Home » Articles » முன்னேற்றப்பாதை

 
முன்னேற்றப்பாதை


admin
Author:

சாதனையின் அடிப்படை

முன்னேற்றத்தின் முக்கிய அம்சங்களான உயர்ந்த லட்சியம். தன்னம்பிக்கை, கடின உழைப்பு, திட்டமிடுதல். தேர்ந்த துறையில் சிறப்புத் தகுதி (knowlege) போன்றவைகள் பல இருந்தும். சிலர் வாழ்க்கையில் தன்னுடைய இலக்கை அடைய முடியாமல் தவிக்கிறார்கள். அப்படியென்றால் அவர்களுக்கு மேலும் சில தகுதிகள் அவசியமாகிறது. அவற்றின் முக்கியமான ஒன்றைத்தான் இப்போது ஆய்வு செய்கிறோம்.

ஒருவருக்கு அனுபவம். அறிவு, நன்மதிப்பு. பிறரின் தொடர்புகள். நல்ல சமூக உறவு, பணம், பதவி போன்றவைகள் அதன்மூலம் அமைவதால். இதனை சாதனையின் அடிப்படைத் தகுதி எனலாம்.

முன்னேறி வரும் தனிமனிதனிடத்தில் – கௌரவமான ஒரு குடும்பத் தலைவரிடத்தில் – சாதனை புரியும் நிர்வாகத்தின் தலைவரிடத்தில் – ஒரு இயக்கத்தின் தலைமையிடத்தில் இந்த அடிப்படைத் தகுதி இருக்கவே செய்யும். அது என்ன?

அதனை ஒரு சம்பவத்தின் மூலம் விளக்குகிறேன். இரண்டும் நண்பர்கள் பொள்ளாச்சியை அடுத்து. ஒரு மலையின் உச்சியில் உள்ள டாப் ஸ்லிப் (TOP SLIP) சுற்றுலா மாளிகையை அடைய பேருந்தில் பயணம் செய்தார்கள். அந்த மலைக்கு செல்கின்ற பேருந்தில் இருவரும் சென்றார்கள். இரவு அந்த சுற்றுலா மாளிகையில் தங்கி உல்லாசமாக ஓய்வு எடுக்க திட்டமிட்டார்கள். மலை வழியாக சென்று கொண்டிருந்த பேருந்து சுற்றுலா மாளிகையை அடைய சில கிலோ மீட்டர்கள் இருக்கும் போதே பழுதடைந்து நின்றுவிட்டது. அந்ந பேருந்தை சரி செய்ய வேண்டுமானால். பொள்ளாச்சிக்கு வந்து அதற்கான பொறியாளரை அழைத்துச் சென்று தான் சரிபடுத்த முடியும். அதற்குள் இரவு ஓடி விடும். வேறு பேருந்துகளும் அந்த வழியில் இல்லை; மற்ற வாகனங்களும் கிடைக்கவில்லை. இருவரும் அவரவர் பெட்டியைத் தூக்கிக் கொண்டு நடந்தே செல்ல வேண்டிய நிர்பந்தம், நடக்க ஆரம்பித்தார்கள். இருவேறு குணங்கள் கொண்ட அந்த இருவரின் உரையாடல் தொடர்ந்தது.

முதலாமவர் : இந்த போக்குவரத்து வாகனங்களே மோசம்? இதையெல்லாம் நம்பி என்ன பயன்?

இரண்டாமவர் : சில சமயங்களில் எந்த வாகனமும் பழுதடைவது இயற்கை தானே இதுவும் அப்படித்தான் பழுதடைந்து நின்றுவிட்டது; அவ்வளவுதான். இருவரும் மேலும் சிலதூரம் நடந்தார்கள்.

முதலாமவர் : இந்த சாலைகளே சரியில்லை; இதில் போய் மாட்டிக் கொண்டு நடக்க வேண்டிய வேதனையாகிவிட்டதே. எனக்கு கால் வலிக்கவில்லையா?

இரண்டாவர் : இல்லை மேலும் சில நிமிடங்கள் நடந்தார்கள்.

முதலாமவர் : என்னுடைய அன்னை எப்போதும் தலைவலி கொடுப்பவர். இத்தனை துணிகளை பெட்டியில். போட்டுக் கொடுத்ததால் என்னால் தூக்க முடியவில்லை.

