இதை படித்து விட்டு உங்கள் மனம் கலங்காவிட்டால்……
அந்த ஆண்டு 1975, நெருக்கடி நிலை அமலில் இருந்த காலம். சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பல அரசியல் பிரமுகர்களில் பெரியவர் நெல்லை செபமணியும் ஒருவர். அந்த சமயம் சிறை அதிகாரிகள் வரம்பு மீறி நடந்து கொண்டதை நாடே அறியும். ஒரு நாள் வழக்கம்போல் அரசியல் கைதிகளை அடித்தனர். நெல்லை செபமணிக்கும் அடிவிழுந்தது. ஆனால் அன்று வழக்கத்துக்கு மாறாக பெரியவர் நெல்லை செபமணி அவர்கள் அழுதாராம். அதைக் கண்ட ஒருவர் அவரருகில் வந்து; என்ன அண்ணாச்சி, என்றும் இல்லாமல் இன்று மட்டும் ஏன் அழுகிறீர்கள்? நீங்கள் பிரிடீசார் ( வெள்ளையர்) காலத்தில் வாங்கிய அடிகளை விடவா இவர்கள் உங்களை அடித்துவிட்டனர் என்றார். அதற்கு பெரியவர் நெல்லை செபமணி அவர்கள்; நான் இதற்காக அழவில்லை நண்பரே, ஆனால் இதற்காகவா நம் முன்னோர்கள் பாடுபட்டு நமக்கு இந்த சுதந்திரத்தினை வாங்கிக் கொடுத்தார்கள் என்று நினைத்து பார்த்தேன் அதனால் எனக்கு அழுகையே வந்து விட்டது என்றாராம்.
இதைவிட வருத்தத்திற்குரிய விசயம் என்னவென்றால், சுதந்திரம் வாங்கி 50 ஆண்டுகள் ஆகியும் நம்முடைய மக்களுக்கு விழிப்புணர்வு வரவில்லையே என்று நினைத்து பார்க்கும் போது நம் மனம் கலங்காமலிருக்குமா?
இந்த 51வது ஆண்டுலிருந்தாவது நம் பாரத நாட்டில்; எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாமல் செய்யவேண்டும்; என்று கவிஞர் கண்ட கனவினை’ உண்மையாக்கிட பாடுபட உழைப்போமா?

September 1997





















No comments
Be the first one to leave a comment.