Home » Articles » தற்கொலை தடுப்பு ஆலோசனை சேவை

 
தற்கொலை தடுப்பு ஆலோசனை சேவை


admin
Author:

(தொலைபேசி எண் 106)

உலகம் முழுவதும் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை பெருவருகிறது. ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு இன்றி பலரும் தற்கொலையை ஒரு தீர்வாக நாடுகிறார்கள். இந்தியாவில் மாணரகள்தேர்வுகளை நினைத்து பயப்படுகிறார்கள். தேர்வில் தோல்வியடைத்தால் தற்கொலைக்குத் துணிகிறார்கள். மேலும் காதல்தோல்வி, கடன் தொல்லை, வேலையின்மை, வறுமை, மற்றும் நோய் ஆகிய காரணங்களுக்காவும் தற்கொலையை நாடுகிறார்கள்.

தற்கொலை செய்து கொள்ளும் முன் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அந்த ஒரு நிமிட சிந்தனையில் தெளிவு ஏற்பட்டாலே அவர்களை அம்முயற்சியிலிருந்து விடுவித்து விடலாம்.

கோவையில் எங்கிருந்து 106 என்ற தொலைபேசி எண்ணைச் சுற்றினாலும் இம்மையத்தோடு தொர்டர்பு கொண்டு இலவச ஆலோசனை பெறலாம். எனினும் எவ்வளவு நேரம் பேசினாலும் ஒரு காலுக்கு (one call) ஆன கட்டணமே தர வேண்டியிருக்கும். தகுதி வாய்ந்த மனநல ஆலோசகர்கள் ஆலோசனை அளிப்பார்கள். பேசுபவருடைய பெயரும், முகவரியும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இம்மகத்தான சேவை, கோவை வரதராஜபுரம், காமராஜர் சாலையில் உள்ள கஸ்தூரிபா காந்தி குடிநோய் சிகிச்சை மறு வாழ்வு ஆராய்ச்சி மையத்தில் 17.4.97 அன்று துவங்கப்பட்டது.

சக்தி அறக்கட்டளையின் செயலர் திரு. க.பெ. பழனிசாமி B.Com அவர்கள் அனைவரையும் வர வேற்றுப் பேசினார். தமிழ்நாடு தொலை தொடர்பு வட்டத் தலைமைப் பொது மேலாளர் திரு. எஸ். இராஜ கோபாலன் அவர்கள் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். கோவை தொலைத் தொடர்பு மாவட்டப் பொது மேலாளர் திரு. ராஜராம் அவர்கள் இச்சேவையை விவரித்துப் பேசினார். முடிவில் மையத்தின் மருத்து இயக்குனரும் KMCH மருத்துவ மனையின் மனநல மருந்து வருமான Dr. டி. சீனிவாசன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

இம்மகத்தான சேவை மூலம் தற்கொலை செய்து கொள்வோரைத் தடுத்து, மனித உயிர்களையும், மனித வளங்களையும் மேம்படுத்தும் பணியில் தங்களை அர்பணித்துக்கொண்டுள்ள, மனித தெய்வங்களைத் தன்னம்பிக்கை மகிழ்ச்சியுடன் பாராட்டுவதோடன்றி அவர்களின் பணி என்றென்றும் சிறக்க வாழ்த்துகிறது.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1997

தற்கொலை தடுப்பு ஆலோசனை சேவை
முன்னேற்றப் பாதை
கண்ணாடியில் தெரிபவன்
"தன்னம்பிக்கை" மாத இதழும், டாக்டர் இல.செ.கந்தசாமி நினைவு
ஆளுமைத்திறன் மேம்பாடு
வாசகர் கடிதம்
முன்னேற்றச் சிந்தனைகள்
தேவையெல்லாம்…
முயன்றால் வெற்றி நம் கைகளில்
சுவாமி விவேகானந்தர் வாக்கு
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க. வின் சிந்தனைகள்
சிந்தனைக் கருத்துக்கள்
முழு வாழ்க்கை என்பது….