Home » Articles » பத்துக் கட்டளைகள்

 
பத்துக் கட்டளைகள்


ஸ்ரீதரன் என்
Author:

டாக்டர் என். ஸ்ரீதரன்

நம்மில் பலர் பல்லாண்டுகளாக எங்கவாது பணி செய்து வந்தாலும் முன்னேற வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றோ, மற்றவர்கள் நம்மை அதிகமாக மதிப்பதில்லை என்றோ வருந்துகின்றனர்.

சிலர், ” சரியா பத்து மணிக்கு ஆபீசுக்கு போயிடறேன். அபீஸ் நேரம் முடியும் வரை கிளம்பறதில்லை. ஒரு ஃபைல் கூடப் பாக்கி வைக்கறதில்லை. அப்படியும் முன்னேறாம செக்கு மாடு வாழ்க்கை நடத்தறேன். எவ்வளவு அநியாயம் பார்த்தீங்களா? ” என்று புலம்புவார்கள்.

முன்னேற்றத்திற்கு இதெல்லாம் இக்காலத்தில் போதாது. வாழ்க்கை குறிப்பு (பயோ டேட்டா), முகவரி நோட்புக் பிறரது நம்பிக்கையின் அளவு – இவை மூன்றும் இனி முக்கியமானவையாகும.

வாழ்க்கை குறிப்பில் நம்மால் எவ்வளவு தகுதிகளையும் சாதனைகளையும் சேர்க்க முடிகிறதோ. நமது முகவரி ஏட்டில் எவ்வளவு தொடர்பு முகவரிகள் உள்ளனவோ, நம்மையும் நமது திறமையையும் நம்பக்கூடியவர்கள் எவ்வளவு அதிகமாக உள்ளனரோ அதற்கேற்ற விகிதத்தில் நமது முன்னேற்றம் அமையும். மேலும் ஆலோசனைகள் :

1. அலுவலகம் அல்லது வணிக நிறுவனத்தில் கடிதப் பொறுப்பு உள்ளவர்கள் கடிதம் அல்லது ஆர்டர் எப்பொழுது கிடைத்தது என்பதைக் குறிப்பிட்டு உடனே பதில் எழுத வேண்டும். கடிதம் கிடைத்த தேதிக்கும் பதில் அனுப்பும் தேதிக்கும் இடையே இடைவெளி எவ்வளவு குறைவாக உள்ளதோ அந்த அளவிற்குப் பதில் அளிப்பவருக்கு அதிகம் மதிப்புக் கிடைக்கும். சரியான பதில் உடனே எழுத முடியாமல் போனாலும், உடனே சரக்கு அனுப்பு முடியாவிட்டாலும், கடிதம் கிடைத்தது என்ற தகவலையாவது உடனே தெரிவிக்கலாம்.

2. பலர் சேர்ந்துதான் ஒரு பணியில் ஈடுபடுவதால் பிறர் சிறப்பாகவோ, புதிதாகவோ கருத்து அல்லது திட்டம் தெரிவித்தால் பாராட்ட வேண்டும். பிறர் முன்னாலும் அதைக் குறிப்பிட வேண்டும். அப்போழுதுதான் ஆலோசனை சொன்னவர்களுக்கு ஊக்கம் ஏற்படும்.

3. பிறர் எந்த உதவி செய்தாலும். அது தினையளவு தான் ஆயினும் நன்றி தெரிவித்துவிடவும் உதவியவர் வெளியூரிலிருந்தால் எழுத்து மூலம் நன்றி கூறலாம்.

4. ஒவ்வொரு செங்கலாக எடுத்து வீடு கட்டுவதுபோல் நமக்கு உதவக்கூடியவர்கள் எல்லோருடனும் தொடர்பு வைத்திருத்தல் வேண்டும். யார் எப்பொழுது எவ்வகையில் உதவுவார் என்று தெரியாது. புதிய நட்புகளை ஏற்படுத்திக் கொள்ள நம்மைப் பொறுத்த வரையில் மறக்ககூடாது.

