Home » Articles » ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்

 
ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்


admin
Author:

– டாக்டர் இல.செ. கந்தசாமி

இசைக் குயில் லதா மங்கேஷ்கரின் வாழ்க்கை வேதனைகளும் சோதனைகளும் நிறைந்தது. ஆயினும் முன்னேற விரும்புகின்றவர்களுக்கு ஒரு அருமையான பாடமாகும்.

ஒரு பெண்ணால் முன்னேற முடியுமா? தன் வறுமை நிறைந்த குடும்பத்தைக் காப்பாற்ற முடியுமா? அதுவும் இளமைக் காலத்தில் என்றால் ? முடியும் என்று முன் உதாரணமாக நிற்கிறார் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி கின்னஸ் சாதனை புரிந்த லதா மங்கேஷ்கர்.

பதிமூன்று வயதில் தன் தந்தையை இழந்த அவர் தன் இரண்டு சகோதரிகளையும் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றார். வறுமைதான் அவருக்கு பெரும் சொத்தாக அமைந்தது.

அவர் தந்தை ஒரு பாடகர், நடிகர். லதாவின் தந்தையோடு மேடையில் பாடவும் சில சமயங்களில் நடிக்கவும் செய்துள்ளர் சிறுமி லதா.

தந்தையின் இறப்புக்குப் பிறகு எப்படியோவது குடும்பத்தைக் காப்பாற்றியாக வேண்டும் என்று ஒரு நாடாகக் கம்பெனி விடாமல், ஸ்டுடியோ விடாமல் ஏறி இறங்கினார். குரல் சரியில்லை என்று இசைமைப்பாளர்கள் சொல்லிவிட்டார்கள். அவர் அழகாக இருந்ததால் நடிக்கவே அழைத்தார்கள். ஆனால் லதாவுக்கு நடிப்பில் விருப்பமில்லை. இசையில்தான் பெரும் விருப்பம். அதனால் பாடுவதையே விரும்பினார். நடிப்பா? பாடலா? என்று சலனத்திற்கு ஆளாகாமல் ஒன்றையே தேர்ந்தார்.

ஒரு பட உரிமையாளர் விநாயக் என்பவர் வாய்ப்பு நல்கினார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் மாரடைப்பால் இறந்து போனதும் மீண்டும் வாழ்வில் வறுமைப்புயல் விசத் தொடங்கியது. வாழ்க்கையில் ஒரு லட்சித்தை எடுத்துக் கொள். அதையே உன் உயிராகவும் போற்று. நாடி, நரம்புகளில் எல்லாம் உன் லட்சியம் குருதியோடு கலந்து ஓடப்படும். மற்ற எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு அது ஒன்றையே உன் கண்ணுள் நிறுத்திப் பாடுபடு. இது ஒன்றுதான் வெற்றிக்கு வழி என்ற விவேகானந்தரின் கருத்து வாழ்க்கையில் நடைமுறைப் படுத்தியவர் லதா மங்கேஷ்கர்.

இன்று 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். நாம் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பது முன்னேற விரும்புகின்றவர் மேற்கொள்ள வேண்டிய முதல் பாடம். லதா 24 மணிநேரமும் வாய்ப்பை எதிர் நோக்கித் தன்னைத் தயார் நிலையில் வைத்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் வேலை தேடிச் சோர்ந்து போய் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தபொழுது எதிர்பாராத விதமாக ஒரு இசை அமைப்பாளர் ‘ குலாம் ஹைதரைச் ‘ சந்தித்தார். லதாவின் குரல் வளத்தை அறிய விரும்பிய அவர் அந்த இடத்திலேயே தன் கையிலிருந்த சிகரெட் தகரப் பெட்டியை கொடுத்து அதில் தாளம் போட்டுப் பாடச் சொன்னார். லதா அப்படியே பாடினார். அவர் நெடுநாள் தன்னைத் தயார் செய்து கொண்டிருந்த திறமைக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அந்தத் திறமையும் அவருக்குக் கை கொடுத்தது. அன்றிலிருந்து அவர் படிப்படியாக வெற்றிப் படிகளில் ஏறத் தொடங்கினார்.

இன்று 68 வயதாகும் தன் வாழ்வை இசைக்காகவே அர்பணித்துக் கொண்டார். திருமணம் செய்து கொள்ளவில்லை. சோகமாகட்டும், மகிழ்ச்சியாகட்டும், ஒன்றிப் பாடுகின்ற தன்மையால் அந்த உணர்ச்சிகளைக் கேட்போர் உள்ளத்தில் வரவழைத்துவிடுவோர், அதுதான் அவரது வெற்றியின் ரகசியமாகும்.

திரைப்படப் பாடல்கள் மட்டுமின்றி கர்நாடக இசையிலும் தேர்ச்சி பெற்றார். மராட்டிய மண்ணில் பிறந்த அவர் மராட்டிய வீரன் சிவாஜியை போல, மராட்டிய நாவலாசிரியர் கான்டே கரைப்போல், மராட்டிய மண்ணில் தோன்றிய இசைக் குயிலும் வரலாற்றில் இடம்பெற்றுவிட்டார்.

அன்றைய அதே அடக்கம், அதே பணிவு, இன்றும் அவரோடு நிலைத்து நிற்பதால் புகழ்பூத்த பெண்மணியாகத் திகழ்கிறார். பெண்ணால் – அதுவும் அழகான இளம் பெண்ணால் – முடியுமா? என்று ஐயத்தை எழுப்புகின்றவர்களுக்கு லதா மங்கேஷ்கர் ஒரு விடையாகவே விளங்குகிறார்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 1997

சுதந்திர பொன்விழா ஆண்டு ; நினைவுகள்.
பணம் எப்படிச் செலவு செய்ய வேண்டும்…?
Promise only what you van deliver, then deliver more than your
கவிதை பிரியர்களுக்கும் ஆங்கிலம் பயில்பவர்களுக்கும்
கோபத்தை வெல்லுங்கள்
நட்பு என்றால்………..
மனக்கதவு
அமெரிக்கர்கள் புத்தசாலிகள்
கல்விமீது கண் வைப்போம்
உங்கள் சிந்தனைக்கு
பத்துக் கட்டளைகள்
சிந்தனைத் துளிகள்
சாதனை அத்தியாயத்தை எழுது
எண்ணமே வாழ்க்கை
பொது மக்களின் பார்வையில் அரசியல்
மரம் நடும் நிகழ்ச்சி
'' செய்வன திருந்தச் செய் ''
அன்னைக்கு அஞ்சலி
ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்
' உழைக்காமல் உண்பவர்கள் திருடர்கள் '
தன்னம்பிக்கை இதழ் நடத்தும்