Home » Articles » '' செய்வன திருந்தச் செய் ''

 
'' செய்வன திருந்தச் செய் ''


ராஜகோபால் கே.வி
Author:

– கே.வி. ராஜ கோபால்

நமது மனித வாழ்வில் ஒவ்வொரும் பல்வேறு நிகழ்ச்சிகள், வேறுபட்ட நடைமுறைகள் பலவற்றை சந்திக்கிறோம். நாம் அன்றாட வாழ்வில் சில நபர்களையும் சந்திக்கிறோம். ஒரு சிலர், சிறிய ” கால அளவில் ” பல செயல்களில் ஈடுபட்டு பல்வேறு ” வெற்றி வாய்ப்புகள் ” பெறுகின்றனர். மற்றும் சிலர் ” இரவும் பகலும் ” நிறைய உழைத்து இறுதியில் ” பயனுமில்லை. மனதிருப்தியுமில்லை ” என கவலையுறுகின்றனர்.

வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் ”விடாமுயற்சி, தன்னம்பிக்கை கடின உழைப்பு”. இம் மூன்றும் ” ஒன்று கூடினால் ” மட்டுமே வெற்றிகிட்டும் ” கைகள் இரண்டு சேர்ந்து தட்டினால் தான் சப்தம் எழும் ” வெற்றி கிட்டவாய்ப்பு இல்லாத, சில நபர்கள் நமக்கு கிடைத்த பயன் இவ்வளவு தான். என மனவிரத்தி அடைகிறார்கள். வெற்றி அடைய இயலாத காரணம் என்ன? ஏன் ” நம்மால் இதை வெற்றிகரமாக ” செய்ய முடியவில்லை இதற்கு அடுத்த கட்ட நிலையில் எப்படி நன்றாக கவனம் செலுத்தி வெற்றி பெறலாம். என ஆய்வு செய்யும் திறன் அடைந்தால், ” உறுதியாக ” அனைவருக்கும் செய்யும் தொழில் அல்லது பணியில் வெற்றி நிச்சயம்.

நாம் செய்யக்கூடிய தொழில்கள் அல்லது பணிகளில் முழுநிறைவுடன் செயல்பட வேண்டும் ( Satisfaction of work peace of work ) இவை நமது தொழில்களில் அமைந்தால் ” வெற்றி மாமா ” நமது மடியில் அமர்ந்து கொண்டு முன்னேற்ற பாதையில் உயர்த்திடுவார் என வள்ளுவர் கூறுகிறார்.

உழைப்பினால் அதிக பலன் உண்டு. அதே போல், அந்த உழைப்பை எவ்வாறு நம்முடைய சிந்தையில், எப்படி செய்தால் வெற்றி பெறலாம் என ஆராய்ந்து செய்யும் மனப்பான்மை வேண்டும் தொழில் ஆராயும் மனம், அமைந்தாலே நம்முடைய செயல்கள் திருத்தமாகவே அமையும்.

சிந்தனை, கற்பனை வளம், தெளிந்த அறிவுக் கூர்மை, ஆராயும் மனப்பான்மை, சிறந்த பேச்சு ஆற்றல் இவையாவும் பிறரை கவரக்கூடிய ”மனிதனின் ஆக்கப்பூர்வ திறமையை ” மேம்படுத்தி மனித வளம், மகத்தான சக்தி பெறச் செய்கிறது.

” உழைப்பினால், உடலுக்கு சோர்வு ஏற்படலாம் ” ஆனால் எப்போதிலும் ” உள்ளத்திலும் சோர்வு ஏற்படக்கூடாது.

நாம் அன்றாட நிகழ்ச்சியில் ஒரு கடையில் வாழை பழம் வாங்கும்போது கூட ஒவ்வொரு கடைக்கும் பல்வேறு விலை ஏற்ற இறக்க வித்தியாசம் தரம் வித்தியாசம் வேறுபாடு இருக்கிறது. எனவே நன்றாக விசாரித்து கவனமாக செயல்பட்டால் அதன் அருமைகளை நாம் உணர முடிகிறது.

சிறு, சிறு கவனக்குறைவு, சோம்பல், செயலில் சற்று ஈடுபாட்டு இல்லா தன்மை, இவையே நமது தோல்விக்கு அடிப்படை, தோல்வி ஏற்பட்டால் அதை எப்படி நிகழ்ந்தது என ஆராய்ந்தால் வெற்றிக்கு வழிக்கிட்டும்.

நமது ஒவ்வொரு செயல்களும், நல்ல திருத்தமாகவும், செவ்வன செய்யும் முறையும் அமைந்தால் தொழில் வெற்றியைத் தேடி நாம் செல்ல வேண்டியதில்லை.

” வெற்றி நம்மை தேடி வரும் ”


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 1997

சுதந்திர பொன்விழா ஆண்டு ; நினைவுகள்.
பணம் எப்படிச் செலவு செய்ய வேண்டும்…?
Promise only what you van deliver, then deliver more than your
கவிதை பிரியர்களுக்கும் ஆங்கிலம் பயில்பவர்களுக்கும்
கோபத்தை வெல்லுங்கள்
நட்பு என்றால்………..
மனக்கதவு
அமெரிக்கர்கள் புத்தசாலிகள்
கல்விமீது கண் வைப்போம்
உங்கள் சிந்தனைக்கு
பத்துக் கட்டளைகள்
சிந்தனைத் துளிகள்
சாதனை அத்தியாயத்தை எழுது
எண்ணமே வாழ்க்கை
பொது மக்களின் பார்வையில் அரசியல்
மரம் நடும் நிகழ்ச்சி
'' செய்வன திருந்தச் செய் ''
அன்னைக்கு அஞ்சலி
ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்
' உழைக்காமல் உண்பவர்கள் திருடர்கள் '
தன்னம்பிக்கை இதழ் நடத்தும்