Home » Articles » நில், கவனி, செல்

 
நில், கவனி, செல்


ஸ்ரீதரன் என்
Author:

டாக்டர் என். ஸ்ரீ தரன்

நமது வாழ்க்கை முரணப்பாடுகள் நிறைந்ததாகும். நாம் நன்கு சிந்தித்து, திட்டமிட்டு, எவ்வளவு எச்சரிக்கையுடன் ஒரு செயலை மேற்கொடாலும் அதில் தோல்வி உண்டாவதற்கும் சாத்தியமுள்ளது. இதனால் நாம் பாதிக்கப்படுகிறோம். எவ்வவளு தோல்வி என்பதைப்பொறுத்து இந்தப்பாதிப்பு கூடுதலாகவோர குறைவாகவோ அமைகிறது.

முழு வெற்றியோ, முழுத் தோல்வியோ யாரேனும் ஒன்றிரண்டு பேர்களுக்கு ஏற்படும். தேர்வில் ஒருவர் நூறு மதிப்பெண் வாங்கியிருப்பார். இன்னொருவருக்குப் பூஜ்ஜியம் கிடைத்திருக்கும். மற்றவர்கள் வெற்றி மதிப்பெண்களில் பல நிலைகளிலே இருப்பார்கள்.

தேர்வில் ஒன்றும் எழுதாவன் பூஜ்ஜியம் வாங்குவான். நாம் எவ்வளவு விடை எழுதுகிறோமோ அதற்கேற்ப மதிப்பெண் உயருகிறது. ஒரு சிக்கலில் நாம் சும்மா இருந்துவிட்டால், தோல்வி நிச்சயம். அப்படியின்றி நாம் எவ்வளவு முயற்சிக்கிறோமோ அதன் பலனாக ஓரளவாவது நிலைமை சீரடையும்.

வெற்றி, தோல்வி என்பவைகூட ஒரு நிகழ்ச்சிக்கு நாம் சூட்டும் பெயர் மட்டும்தான். நமது ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு. அது வெற்றியா, தோல்வியா என்பது பற்றிய நமது மதிப்பீடு ஒருவிதமாகும், சமூகத்தின் கருத்துப எதிர்காலத்தின் தீர்ப்பு ஆகியவை வெவ்வேறாகவும் இருக்கக்கூடும்.

நாம் நமக்குள்ள கடமையை ஒழுங்காகவும் முழு விருப்பத்துடனும் புரிதல் வேண்டும். நம்மிடமுள்ள திறமையைப் பூரணமாக வெளிக்கொணர வேண்டும். நமக்கு அந்த அளவிற்கு வாய்ப்பும் உரிமையும் உள்ளன. “செயலின் இப்பகுதியை மட்டும் கவனி. பலனைப் பற்றி நினைத்துக்கொண்டு உன் கவனம் சிதறிப் போகும்படிச் செய்யாதேம என்கிறார் கண்ணன் கீதையில் (2:47)

நாம் முழு மனதுடன், முழுத் திறமையுடன் நமது கடமையைச் செய்தால் பின்வரும் பலன்களின் ஒன்று நிகழும்.

1. வெற்றி ஏற்படும். அதாவது சிக்கல் தீரும்.

2. தோல்வி ஏற்படும். ஆனாலும், நம்மாலானதைச் செய்து பார்த்துவிட்டோம். நம் மேல் தவறில்லை என்ற திருப்தி உணர்வு மனத்தில் பரவியிருக்கும்.

3. நாம் முயற்சித்தோம். அதனால் ஒரு விளைவு ஏற்பட்டது. அது வெற்றியோ, தோல்வியோ என்பது தெளிவாகப் புரியவில்லை. இந்நிலைமையில் அந்த விளைவிற்கு வெற்றி அல்லது தோல்வி என்று பெயர் சூட்டாமல் அப்படியே ஏற்பம் என்று பொறுமையாக இருத்தல்.

தோல்வி மனப்பான்மையும் தோல்வியை ஏற்கும் மனப்பக்குவமும் வெவ்வேறானவை. தோல்வி மனப்பான்மை என்பது எதிலும் நமக்குத் தோல்வியே ஏற்படும் என்று முடிவு செய்துகொண்டு முயற்சியே எடுக்காமல் இருப்பது அல்லது அரைகுறையான முயற்சி செய்வதையே குறிப்பிடுகிறது.

இதற்கு மாறாக, நாம், எடுத்த காரியம், யாவினும் வெற்றி என்ற நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். அப்படியும் தோல்வி ஏற்படின் அதைகால், அரை அல்லமு முக்கால் வெற்றி என்று கருதி தேற்றிக்கொள்ள வேண்டும். “இவர் எந்த முயற்சியும் செய்யாமல் இருந்து விட்டார்” என்று உலகம் நம்மைத் தூற்ற இடம் தராமல் செய்து விட்டால் அதுவும் ஒருவகையில் வெற்றிதான். பலனில் கவனம் செலுத்தாதே என்று கட்டளையிடுகின்ற கண்ணபிரான். அதே சுலோகத்தில் “பணி புரியாமல் சும்மாவும் இருந்துவிடாதேம என்று எச்சரிக்கிறார்.

பயணத்தைத் தொடங்காதவன் இருந்த இடத்திலேயே இருப்பான். பயணத்தை நடுவில் கைவிட்டவன் மீண்டும் பிறப்பட்ட இடத்திற்கே திரும்பிவிடுவான். ஆனால், இடையிடையே ஓய்வெடுத்தாலும், விட்டுவிட்டாவது தொடர்ந்து பயணிப்பவன் நாளுக்கு நாள் அதிக முன்னேற்றம் கண்டு, ஒரு நாள் தனது லட்சியத்தைச் சென்றடைவான்.

சாலையில் சில இடங்களில் நாம், “நில் – கவனி – செல்” என்னும் போக்குவரத்து அறிவிப்பைக் காணலாம். அது நம்மைத் தடுக்கவில்லை’ திரும்பிப்போகச் சொல்லவில்லை’ சற்று தாமதிக்கச்சொல்கிறது.

அதுபோல் தோல்வியும் ஓர் அறிவிப்புதான். அது நம்மை நிதானிக்கச் சொல்கிறது. இடை வெளி தருகிறது. இவ்வாறு ஓய்வெடுக்கும் இடைவேளையில் நாம் நம்மைப் புதுப்பித்துக்கொண்டு, பயணத்தைத் தொடரத் தயாராகிவிட வேண்டும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 1997

சிந்தனைத் துளிகள்
சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
சிக்கனம் தேவை, இக்கணம்
பிரச்சினைகளைச் சமாளியுங்கள்
இதைப்படித்து விட்டு நீங்கள் சிரிக்கா விட்டால்….
ஆன்மீகம் என்பது…..
முயற்சி திருவினையாக்கும்
நில், கவனி, செல்
முன்னாள் கடின உழைப்பாளர்கள் இன்றைய செல்வந்தர்கள்
நவபாரத சிற்பிகள்
இதைப் படித்த பிறகு உங்களுக்கு எப்படி இருக்கிறது?
வெற்றி உன் கையில்
கம்ப்யூட்டரால் சிரிக்க முடியுமா?
மிகையான தூக்கமும் சோம்பலும் நினைவாற்றலின் எதிரிகள்
முன்னேற்றப் பாதை
நம் பாரத நாட்டில் 'நோபல் பரிசு' பெற்றவர்கள்.
பிரச்சனைகளை வாய்ப்பாக மாற்றுவது எப்படி?
என் கேள்விக்கு என்ன பதில்?
இல.செ.க. வின் சிந்தனைகள்