Home » Articles » பணம் எப்படிச் செலவு செய்ய வேண்டும்…?

 
பணம் எப்படிச் செலவு செய்ய வேண்டும்…?


admin
Author:

பணம் வந்தது போல் போய் விடும். போகும் போது நமக்கு அபகீர்த்தியையும் உண்டாக்கும். ஆனால் நற்குணம் என்ற உண்மையான செல்வம் ஒருபோதும் கைவிடாது.

தவறான பாதையில் செல்பவன் மீண்டும் ஆதியிலிருந்தே தனது பயணத்தைத் தொடங்க வேண்டியிருக்கும்.

சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது அழுகின்றவன் தெம்பற்றவன். அழகையிலிருந்து சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகிறவன் நெஞ்சுரமுள்ளவன்.

யோசிப்பதனால் நிதானமாய் யோசியுங்கள். செயல்படுவதானால் உறுதியோடு செயல்படுங்கள். விட்டுக் கொடுப்பதனால் உறுதியோடு செயல்படுங்கள். விட்டுக் கொடுப்பதனால் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுங்கள்.

பணம், ஆற்றல், திறமை இவையெல்லாம் வாழ்க்கைக்கு பொருள்களே அன்றி அவையே வாழ்க்கை ஆகாது.

பணத்தை எவ்வளவு குறைவாக சிக்கனமாகச் செலவிடுகிறோம் என்பது முக்கியமல்ல. எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறோம் என்பதே முக்கியம்.

கடன் வாங்குதல், அடகு வைத்தல், பொய் பேசுதல் இவை மூன்றும் துன்பப்பாதைக்கு வழி வகுக்கும்.

அமைதியாக வாழ வேண்டும் எனில் கண்ணால் கண்டது. காதால் கேட்டது எதையும் வாயால் சொல்லக்கூடாது.

உன் நம்பிக்கையை பணத்தின் மீது வைக்காதே. பணத்தை நம்பிக்கையான இடத்தில் ஒதுக்கிவிடு!

ஒரு மனிதன் தன்னுடைய தன்மையை எப்போது தெளிவாகக் காட்டுகிறானென்றால், இன்னொருவனுடைய குணத்தை விமர்சனம் செய்யும்போதுதான்.

ஆதாரம் தொழில் வணிக முதலீடு


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 1997

சுதந்திர பொன்விழா ஆண்டு ; நினைவுகள்.
பணம் எப்படிச் செலவு செய்ய வேண்டும்…?
Promise only what you van deliver, then deliver more than your
கவிதை பிரியர்களுக்கும் ஆங்கிலம் பயில்பவர்களுக்கும்
கோபத்தை வெல்லுங்கள்
நட்பு என்றால்………..
மனக்கதவு
அமெரிக்கர்கள் புத்தசாலிகள்
கல்விமீது கண் வைப்போம்
உங்கள் சிந்தனைக்கு
பத்துக் கட்டளைகள்
சிந்தனைத் துளிகள்
சாதனை அத்தியாயத்தை எழுது
எண்ணமே வாழ்க்கை
பொது மக்களின் பார்வையில் அரசியல்
மரம் நடும் நிகழ்ச்சி
'' செய்வன திருந்தச் செய் ''
அன்னைக்கு அஞ்சலி
ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்
' உழைக்காமல் உண்பவர்கள் திருடர்கள் '
தன்னம்பிக்கை இதழ் நடத்தும்