Home » Articles » உங்கள் மதிப்பை அதிகப்படுத்தும் வழி

 
உங்கள் மதிப்பை அதிகப்படுத்தும் வழி


மகாதேவன் ஆர்
Author:

– ஆர். மகாதேவன்

அலுவலகத்தில் எவ்வளவு தான் மாடாய் உழைத்தாலும் மேலதிகாரிகளும், சக ஊழியர்களும் உங்களை மதிக்க வில்லையா…

கவலைப்படாமல் கீழ்க்காணும் வழிமுறைகளைக் கடைபிடித்துத்தான் பாருங்களேன்.

(1) உங்களுடைய அலுவலகத்துக்கு சற்று முன்கூட்டியே போவது நல்லது. அன்றைய தினம் செய்ய வேண்டிய வேலைகளை ஒருசிறிய காகித்தில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். பிறகுமுக்கியமானதை முதலில் தொடங்குங்கள்.

ஒவ்வொரு வேலையையும் அதை எப்போது முடிக்க வேண்டும் என்பதை தீர்மானம் செய்து கொள்ளுங்ள்ள். எப்பாடுபட்டாலும் அதன்படி முடிக்க உறுதி கொள்ளுங்கள்.
மேஜையை ஒழுங்குபடுத்துவது, பென்சில் சீவுவது, தினசரித் தாளைப் புரட்டுவது, காபி அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு எப்படி இவ்வளவு நேரம் ஓடிவிட்டது என்று வியப்படையாதீர்கள்.

(4) உங்கள் அலுவலகத்திலுள்ள நகல் எடுக்கும் இயந்திரம், டெலிபோன் முதலியவைகளை தேவையான அளவுக்கே பயன்படுத்துங்கள்.

(5) உங்களுடைய டெலிபோன், பேச்சு சிறியதாகவும், பயனுள்ளதாகும் இருக்கட்டும். முக்கியமான விசயமாகயிருந்தாலும் முதலில் அதை காகித்த்தில் குறித்துக்கொண்டு பேசுவது நல்லது. டேலிபோனில் அவர் சொல்லும் பதிலை அந்தக் காகித்ததிலேயே குறித்துக் கொள்வது நல்லது.

(6) வேலையைச் செய்து முடிக்க பழைய முறை ஒன்றிருந்தாலும் நீங்களே யோசித்து நன்மை பயக்கும் புதிய முறையைக் கண்டு பிடியுங்களேன். ஆழ்ந்து சிந்தித்தால் நிச்சயம் கிடைத்து விடும்.

(7) நீங்கள் கடித்தைப் படிக்கும்போது ஒரு குறிப்பேட்டில் எழுதி வையுங்கள். பின்னர் அதைப் பார்த்து நீங்களோ அல்லது பிறரோ பதில் எழுத வசதியாக இருக்கும்.

(8) உங்களுடைய நேத்தை முழுமையாகப் பயன்படுத்துங்கள். ரயிலுக்காக காத்திருக்கும் நேரத்தை முழுமையாகப் பயன்படுத்துங்கள். ரயிலுக்காக காத்திருக்கும் நேரம், தனியாக உண்ணும் நேரம், இவகளின் போது உங்களுடைய பிரச்சினைகளைப் பற்றி சிந்திக்கலாம்.

(9) எவ்வளவு நேரம் எந்தக் காரியத்திற்காக வீணாக்கினீர்கள் என்று தினமும் மாலை உங்கள் தனிப்பட குறிப்பேட்டில் எழுதிக்கொள்ளுங்கள். மீண்டும் அவ்வாறு வீணாகாமலிருக்க அது உதவும்.

(10) ஒரு வேலையைத் தொடங்கும் பொழுது, அதன் தகுதியை பண அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்த்து ஆரம்பியுங்களேன். உங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு ஊதியம் தரப்படுகிறது என்பதைக் கணக்கிட இது உதவும்.

(11) சக ஊழியர்களிடம் கண்ணியமாக பழகுங்கள். அவர்களுக்கு மரியாதை கொடுத்து நங்கள் மரியாதை பெற்றுக்கொள்ளுங்கள்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 1997

உங்கள் மதிப்பை அதிகப்படுத்தும் வழி
கவலையை போக்க எட்டு வழிகள்
ஆளுமைத்திறன் மேம்பாடு
நண்பனே!
கவிதை
மனித பலவீனங்கள்
வாசகர் கடிதம்
வெற்றியாளர்களை உருவாக்கும் 10 அம்சங்கள்
அவர்களும் நீயும்
முன்னேற்றப் பாதை
பெற்றோர் கவனத்திற்கு
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க வின் சிந்தனைகள்