இரண்டாமவர் : உன்னுடைய நன்மையை கருதித்தானே இவ்வளவு செய்திருக்கிறார்கள். அவர்களை ஏன் குறை சொல்கிறாய்?

பெட்டியை இரண்டாமவர் வாங்கிக் கொண்டு, இரண்டு பேரின் சுமைகளையும் தூக்கிக் கொண்டார்.

முதலாமவர் : என் தந்தை முன்னெச்சரிக்கை இல்லாதவர். இரண்டு சக்கர வாகனம் ஒன்று வாங்கி கொடுத்திருந்தால் எனக்கு இந்த சிரமம் இருந்திருக்காது.

இரண்டாமவர் : அதுவும் சில நேரங்களில் இது போன்று பழுதடைந்துவிடுமே!

நடைப்பயணத் செய்ய வேண்டிய தூரத்தில் பாதியை அடைந்தார்கள்.

முதலாமவர் : எனக்கு இத்தனை சிரமங்கள் உள்ளன. உனக்கு இல்லையா?

இரண்டாமவர் : நான் ஒரு மந்திரத்தை கற்றுள்ளேன். அதனால் இதெல்லாம் சிரமமே கிடையாது.

முதலாமவர் : எனக்கும் சொல்லேன்.

இரண்டாமவர் : சுற்றுலா மாளிகையை அடைந்ததும் சொல்கிறேன்.

சிறிது தூரம் சொன்றதும் எனக்கு மூச்சிறைக்கிறது; அமருவோம் என்று சொல்லி முதலாமவர் அமர்ந்தார்.

முதலாமவர் : உனக்கு இப்போதும் கஷ்டமில்லையா?

இரண்டாமவர் : இல்லை பிறகு புறப்பட்டு, சுற்றுலா மாளிகையை அடைந்தார்கள்.

முதலாமவர் : இது ஒரு நரகம் போலிருக்கிறது. இத்தனை சிரமப்பட்டு இதில் என்ன சுகமிருக்கிறது. அந்த மந்திரத்தை எனக்கு இப்போது சொல்.

இரண்டாமவர் : நான் கற்று கொண்ட மந்திரம் சகிப்புத்தன்மை என்பதாகும். இதைத் கற்றதனால் எனக்கு பெரிய சிரமங்களே வருவதில்லை, என்றார்.

சகிப்புத் தன்மை (Tolerece) தான் ஒவ்வொரு சாதனைகளின் மறுபக்கமாக இருந்து வந்திருக்கிறது. சகிப்புத்தன்மையின் பொருளை வார்த்தைகளில் சொல்லிவிளக்க முடியாது; அதைத் கடைப்பிடித்து அதன் மூலம் வெற்றி பெற்று-மனதில் தனி ஆற்றலை உருவாக்கும் ஒரு அபார சக்தி என்றால் மிகப் பொருத்தமாக இருக்கும். இந்த சக்தியை அனுபவித்தவர்களாலேயே உணர முடியும்.

சகிப்புத்தன்மை என்பது, எல்லா அநீதிகளையும் தாங்கி கொள்ள வேண்டிய அவசியம் என்பது பொருளல்ல; அல்லது பிறரிடம் பயத்தினால் உரிமையை இழக்கும் கோழைத்ததனமும் அல்ல.

நம் முன்னேற்றத்திற்காக சில விருப்பமில்லாத சூழ்நிலைகளை பொறுத்து கொள்ளுதல்; தவிர்க்க இயலாத சம்பவங்களை முழு திருப்தியுடன் ஏற்றுக் கொள்ளுதல்; நியாயமான உரிமைகளை இழக்காத தொடர்ந்து செயல்படுதல் போன்ற சில விளக்கங்கள் இதற்கு பொறுத்தமாக இருக்கும். இயல்பாக ஒவ்வொருவருக்கும் தேவையான பொறுமைக்கு மேலும் ஒருபடி உயர்ந்த மனநிலையே சகிப்புத்தன்மையாகும்.

இன்றுள்ள இளைஞர்களுக்கு ஆற்றல்கள் அதிகம்; ஆனால் அவர்களுக்கு சகிப்புத்தன்மை குறைவு என்ற கணிப்பு உள்ளது. இதனால், கோபம், விரக்தி, தாழ்வு மனப்பான்மை, மன உலைச்சல் போன்றவைகளால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

இன்றுள்ள தனிமனித பிரச்சினைகள், குடும்ப சிக்கல்கள், சமுக வன்முறைகள், நாடுகளிடையே பகையுணர்வு இவற்றுக் கெல்லாம் அடிப்படைக்காரணம் சகிப்புத் தன்மை இன்மையே.

