Home » Articles » உழைப்பின் உன்னதம்

 
உழைப்பின் உன்னதம்


பச்சையப்பன் மு. த
Author:

வேறு எந்த நாட்டுக்கும் கிடைக்காத ஒரு பெருமை இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது. இல்லையன்றால், பெரிய கடல் பரப்பையும், சூரிய ஒளியையும் இத்தனிப் பெரும் நாடு பெற்றிருக்குமா? என்று ஒரு மேலை நாட்டு அறிஞர் கூறினார். எல்லா வளங்கள் இருந்தும் வளமான வாழ்க்கை தான் இல்லை. ஏன்? மக்கள் தொகைப்பெருக்கம. விலை வாசி ஏற்றம். வேலையில்லாத் திண்டாட்டம் என்று அரசியல் தலைவர்கள் காரணம் கூறுவார்கள்.

ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியரான எட்வர்ட் டெமிங், ” ஒரு நாட்டை முன்னுக்குக கொண்டு வருபவை அந்த நாட்டின் வளம அல்ல மனித வளமும் – நாட்டை நடத்திச் செல்லும் நிர்வாகத் திறனும்தான் என்று கூறுகிறார் அதுத உண்மை தான். கனிம வளமோ, இயற்கை வளம இல்லாது இரண்டாவது உலகப் போரில் சாம்பலாகிவிட்ட ஜப்பான் அந்தச் சாம்பலிருந்து தட்டுத் தடுமாறி எழுந்து வந்து சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறது. இதற்குக் கடுமையான உழைப்பு தான் காரணம்.

மனித குலத்தையே வளமானதாக மாற்றக் கூடிய மூன்று மருந்துகள் இந்த உலகில் இருக்கின்றன.

அவை உழைப்பு நேர்மையான உழைப்பு, என்று கூறுகிறார் கார்னால்ல் என்ற பேராசிரியர். மனிதனுக்கு இறைவன் கொடுத்த வரம் உஐப்பு என்ற மூலதனம். இதை முழுமையாகப் பயன்படுத்தியவன் மறைந்தும் நிலையாக நிற்கிறான். நாம் எப்போதும் இன்பமாக இருக்க வேண்டும் என்றால், கடுமையாக உழைக்க வேண்டும். உழைப்பின் உன்னத்த்தை எறும்புகளிடமிருந்தும் தேனீகளிடமிருந்தும் நாம கற்றுக்கொள்ள வேண்டும். ‘உழைப்பு, உழைப்பு என்கிறார்களே அது என்ன?’ என்று அறிஞர் எம்.ஃபெரிரி என்பவரிடம் நண்பர் ஒருவர் கேட்டார். அதற்கு அவர், “நமக்குப் பிடித்தனாதைவிட, நமக்குத் தரப்பட்ட பணியில் முழு மூச்சுடன் ஈடுபடுகிறோமோ அது தான் உழைப்பு’ என்கிறார்.

– மு.த. பச்சையப்பன்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 1997

உனக்கு நீதான்
ஆளுமைத்திறன் மேம்பாடு
எண்ணங்கள் என்ன செய்யும்?
நாம் நாமாகவே இருப்போம்
புதையல்
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க. வின் சிந்தனைகள்
நல்ல புத்தகங்களை தேர்ந்தெடுக்க ஜான் ரஸ்கின் கூறும் வழி
முன்னேற்றத்தின் முதல் எதிரி
சிந்தனைத்துளி
"QUALITY OF WORK"
நேதாஜி விருது
குடி குடியைக் கெடுக்கும்?
உழைக்கும் மனப்பான்மை குறைந்து வருகிறது
உழைப்பின் உன்னதம்
முன்னேற்றப் பாதை