Home » Articles » பிரச்சினைகளைச் சமாளியுங்கள்

 
பிரச்சினைகளைச் சமாளியுங்கள்


சஞ்சய்குமார்
Author:

மனிதனாகப் பிறந்த எல்லோருக்குமே பிரச்சினைகள் இருக்கின்றன. அளவுக்கு மீறி பருமனாகிவிட்ட உடம்பு, மேலதிகாரியின் தொல்லை, வேலையில்லாத் திண்டாடம், இப்படி நம் ஒவ்வொருவருக்கும் அவரவர் நிலைக்குத் தகுந்தபடி பிரச்சினைகள்!

எந்த பிரச்சினைக்குமே ஆயுசு ரொம்பக் கம்மி. அதே போல எந்தப் பிரச்சினைக்குமே இரண்டு பக்கங்கள் உண்டு. பிரச்சினைகளால் எவ்வளவுக்கெவ்வளவு அபாயமோ, அவ்வளவுக்கவ்வளவு அவற்றில் வாய்ப்பும் இருக்கலாம். ஒருவரது பிரச்சினையில், இன்னொருவரின் வாய்ப்பும் இருக்கலாம். யோசித்துப் பாருங்கள்!

ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் எலிகள் கொடுக்கிற பிரச்சினை எவ்வளவு பெரிசு…? ஆனால், அந்தப் பிரச்சினையில்தானே எலிப்பொறி செய்பவரின் வாய்ப்பு இருக்கிறது? எனவே உங்களுக்கு ஒரு பிரச்சினை வரும்போது அதன் அபாயமான பக்கத்தை மட்டும் பார்த்து அரண்டு விடாதீர்கள். கொஞ்சம் நிதானமாக யோசியுங்கள். அதிலேயே உங்களுக்கு வாய்ப்பும் புதைந்திருக்கலாம்.

ஒவ்வொரு பிரச்சினைக்கும், உங்களை முழுசாகப் புரட்டிப் போட்டு இருக்கிறது. மறந்து விடாதீர்கள். நீங்கள் பிரச்சினையை எப்படி எதிர்நோக்குகிறீர்கள் என்பதை வைத்துதான் உங்களது புதுத் தோற்றமே அமையும். உங்கள் பிரச்சினை உங்களை எந்த மாதிரி மாற்றப் போகிறது என்பதை தீர்மானிக்க வேண்டியவர் நீங்கள் தான்!

நீங்கள் அதை தைரியமாக எதிர்கொண்டு, நம்பிக்கையோடு ஒரு கை பார்க்கலாம். அல்லது அதைப் பார்த்து மிரண்டு போய், நெகடிவ் யோசனையிலேயே அமிழ்ந்து போய்விடலாம். இரண்டில் எது உங்கள் வழி? அந்த வழிதான் உங்கள் வருங்காலத்தைத் தீர்மானிக்கும்.

பிரச்சினைகளை எப்படித்தான் சமாளிப்பது…?

சில வழிகளைப் பார்க்கலாம். உதாரணமாக உடல் பருமனாகி விட்டதுதான் உங்கள் பிரச்சினை என்றால்

“அப்படி என்ன நான் பெரிசா குண்டாயிட்டேன்? தொப்பை கூட நார்மல்தான்!” என்று சப்பக் கட்டு கட்டாதீர்கள். எப்படிப் பிரச்சினையைப் பற்றிப் பெரிசாக்க் கற்பன பண்ணிக் கொண்டு திகலடையக் கூடாதோ அதே போல் குறைவாக மதிப்பிடவும் கூடாது. இது முன்னதை விட மோசமான அணுகுமுறை. நீங்கள் வேலையில்லாமல் இருப்பவராக இருக்கலாம். அதற்காக, “இந்தச் சமுதாயமே என்னைப் புறக்கணிக்கிறது. நான் ஒரு பாவப்பட்ட ஜென்ம்ம். என்னால் எல்லோருக்கும் பாரம்..” என்றெல்லாம் நீங்கள் பிரச்சினையைப் பெரிசு பண்ணிக்கொண்டு புலம்ப வேண்டாம்.

உங்களது பிரச்சினைகள் தானாகவே தீர்ந்து விடும் என்று ஒரு போதும்ந காத்திருக்காதீர்கள். பொறுமையாயிருப்பதற்கான நேரமும், காலம்ம் இது அல்ல. புரிந்து கொள்ளுங்கள். இது உங்களது பிரச்சினை. தொப்பை விஷயமாக இருந்தாலும் அதை நீங்கள்தான் சமாளத்து ஜெயிக்க வேண்டும். வேறு யாரும் உங்களுக்காக அதை செய்யப்போவதில்லை.