இவையில்லாதவர்கள், மதுவுக்கு அடிமையாகிறார்கள்; போதைப் பொருட்களை பயன்படுத்துகிறார்கள். தூக்கமின்மை மற்றும் மனநோய்களாலும் பாதிக்கப்படுகிறார்கள்.

ஆகையால் நம்முடைய சகிப்புத் தன்மையை அளவிடுவோம். அதன் அடிப்படையில் கேள்விகளுக்கான பதில்களை

1. ஆம்

2. சில சமயங்களில்

3. இல்லை

என்ற மூன்றில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்

1. உங்களுக்கு பணம் கொடுப்பதாக வாக்களித்த ஒருவர், அதைக் கொடுக்காத போது சண்டையிடுவீர்களா?

2. வேலையை முடிக்கும் மாலை வேலையில் உடலும் மனமும் சலிப்படைவதுண்டா?

3. உங்களுடைய கணவன் அல்லது மனைவி அடிக்கடி உடல்நிலை சரியில்லேயென்று சொன்னால். மனதிற்கு வெறுப் படைகிறீர்களா?

4. உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லை என நினைக்கிறீர்களா?

5. குடும்பத்தினருடன் பணம் பற்றிய கருத்து வேறுபாடுகள் உண்டா?

6. பிறருடம் பழகுவதில் விருப்பமில்லாமல் அவர்களின் குறைகளையே அதிகம் காண்கிறீர்களா?

7. உங்களை பிறர் குறைசொல்லும் படியான சூழ்நிலைகள் உண்டாகிறதா?

8. எந்த காரணமும் இல்லாமல் மனதில் சோக உணர்வுகள் அடிக்கடி உண்டாகிறா?

9. முன்பிருந்ததைவிட . இப்போது உங்கள் மதிப்பு குறைந்து. விட்டதாக நினைக்கிறீர்களா?

10. ஞாபாக மறதியினால் அவதிப்படுகிறீர்களா?

11. உங்கள் கணவர் வேறு பெண்களுடன் பேசினால் அல்லது உங்கள் மனைவி வேறு ஆண்களுடன் பேசினால் வெறுப்படைகிறீர்களா!

12. பிறரிடம் (நண்பர்கள், உறவினர்கள்) அடிக்கடி கோபமடைகிறீர்களா?

13. உங்களுக்கு உடல் நலக்குறைபாடுகள், குறிப்பாக தலைவலி , இடுப்பு வலி மற்றும் பதட்ட உணர்வுகள் அதிகம் உண்டா?

14. செயலில் ஈடுபடும்போது தடைஏற்பட்டால் குழப்பமடைகிறீர்களா?

15. கடந்தகால தவறுகளை நினைத்து அடிக்கடி மனம் கொதிப்படைகிளீர்களா?

மேற்கண்ட கேள்விகளுக்கு உங்கள் பதில்

ஆம் என்றால் ‘ 0 ‘ மதிப்பெண்ணும். சிலசமயங்களில் என்றால் ‘ 1 ‘ மதிப்பெண்ணும்
‘ இல்லை ‘ என்றால் 2 மதிப்பெண்களும் போடவும்,

உங்களுடைய மதிப்பெண் 20க்கு மேல்:- சகிப்புத்தன்மை உள்ளவர்

11 முதல் 19 வரை = சராசரி மனநிலை உள்ளவர்

10க்கு கீழ்:- சகிப்புத்தன்மை இல்லாததால் அவதிப்படுபவர்

பிறரை அளவிடுதல்:-

நாம் அன்றாடும் பலருடன் பழகுகிறோம். அவர்களுடைய சகிப்புத்தன்மையையும் மேற்கண்ட கேள்விகள் மூலம் மதிப்பிடலாம். ஆனால் ஒருவரைப்பற்றி முழுவதும் தெரியாதபோது அவருடைய நடைமுறைகளை வைத்து மதிப்பிடலாம்.

சகிப்புத்தன்மையில்லாதவர்களின் செய்கைகள்:

அமரும்போது, இருக்கையில் நிலையை மாற்றி கொண்டே இருத்தல்

கண்பார்வை அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கும்

பேச்சு – படபடவென்று அவசரமாக பேசுதல்; உரத்த குரலில் எரிச்சலுடன் பேசுதல்.

