Home » Articles » வாசகர் கடிதம்

 
வாசகர் கடிதம்


admin
Author:

மார்ச் இதழில் கவிதைகள் சூப்பர். டாக்டர் ஜி. இராமநாதன் அவர்களின் உங்களுக்கு தன்னம்பிக்கை உண்டா? என்ற கேள்வி எங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது. நன்றி, தன்னம்பிக்கை இதழ் தமிழ்போல் தழைத்து வளர வேண்டும்.

T. ஆறுமுகம், கோபி.

இல.செ.கவின் தன்னம்பிக்கை மார்ச் இதழ் கண்டேன். டாக்டர் திரு. சண்முகவேல், காயத்ரி இயற்கை மருத்துவமனை அவர்களின் வாசகங்கள் படித்து பலன் அடையும் விதத்தில் உள்ளது. வளர்க டாக்டரின் சேவை. இதுபோல் அறிவுரைகளை அடிக்கடி வழங்கவும்.

N. ஜெனார்தன்ன், சேலம் – 2.

“அமெரிக்காவிற்கு சவால் விடும் மலேசியா” கட்டுரை முன்னேறத் துடிக்கும் ஒவ்வொரு தனிமனிதனும், நிர்வாகத்தினரும், அரசு அமைப்பும், கவனத்தில் கொள்ள வேண்டிய பல விசயங்களை உள்ளடக்கியிருக்கிறது. வெட்டி அரட்டை, வீணான பொழுதுபோக்கு, மதியத்தூக்கம், இப்படி… எப்படியெல்லாம் நம் பொழுதுகள் வீணாகிக்கொண்டுள்ளன. உணர்ந்து செயல்பட எப்போதும் எல்லோரும் தெரிந்திடப் போகின்றோம். பேச்சைக் குறைப்பதும், செயலில் ஈடுபடுவதுமே நாம் சாதிக்க வேண்டியவற்றை செய்து முடிக்க உந்துகோலாக இருக்கும்.

ஆர்.இரத்தினசாமி M.Sc., M.Ed,
பு. புளியம்பட்டி

ஆக்கமும், ஊக்கமும் அளிக்கும் வகையிலான சிறு கவிதைகளை வெளியிட்ட தன்னம்பிக்கை இதழுக்கு எனது நன்றிகள். தன்னம்பிக்கை வாசிக்கும் அனைவருக்கும் தன்னம்பிக்கை விண்ணளவு உயரும் என்பதில் ஐயமில்லை. முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு உற்சாகமளிக்கும் ஊக்கக் கையேடு.
வ. தங்கவேல், பு. புளியம்பட்டி.

டாக்டர் ஜி. இராமநாதனின் “முன்னேற்றப் பாதை”, டாக்டர் பெரு. மதியழகனின், “ஆளுமைத் திறன் மேன்பாடு” மிகவும் நம்பிக்கை ஊட்டுவதாக இருந்தது. மேலும் ஒவ்வொரு பக்கங்களிலும் மிக முக்கியமான நல்ல கருத்துக்களை தாங்கி வந்தது.

எஸ். இராமலிங்கம்.
கோவை – 37.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 1997

உங்கள் மதிப்பை அதிகப்படுத்தும் வழி
கவலையை போக்க எட்டு வழிகள்
ஆளுமைத்திறன் மேம்பாடு
நண்பனே!
கவிதை
மனித பலவீனங்கள்
வாசகர் கடிதம்
வெற்றியாளர்களை உருவாக்கும் 10 அம்சங்கள்
அவர்களும் நீயும்
முன்னேற்றப் பாதை
பெற்றோர் கவனத்திற்கு
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க வின் சிந்தனைகள்