5. நம் பணி சம்பந்தப்பட்ட சிறிய வேலையைக் கூட நாம் அறிந்திருக்க வேண்டும். ஒருவர் பெரிய என்ஜினியராக இருப்பார். ஆனால் ஃப்யூஸ் ஆகி விளக்குகள் அணைந்துவிட்டால், அல்லது வாஷர் கெட்டுப் போய் குழாய் ஒழுகினால் எதுவும் செய்யத்தெரியாமல் உட்கார்ந்து விடுவார். அதிகம் படித்திரா மெக்கானிக்கை எதிர் பார்த்துக் கொண்டிருப்பார்.

6. ஆன்மிக வாழ்க்கையில் ஒதுங்கியிருந்தால் நலம். ஆனால் அன்றாட வாழ்வில் முன்னேற விரும்புவோர் தொடர்புகளை அதிகரித்துக் கொண்டே செல்லவேண்டும். எந்த முக்கியமான இடத்திற்குப் போனாலும் நமக்குத் தெரிந்தவராக அங்கு ஒருவர் இருக்கும்படி நட்பு வளர்த்துக் கொண்டால் நமது பணி எளிதாகும்.

7. நாம் பிறரிடம் கண்ணியமாகப் பழக வேண்டும். சரியான நேரத்திற்குப் பணிக்குச் செல்லுதல், அன்றாட அலுவல்களில் நேரம் தவறாமலிருத்தல், கண்ணியமான, பொருத்தமான உடை அணிதல், பேச்சில் கட்டுப்பாடு, பிறரைப் புண்படுத்தாத பேச்சு ஆகியவை நமது செல்வாக்கை உயர்த்தும்.

8. நமது பணி, நமது அலுவலகத் தேவைகள். நம்முடன் பணியாற்றுபவர்கள், மேலதிகாரிகள் ஆகியன பற்றிய விவரங்கள் விரல் நுனியில் இருக்கு மளவு விவரமாக அறிந்து வைத்திருக்க வேண்டும். இதற்காகக் கடும் உழைப்புத் தேவைப்படினும் தயங்க வேண்டாம்.

9. அலுகலகத்தில் நம்முடன் பணியாற்றுபவர்களும், தங்கள் பணி காரணமாக நமது அலுவலகத்திற்கு வருபவர்களும் நாம் நம்புவதற்குரியவர்கள் என்று நம்பும்படி நாம் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும்.

10. பணியில் தோல்வியும் தவறுகளும் நிகழ்வது சகஜம், அதற்காக நாம் முயற்சியைக் கைவிடக்கூடாது. தொய்வு ஏற்பட்டாலும் தாமதமானாலும் எடுத்த காரியத்தை முடித்து விட வேண்டும். நமது கடமையில் நமக்கு இவ்வளவு பிடிப்பு இருந்தால் வெற்றி நம்மைத் தேடிவந்து பிடித்துக் கொள்ளும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 1997

சுதந்திர பொன்விழா ஆண்டு ; நினைவுகள்.
பணம் எப்படிச் செலவு செய்ய வேண்டும்…?
Promise only what you van deliver, then deliver more than your
கவிதை பிரியர்களுக்கும் ஆங்கிலம் பயில்பவர்களுக்கும்
கோபத்தை வெல்லுங்கள்
நட்பு என்றால்………..
மனக்கதவு
அமெரிக்கர்கள் புத்தசாலிகள்
கல்விமீது கண் வைப்போம்
உங்கள் சிந்தனைக்கு
பத்துக் கட்டளைகள்
சிந்தனைத் துளிகள்
சாதனை அத்தியாயத்தை எழுது
எண்ணமே வாழ்க்கை
பொது மக்களின் பார்வையில் அரசியல்
மரம் நடும் நிகழ்ச்சி
'' செய்வன திருந்தச் செய் ''
அன்னைக்கு அஞ்சலி
ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்
' உழைக்காமல் உண்பவர்கள் திருடர்கள் '
தன்னம்பிக்கை இதழ் நடத்தும்