சிரிக்கும் போது – பற்கள் வெளியே தெரியாமல், முக பாவனைகளை உற்சாகமாக வைக்காமல், உதட்டைமட்டும் அசைத்தல்

உரையாடல்களின் போது அடிக்கடி பற்களை இறுக கடித்தல்

உடல், முகம் வியர்த்தல்

இவைகள் யாவும் பொறுமையின்மையின் வெளிப்பாடுகளாகும்.

சகிப்புத்தன்மையின் அம்சங்கள்

பிறர் தவறுகளை மன்னிப்பவர்கள், அதிக மனவலிமை கொண்டவர்கள்.

பிறர் தவறுகளை மறக்காமல், அதை நினைத்து கொதிப்படைவதால் உடல், மனம் பாதிப்படையும்.

தற்பொருமை, எளிதில் உணர்ச்சி வயப்படுதல் போன்ற மனநிலை உள்ளவர்கள், சகிப்புத்தன்மை இல்லாதவர்கள்.

மனிதர்கள் அறியாமையினால் தவறு செய்கிறார்கள் என உணர்ந்தால், கொபத்திற்கு மாறாக அவர்கள் மீது இரக்கம் கொள்ளல் வேண்டும்.

எல்லா செயல்களிலும் சகிப்புத்தன்மை உள்ளவர்களே, இறுதியில் வெற்றியடைகிறார்கள்.

சரித்திரத்தை உருவாக்கியவர்கள்:-

சாக்க்டீஸ்:- மாபெரும் சிந்தனையாளரான சாக்டீஸ், வீட்டின் முன்புறம் நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அவருடைய மனைவி, அவரை கடும் வார்த்தைகளால் திட்டிவிட்டு, அழுக்கு தண்ணீரை அவர்மீது வீசினார்.

நண்பர் கேட்டார்: என்ன கொடுமை இது?

நண்பர் சொன்னார் : புயலடித்து மழை பொழிகிறது;

அவ்வளவு தான் என்று கூறி புன்னகைத்தாராம்.

ஆபிரகாம்லிங்கன் : அமெரிக்க அதிபராக இருந்த போது, நடை பெற்ற போரில் அவருடைய படை தளபது இவருடைய வழிமுறைகளை கடைபிட்க்காமல் செயல் பட்டதால். அமெரிக்கா தோல்வியடைந்தது. இருப்பினும் அவரது தளபதியை அவர் குற்றம் சாட்டவில்லை. தளபதியின் இடத்தில் நானிருந்திருந்தால் நானும் இப்படித்தான் செயல்பட்டிருப்பேன் என்று பெரிய போரின் தோல்வியை சகித்துக் கொண்டார்.

எடிசன் :- படிப்பில்லாதவர்; காது கேட்பதில் குறையுள்ளவர்; மின்விளக்கை கண்டறியுமுன் பல்லாயிரக்கணக்கான தோல்விகளை இழந்தவர், ஆனால் பொருமையின்றி செயல்பட்டதே இல்லை.

மகாத்மா காந்தி :- எப்போதும் தன்னுடைய முடிவில் உறுதி கொண்டவர். ஆங்கிலேயர்களால் கொடுமைபடுத்தபட்டாலும். சகிப்பு தன்மையை இழக்கவில்லை. இறுதியில் சுதந்திரத்தை வாங்கிக் காட்டினார்.

போர்டு:- படிப்பில்லாத கார் தொழிலதிபர் என்பதால் அவரை பத்திரிகைகள், படித்தவர்கள் கேலி செய்தபோதும் பொறுமை இழக்கவில்லை.

இது போன்று சரித்திர நாயகர்களின் வரலாறுகளைப் படித்தால் அவர்களின் சகிப்புத்தன்மையை உணரலாம்.

சிலர், தன் கோழைத் தன்மையை, சகிப்புத்தன்மை கொண்டவராக சொல்லிக் கொள்வதுண்டு. பிறர்மீது உள்ள பயத்தினால் பொறுமையுடன் இருப்பதை சகிப்புத்தன்மை என்று கூறிவிடக் கூடாது. ஒருவரை எதிர்க்கின்ற ஆற்றலிலிருந்து அதை செய்யாமல் பொறுத்துத் கொள்வதையே சகிப்புத்தன்மை எனலாம்.