உங்களது பிரச்சினைகளை நீங்களாகவே அதிகப்படுத்திக் கொள்ளாதீர்கள். பூமியை ஒரு நொடியில் நரகமாக்கி விடுகிற சக்தி ஒரே ஒரு உணர்ச்சிக்குத்தான் உண்டு. அது தன்னிரக்கம். தன்னிரக்கம், பொறாமை, வெறுப்பு, கோபம் குற்றம் சொல்லும் மனப்பான்மை, நம்பிக்கையிழப்பு இவையெல்லாம் ஒன்றுசேர்ந்துவிட்டால் உங்கள் பிரச்சினையை நீங்கள் தீர்ப்பதற்கப் பதிலாக, அது உங்களைத் தீர்த்துவிடும்.

மனசை எப்போதும் வெளிச்சமாக வைத்திருங்கள். ஐடியாக்களைக் குவித்துத் தள்ளும் பட்டறையாக அறிவைப் பயிற்சி செய்யுங்கள். உங்களுக்கு ஒன்றுதெரியுமா? இந்த உலகத்தில் ஏழ்மை, பஞ்சம், பசி, பட்டினி, தோல்விகள் எல்லாற்றுக்கும் காரணம் பணப் பற்றாக்குறை இல்லை. ஐடியா பற்றாக் குறைதான்!

நம்பிக்கை மிகுந்த உங்கள் ஐடியாக்களுக்கு ஒரு நோக்கம் கொடுங்கள். பிறகு மற்றவர்களை கவர்ந்திழுங்கள். உங்களை அற்புதமாக வெளிப்படுத்திக்காட்டுங்கள். தூண்டில் முள்ளின் இரையைத் தேடி மீன் வருமே, அது பல உங்களைத் தேடி உங்கள் வற்றி வேகமாக வரும்.

உங்களது முயற்சியின் போது உங்களுக்குச் சில கதவுகள் அடைக்கப்படலாம். நினைவில் கொள்ளுங்கள்.. வாழ்க்கையில் ஒரு கதவு அடைபடும்போது இன்னொரு கதவு நிச்சயமாகத் திறக்கத் தொடங்கியிருக்கும். உங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் போதே பாசிடிவ்வா வார்த்தைகளாகப் பயன்படுத்தப் பழகுங்கள்.. ‘அய்யோ… ‘ , ‘அச்சச்சோ..’, ‘அழிஞ்சுப் போச்சு..’, ‘எல்லாமே காலி’ என்ற தாழ்வாகப் பேசுவதைத்தவிர்த்து விடுங்கள்.

எல்லாவற்றிலும், எதையாவது குற்றம் சொல்வதையே பழக்கமாக்க் கொண்டு சிடுமூஞ்சிகளைப் பார்த்தால், பிளேக் நோயைப்பார்த்ததுபோலப் பதறிக்கொண்டு விலகி விடுங்கள்.

“உணர்ச்சியின் உச்சக்கட்டத்தில் இருக்கும் போது, திடீரென முடிவு எடுக்காதீர்கள். அவை பரிச்சினைகளை இன்னும் அதிகமாக்குமே தவிர, தீர்வு எதுவும் அளிக்காது!”

(துன்ப நினைவுகள், சோர்வு, பயம் இவற்றில் ஆழ்ந்த போய்க்கிடக்கும் மனிதர்களின் அறிவிலும், சிந்தனையிலும் புது ரதம் பாய்ச்சும் டாக்டர் ராபர்ட் எச்ஷூல்லரின் “Though Times Never Last, But Tough People do….!” என்ற புத்தகத்திலிருந்து …)

போ. சஞ்சய் குமார்

திருமங்கலம, சென்னை – 40


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 1997

சிந்தனைத் துளிகள்
சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
சிக்கனம் தேவை, இக்கணம்
பிரச்சினைகளைச் சமாளியுங்கள்
இதைப்படித்து விட்டு நீங்கள் சிரிக்கா விட்டால்….
ஆன்மீகம் என்பது…..
முயற்சி திருவினையாக்கும்
நில், கவனி, செல்
முன்னாள் கடின உழைப்பாளர்கள் இன்றைய செல்வந்தர்கள்
நவபாரத சிற்பிகள்
இதைப் படித்த பிறகு உங்களுக்கு எப்படி இருக்கிறது?
வெற்றி உன் கையில்
கம்ப்யூட்டரால் சிரிக்க முடியுமா?
மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள்
முன்னேற்றப் பாதை
நம் பாரத நாட்டில் 'நோபல் பரிசு' பெற்றவர்கள்.
பிரச்சனைகளை வாய்ப்பாக மாற்றுவது எப்படி?
என் கேள்விக்கு என்ன பதில்?
இல.செ.க. வின் சிந்தனைகள்