Home » Cover Story » கோபத்தை வெல்லுங்கள்

 
கோபத்தை வெல்லுங்கள்


இராமநாதன் கோ
Author:

– டாக்டர் ஜி. இராமநாதன், எம்.டி.,

கோபத்தின் இயல்புகள்:-

கோபம், ஒவ்வொரு மனிதருக்கும் உள்ள உணர்வுதான். ஏமாற்றத்தின் வெளிப்பாடே கோபமாக வெளிப்பாடே கோபமாக வெளியாகிறது.

மனவலிமை குறைந்தவர்கள், உடல்வலிமை குறைந்தவர்கள், பொறுமையில்லாதவர்கள், காமத்திற்கு அடிமையானவர்கள், அளவிற்கதிகமாக கோபப்படுகிறார்கள்.

பிறரிடம் அதிகமாக எதிர்பார்ப்பவர்கள், பிறருக்கு நிறைய உதவி விட்டதாக எண்ணுபவர்கள், ‘ தான் மட்டும் உயர்ந்தவன் ‘ என்ற கர்வம் உள்ளவர்கள் அதிகமான கோபத்தை அடைகிறார்கள்.

கோபப்படும் பழக்கம் அதிகம் உள்ளவர்கள் வீண் பிடிவாதம் கொண்டவர்கள்; சில தவறுகளை செய்துவிட்டு, அவை தவறு என தெரிந்தபின்னரும், சரிபடுத்திக் கொள்ள கெளவரம் இடங்கொடுக்ககாமல், தவறுகளின் தொடர்சியான பாதிப்புகளையும் அனுபவிக்கிறார்.

ஒவ்வொரு மனிதனும் தனிதன்மை பெற்றவனே. அதனால் ஒவ்வொருவரின் விருப்பு, வெறுப்புகள் மாறுபட்டே இருக்கும். இதை உணராமல், பிறர் நம் விருப்பத்திற்கு மாறாக இருக்கிறார்களே என ஆதங்கப்படுவது அறியாமையாகும்.

இயற்கையின் விதிப்படி ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு விளைவு உண்டு. ( Cause and effect ). தவறு செய்பவர்கள் அதன் விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும். அதனால் மற்றவரின் தவறுக்கு மனங்கொதித்து கோபப்படுதல், தம்மை தாமே பாதிக்கும் செயலாகும்.

ஒருவரை மற்றவர் வேண்டும்மென்றே ஆத்திர மூட்டும்போது, அவர் பொறுமைசாலியாக இருந்தால், கோபமூட்டியவர் தானாக அடங்குவார்; அல்லது அவரது செயலின் விளைவுகளை அனுபவிப்பார்.

கோபம் என்பது இருமுனைக் கத்தி போன்றது. போபம் கொண்ட வரையும். பாதிக்கும்; மறுதரப்பினரையும் பாதிக்கும்.

அடிக்கடி கோபப்படும் பெற்றோர்களின் குழந்தைகள், மனபாதிப்பு அடைகிறார்கள்; சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

முன்கோபம் கொண்டவர்கள், தன்னுடைய எல்லா செயல்களுக்கு ( தவறான செயல்களுக்கும் (தவறான செயல்களுக்கும் ) நியாயம் கற்பிப்பார்கள்.

கோபமடைந்தால் முதலில் மனமும் சிந்தனைகளும் பாதிக்கப்படுகின்றன; இரண்டாவது உடலில் பாதிப்புகள் உண்டாகின்றன; இறுதியில் செயலிலும், குழப்பமான மற்றங்கள் உண்டாகின்றன.

மனவலிமை கொண்டவர்கள் கோபத்திற்கு ஆளாவதில்லை; உயர்ந்த லட்சியம் கொண்டவர்கள். கோபத்தை ஒதுக்கியே வாழ்கிறார்கள்.

கோபத்தின் வெளிபாடுகள்:-

சத்தமிட்டு சண்டையிடுவதையும், வன்முறையில் ஈடுபடுதலையும் கோபமாக நினைக்கிறோம்.