சிலர், தன் உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லை என ஆதங்கப்பட்டு வாழ்வதைப் பார்க்கிறோம். ஒரு தொழில் நாம் பெறுகிற பணத்தை மட்டும் வரவாக எண்ணக் கூடாது. அந்த தொழிலில் இருப்பதால், கிடைக்கும் அனுபவம், தொழிறிவு, மனிதர்களின் தொடர்பு. சமூக உறவுகள் இவையனைத்தும் சகிப்புத்தன்மையின் மூலமே பெற முடியும். இவை பணத்தை விட பெருமதிப்பு வாய்ந்த அம்சங்களாகும்.

சுயக்கட்டுப்பாடு ( Self-control ) உள்ளவர்கள், எளிதில் சகிப்புத்தன்மை பெறமுடியும்.

செய்யும் தொழிலில், மேலும் நுணுக்கங்களை அறிந்தால் அதில் ஈடுபாடு மேலும் வளரும். உற்பத்தி திறன் அதிகமாகும்; மன உயர்வு உண்டாகும்.

குடும்பம், சமூகம் இவற்றில் உயர்ந்தவர்களின் தொடர்புகளை வளர்க்க வேண்டும்.

தன்னம்பிக்கை குறைந்தவர்கள் தன்னைப்பற்றிய உயர்வான சிந்தனைகளை வளர்க்க வேண்டும். அதற்கு கடந்த கால சாதனைகளை பட்டியலிட்டு – அதை அடிக்கடி எண்ணி சுய ஊக்குவிப்பை செய்தல் வேண்டும். தாழ்வுமனப் பான்மையே பலருடைய பொறுமையின்மைக்கு காரணமாக இருக்கிறது.

விரக்தியடைபவர்கள், மனப்பதட்டமடைபவர்கள் கீதையின் முக்கய அம்சாமான ” கடமையைச் செய் ; பலரைத் துற ” என்ற தத்துவத்தை உணர வேண்டும். வாழ்க்கை என்ற போராட்டத்தில் நமக்குள்ள கடமைகளை, பிரதி பலன் மீது கவனம் செலுத்தாமல் செயல்படுத்திக் கொண்டே வந்தால் குழப்பங்கள் குறையும். ஏனெனில் ஒரு செயலின் பலன்கள், பல்வேறு காரணங்களை பொறுத்த அம்சமாகும்.

அடிக்கடி கோபமடைவர்கள், இதற்குமுன் எழுதிய கோபத்தை வெல்லும் வழிகளை கடை பிடிக்கலாம்.

மனித நேயங்களை வளர்க்க, பிறரை புண்படுத்தாமை, பிறரை மதித்தல், பிறரைப் பாராட்டுதல், பிறர் பொருள்களை கவராமை, பிறரை குறை கூறாமை, பிறர் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டி பங்கு கொள்ளுதல் போன்ற நியதிகளை கடைபிடுத்தல் நன்மையை விளைவிக்கும்.

ஆகவே சகிப்புதன்மை ( Toler – ance) இருப்பவர்களே சாதனைகளை செய்ய முடியும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 1997

சிந்தனைத் துளிகள் – 1
இதுவரை நாம் சாதித்தது என்ன?
தன்னம்பிக்கை ஓர் பப்பா
சேமிப்பு ' தன்னம்பிக்கை ' யை கூட்டும்
வெள்ளாடுகளான நாம் நமக்குள் மோதிக் கொண்டால்… ஒநாய்களுக்கு லாபம்
''முயற்சியுடையார், இகழ்ச்சியடையார் ''
சிந்தனைத் துளிகள்
முன்னேற்றப்பாதை
y2k வைப்பற்றி அறிந்து கொள்ள
எந்த கல்வி மாணவரிடத்தே பண்பாட்டை,
தேவை 'தன்னம்பிக்கை' கல்வி
முயற்சியுடையார்; இகழ்ச்சியடையார்
எண்ணமே வாழ்க்கை
சூழ்நிலைகளும் முறையான மனப்போக்கும்
நினைவாற்றல் மேம்பட மனப்பயிற்சி
தன்னம்பிக்கை + உழைப்பு = வெற்றி
சேவையே வெற்றி
எல்லோரும் உயரலாம்
திருக்குறள் கவனகர் திரு. இரா. கனக சுப்புரத்தினம்