Home » Articles » வாசகர் கடிதம்

 
வாசகர் கடிதம்


admin
Author:

நம்முடைய தன்னம்பிக்கையை அறிய நம்மிடமே நேரடியாக கேள்விகளைக் கேட்டு, மதிப் பெண்களைப்போட்டு, வெற்றிப் பாதைக்கு நம்பிக்கையோடு அழைத்து செல்லும் “முன்னேற்றப் பாதை” அனைவராலும் பாராட்டப்பெறும் ஒன்று.

அ. கிருஷ்ணகுமார்,
பு. புளியம்பட்டி.

வெற்றியாளர்களை உருவாக்கும் 10 அம்சங்கள் பயனுள்ள செய்தி, தொடர்ந்து இதுபோன்ற செய்திகளை பட்டியலிட்டு தெரிவித்தால், தொகுத்து வைத்துப் பயன்படுத்தலாம்.

மு. குமாரவேலு, கோவை – 42

புதிய, இளம் பேச்சாளர்களுக்கும், உறுதியான ழி காட்டதலாக இருகிறது ஆளுமைத்திறன் மேம்பாடு தொடர். டாக்டர் பெரு. மதியழகனுக்கும் ஆசிரியர் குழுவிற்கும் நன்றியும் பாராட்டுக்களும்.

க. முருகன், சேலம் – 5.

ஏப்ரல்’97 தன்னம்பிக்கை இதழ் கிடைத்தது. அட்டை டூ அட்டை பயனுள்ள செய்திகள். இல.செ.க. வின் எண்ணங்கள் ஈடேற ஆசிரியர் குழுவின் தொடர்ந்த முயற்சிக்கு பாராட்டுக்கள். நினைவு நாள் நிகழ்ச்சி போன்ற கருத்தரங்குகளை வெளியூர்களிலும் நடத்தினால் நல்லது.

ந. மந்திரியப்பன், திருப்பூர்.

அம்சப்பிரியாவன் கவிதை அருமை. கவிஞர்கள் சக்திதாசனுக்கும் பிரம்மபுத்திரனுக்கும் பாராட்டுகள் ஏன் சார் கவிதைப் பக்கங்களைக் குறைத்துக் கொண்டீர்?
ச. இராமச்சந்திரன், தரும்புரி.

“பெற்றோர் கவனத்திற்கு” நல்ல பயனுள்ள செய்தி. தொடர்ந்து இது போன்ற செய்திகளை வெளியிட்டால் இதழ் இன்னும் பொலிவு பெறும்.

க. மூர்த்தி,
பெரிய நாயக்கன்பாளையம்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 1997

தற்கொலை தடுப்பு ஆலோசனை சேவை
முன்னேற்றப் பாதை
கண்ணாடியில் தெரிபவன்
"தன்னம்பிக்கை" மாத இதழும், டாக்டர் இல.செ.கந்தசாமி நினைவு
ஆளுமைத்திறன் மேம்பாடு
வாசகர் கடிதம்
முன்னேற்றச் சிந்தனைகள்
தேவையெல்லாம்…
முயன்றால் வெற்றி நம் கைகளில்
சுவாமி விவேகானந்தர் வாக்கு
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க. வின் சிந்தனைகள்
சிந்தனைக் கருத்துக்கள்
முழு வாழ்க்கை என்பது….