இவைத்தவிர, எரிச்சலடைதல், பிடிவாதம் கொள்ளுதல், பொறுமையின்மை, ஆத்திரமடைதல், பெறுப்படைதல், அழுதல் போன்ற செயல்களும் கோப உணர்வின் பிற வெளிப்பாடுகளாகும்.

சிலருக்கு கோபத்தின் வெளிப்பாடு, மனநோயாகவும் இருக்கும், இவர்கள் எதற்கெடுத்தாலும் கோபப்பட்டு கொந்தளிப்படைவார்கள்; நடக்கின்ற சம்பவங்களுக்கு, முற்றிலும் பொருத்தமில்லாமல் செயல்படுகிறார்கள்.

சிலருக்கு உடல்நோயாகவும், கோபத்தின் விளைவுகள் இருக்கும்.

கோபப்படுவது அவசியமா?

சில தவறுகளுக்கு, நம்முடைய மாற்றுக் கருத்துக்களை கோபத்தின் மூலம்தான் வெளிப்படுத்த வேண்டியிருக்கும். ஆனால் அதற்காக கோபப்பட்டு உடல் பதட்டமடைவது பாதிப்பான செயலாகி விடும். ” கோபமும் வெளிப்படவேண்டும்; பாதிப்பும் இருக்கக் கூடாது; அதுதான் சரியான செயலாகும்.

இதற்கு முன் எழுதிய ‘ உறுதியையும் தெளிவும் ‘ கட்டுரையில் குறிப்பிட்ட பாம்பும் – யோகியும் கதையில் பாம்பு சீறுதல் போல கோபத்தை வெளியிடுதலே சிறந்ததாகும்.

பிறர் கோபமாக இருக்கும் போது என்ன செய்யலாம்?

அமைதியுடன் இருப்பதே நல்லது.

விவாதம் செய்தல் மேலும் தீய பலனை விளைவிக்கும்.

தவறு செய்திருந்தால், ஒப்புக் கொள்வது சிறந்தது.

அவர்மீது உண்மையான அக்கரை காட்டுபவராக நடந்து கொண்டால், அவரின் கோபம் தானாகத் தணியும்.

நமக்கு மேலுள்ளவர்கள், கோபமாக நடந்து கொண்டால், நமது உணர்வுகளை சாதுர்யமாகக் கடிதத்தில் எழுதலாம்.

கோப உணர்வின் அடிப்படைக் காரணம் :
கோபம் மனிதனின் உணர்ச்சி அடிக்கடி கோபப்படுதல் ஒரு பழக்கமே.

குழந்தையாக இருக்கும் போது ஏற்படும் ஏமாற்ற உணர்வுகள், வளரும்போது கோபமாகிறது. மேலும் ஆரோக்கியமில்லாத சூழ்நிலைகள் உண்டாகும்போது கோப உணர்வுகள் வளருகின்றன.

கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

கோபமான சம்பவங்களை ஆராய்ந்தால், மூன்று அம்சங்கள் தெளிவாகம்.

1.) நாம்

2.) மறுதரப்பினர்

3.) சமுதாய சட்டதிட்டங்கள், சூழ்நிலைகள் மற்றும் இயற்கைச் செயல்கள்

1. நடுநிலையுடன் ஆராய்ந்தால், எல்லா சம்பவங்களிலும் நாம் ‘ செய்த பங்கு நிறைய இருக்கும். அதுவே முக்கிய காரணமாக இருக்கும். நாம் மனவலிமை கொண்டு, செயல்களை திறமையுடன் செய்தால், ஏமாற்ற உணர்வுகளுக்கு இடமில்லை. கோபம் வந்தாலும் பாதிக்காமல் கட்டுப்படுத்த முடியும். நமக்கு – சம்பந்தமில்லாத செயல்களை, நமக்கு கோபமூட்ட முயன்றாலும், அதை மனவலிமையால் மாற்றியமைக்கலாம்; பாதிக்காதவாறு செய்துவிடலாம். இவை முற்றிலும் நம் கட்டுப்பாட்டில் உள்ள செயலாகும்.

