல்வம் இருக்கிறது. இப்புதையல் அவர்களுக்குள்ளேயே இருக்கிளது என்பதைப் புரிந்து கொண்டவர்கள் முழுமையும் மகிழ்ச்சியும் குறைவில்லாச் செல்லவமும், பேரும், புகழும் பெற்று வாழ்கிறார்கள்.
——————————–
வெறும் புள்ளி விவரங்களைச் சேகரித்து கொண்டிருப்பது கல்வியன்று மனத்தை ஒருமுகப்படுத்துவதுதான் என்னைப் பொறுத்த வரையில் கல்வியின் அடிப்படை இலட்சியமாகும்.
-விவேகானந்தர்.
——————————
வாழ்க்கையில் வெற்றிகளைக் குவித்த பலர் பல்கலைக்கழக பட்டதாரிகள் அல்ல. பி.எச்.டி பட்டம் பெற்றவர்கள் அல்ல. மற்றவர்களிடம் சரளமாகத் தொடர்பு கொண்டு உரையாடும் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ளுங்கள். அதுவே உங்கள் இலட்சியத்தை வெற்றி கொள்ள வழிகட்டும்.
———————
முயற்சி என்பது இதயத்துள் உண்டாகும் ஓர் உணர்ச்சி மட்டுமன்று ஆற்றலைக் கிளப்பும் ஒரு தூண்டுகோல் ஆம்.
————————————–
உங்கள் சிந்தனை தான் உங்கள் செயல்பாடு, நீங்கள் இளமையாக இருப்பதாகவே எப்போதும் எண்ணுங்கள். இந்த எண்ணம் உங்களை இளமையாகவே வைத்திருக்கும். இது இல்லாமல் போனதால்தான் இருபது வயதில் பலர் வயதான வராகவும் 70 வயதில் பலர் இளமையாகவும் இருப்பதைக் காண்கிறோம்.
———————


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 1997

சிந்தனைத் துளிகள் – 1
இதுவரை நாம் சாதித்தது என்ன?
தன்னம்பிக்கை ஓர் பப்பா
சேமிப்பு ' தன்னம்பிக்கை ' யை கூட்டும்
வெள்ளாடுகளான நாம் நமக்குள் மோதிக் கொண்டால்… ஒநாய்களுக்கு லாபம்
''முயற்சியுடையார், இகழ்ச்சியடையார் ''
சிந்தனைத் துளிகள்
முன்னேற்றப்பாதை
y2k வைப்பற்றி அறிந்து கொள்ள
எந்த கல்வி மாணவரிடத்தே பண்பாட்டை,
தேவை 'தன்னம்பிக்கை' கல்வி
முயற்சியுடையார்; இகழ்ச்சியடையார்
எண்ணமே வாழ்க்கை
சூழ்நிலைகளும் முறையான மனப்போக்கும்
நினைவாற்றல் மேம்பட மனப்பயிற்சி
தன்னம்பிக்கை + உழைப்பு = வெற்றி
சேவையே வெற்றி
எல்லோரும் உயரலாம்
திருக்குறள் கவனகர் திரு. இரா. கனக சுப்புரத்தினம்