2. ஒவ்வொரு சம்பங்களிலும் மறுதரப்பினர் ( உறவினர், நண்பர், சக பணியாளர்) ஒருவர் இருப்பார். அவருடைய பங்கு ஒரளவுதான் இருக்கும். நமது உறவுகளையோ, நட்புகளையோ, நினைத்தவுடன் மாற்றிவிட முடியாது. ஆனால் அவரரை அவரவர் தம் எல்லையிலேயே நிறுத்திவிட வேண்டும். அப்போது மறுதரப்பினரின் செயல்கள் நமக்கு கோபத்தை உண்டாக்க முடியாது.

3. நமது சமுதாய சட்ட திட்டங்கள், சூழ்நிலைகள், மற்றும் இயற்கைச் செயல்கள், கோபத்திற்கு சில சமயங்களில் காரணமாக அமைவதுண்டு. இவைகள் அனைத்தும் நமது கட்டுப்பாட்டில் இல்லாத செயல்களாகும். ஆகையால் அவைகளை ஏற்று. அதற்கேற்ப செயல்படுதலே விவேகமாகும்.

இவைகளையும் மீறி கோபம் வரும் போது எப்படி செயல்படலாம்.

கோபமடைந்து பதட்டமடைந்து விட்டால் எந்த கருத்துக்களையும் – முடிவையும் சொல்லக் கூடாது? அந்தச் சூழ்நிலையை தவிர்க்க அந்த இடத்தை விட்டு அகன்று விடுதல் நல்லது.

அது முடியாத போது பேசுகின்ற தலைப்புகளை மாற்றிவிட வேண்டும்.

குளிர்ந்த தண்ணீர் அல்லது பானங்களை அருந்தலாம். படுப்பதற்கு வசதி இருந்தால் படுக்கலாம்.

பத்மாசனம், சாவாசனம், பிராணயாமம் போன்ற யோகப் பயிற்சிகளைச் செய்யலாம்;

தியானம் செய்யலாம் :

ஆழ்ந்த மூச்சு இழுத்து விடுதலை அடிக்கடி செய்யலாம்;

ஒன்றிலிருந்து நூறுவரை அல்லது கோபம் தணியும் வரை எண்ணிக் கொண்டே இருக்கலாம்.

இதுபோன்ற செயல்களின் மூலம், ஆத்திரப்பட்டு எடுக்கும் அவசர முடிவுகளை தவிர்த்து, அதன் பாதிப்பிலிருந்து தப்புவது மிக முக்கியம்.

கோபமான சூழ்நிலை முடிந்தவுடன், அதைப்பற்றி ஆய்வு செய்ய வேண்டும்; காரணத்தை அறிய வேண்டும்.

அடிக்கடி அதே போன்ற சூழ்நிலைகளை மனிதர்கள் சந்திக்க வேண்டி வந்தால் அப்போது பதட்ட மடையாமல் பேச வேண்டிய வார்த்தைகள், செய்ய வேண்டிய செயல்களை முடிவு செய்து தயாராக இருக்கவேண்டும். மீண்டும் அந்த சூழ்நிலை வந்தால் உணர்ச்சி வயப்டாமல் மறுதரப்பினர் ஏற்கும் வகையில் நியாயத்தை வெளிப்படுத்த வேண்டும்.

வன்முறைகளுக்கு இடமில்லாமல் செயல்படுவதே நல்லது. பிறர் தாக்க வரும் சூழ்நிலை என்றால், அந்த இடத்திலிருந்து தப்பிக்கும் வழிகளில் செயல்படுதலே முக்கியம்.

முன்கோபம் உள்ளவர்கள், உடல்நிலை சரியில்லாதபோது, பசியின்போது, கடுமையான வெய்யிலின் போது, களைப்படையும் போது பிரச்சினையும் எடுத்துக் கொள்ளக் கூடாது.

அதிக அளவு காபி, டீ, காரம், புளிப்பு, உப்பு, உணர்வுகள், மாமிச உணவுக்ள, மதுபானங்கள் கோபத்தைத் தூண்டும் தன்மை கொண்டவை. இவைகளை தவிர்க்க வேண்டும். பால், பழம், சைவ உணவுகள், குளிர்பானங்கள் அமைதியைத் தரும்.

பல்வேறு செயல்களில் ஓய்வில்லாமல் ஈடுபடுபவர்கள், பொழுது போக்கு அம்சங்களை கடைபிடிக்க வேண்டும். நகைச்சுவை அம்சங்கள், புதுமையான நூல்கள் நமது மன நிலையை மாற்றம் தன்மை கொண்டவைகள்.

வன்முறை சம்பவங்கள் பற்றிய செய்திகள், பேச்சுக்கள், திரைப்படங்கள், கோரக்காட்சிகள் கோபத்தை அதிகரிக்கும். அவைகளை நம் பார்வையிலிருந்து குறைக்க வேண்டும்.

மனம் விட்டு பேசுதல் குடும்பத்தில் உறவுகளில், நண்பர்களில், சகபணியாளர்களில் பல்வேறு கருத்து வேறுபாடுகளை குறைக்கும்.

வழக்கமான சூழ்நிலைகளை விட்டு மாறுபட்ட இடத்திற்கு செல்லுதல், புதியவர்களுடன் பழகுதல், வேதநூல்களை, படித்தல், கோவிலுக்குச் செல்லுதல் போன்றவைகள் அமைதியைத் தரும்.

விரதமிருத்தல், தளர்வுநிலை பயிற்சிகள், தியானம், யோகபயிற்சிகள் மனவலிமையை பெருக்கும்.

அன்பு நடுநிலையில் சிந்தித்தல், பிறரை மதித்தல், தவறுகளை மன்னித்தல், முடிவுகளை ஆராய்ந்து செய்தல் போன்ற குணங்கள் போகத்தை வெல்லும் ஆற்றல் கொண்டவை.

ஆகவே, கோபம் என்பது நமக்கு வேண்டாத உணர்ச்சியே, அதை அவ்வப்போது அடக்கி கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். இல்லையெனில் நம்மை அடக்கி ஆட்கொள்ளும், கோபத்தை சரிவர கையாளவும், மனவலிமையை வளர்க்கவும் சகிப்புத்தன்மை அவசியம்.

 

3 Comments

  1. vinoth kumar says:

    நன்றி

  2. aruna says:

    thankzzzzzzzz…..

  3. dinakaran says:

    thank you for u r help

Leave a Reply to aruna


 

 


September 1997

சுதந்திர பொன்விழா ஆண்டு ; நினைவுகள்.
பணம் எப்படிச் செலவு செய்ய வேண்டும்…?
Promise only what you van deliver, then deliver more than your
கவிதை பிரியர்களுக்கும் ஆங்கிலம் பயில்பவர்களுக்கும்
கோபத்தை வெல்லுங்கள்
நட்பு என்றால்………..
மனக்கதவு
அமெரிக்கர்கள் புத்தசாலிகள்
கல்விமீது கண் வைப்போம்
உங்கள் சிந்தனைக்கு
பத்துக் கட்டளைகள்
சிந்தனைத் துளிகள்
சாதனை அத்தியாயத்தை எழுது
எண்ணமே வாழ்க்கை
பொது மக்களின் பார்வையில் அரசியல்
மரம் நடும் நிகழ்ச்சி
'' செய்வன திருந்தச் செய் ''
அன்னைக்கு அஞ்சலி
ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்
' உழைக்காமல் உண்பவர்கள் திருடர்கள் '
தன்னம்பிக்கை இதழ் நடத்தும்